ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

உன் விழி தரும் வலி..!

உன் பார்வையை அம்பாகி என் இதயம் துளைக்கிறது
வலி தாங்க முடியாமல் தவிக்கிறேன் நான்
உன் சிரிப்பே அலையாகி அடித்துச்செல்கிறது என்னை
கரை சேரமுடியாமல் தத்தளிக்கிறேன் நான்
உன் மௌனமே தீயாகி சுட்டெரிக்கிறது என்னை
வெப்பம் தாங்கமுடியாமல் எரிந்து கொண்டிருக்கிறேன் நான்
நீ என்னை கொல்ல‌வில்லை என்ற போதும்
உன்னால் செத்துக்கொண்டுதன் இருக்கிறேன் நான்..!

புதன், ஆகஸ்ட் 26, 2009

பட்டுபுடவைக்கே பெருமை உன்னால்..!

என்றும் சுடிதாரில் பார்த்த உன்னை
முதல் முறையாக பட்டுபுடவையில்
பார்த்தவுடன் தான் தெரிந்து கொண்டேன்
ஏன் நெசவுத்தொழிலாளர்கள் தங்கள்
போராட்டத்தை திரும்ப பெற்றார்கள் என்று..!

வீதி உலா...!

சின்ன மீன்களை விட்டு விட்டு
பெரிய மீனுக்காய் காத்திருக்கும் கொக்கை போல
நானும் தினம் காத்திருக்கிறேன்
நீ நடந்து வரும் வீதியில்..!

மே மாதம்..!

உன்னை காணாததால்
என் கல்லூரி மரங்களும்
தன் இலையை உதிர்த்து
தற்கொலை செய்கிறதே
மே மாதத்தில்...!

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

காதல்....!

கத்தியின்றி ரத்தமின்றி
கண்களால் செய்யப்படும்
இதயமாற்று அறுவை சிகிச்சை..!எங்கே தொலைந்தேன்...?

என்னை நானே தேடுகிறேன்
எங்கே தொலைந்தேன் என்று
நான் தொலைந்தது உன்னுள்
என்பதை மறந்து...!

அன்புள்ள துபாய் கணவனுக்கு...!

அன்பே நீ அங்கு
சூரியனாய் சுடர்கிறாய்
உன் பிரிவு தானடா என்னை
வெயிலாய் சுடுகிறது...!

என்னவளே......!

இமைகள் எனும் கேமரவால் படம்பிடித்து
கண்கள் எனும் காந்தத்தால் என்னை கவர்ந்திழுத்து
அன்பு எனும் படை வீரர்கள் கொண்டு என்னை சிறை பிடித்து
இதயம் எனும் இருட்டறையில் அடைத்தவளே....!