செவ்வாய், டிசம்பர் 13, 2011

அவள்...(காதல் கவிதைகள்)

உந்தன் கனவுகளில்
தேடாதே ,
என்னை
நான் உன்னுடைய  நிஜம் ....

எனது சந்தோசம்
உனது புன்னகையில்
ஒளிந்திருக்கிறது ...

நிலா எனக்கு வடக்கே
உதிக்கிறது
அவள் வீடு
வடக்கு தெருவில் ...

காதலிக்கிறோம்
என்பதை விட
காதலிக்கபடுகிறோம்
என்பதே அழகு  ...! 

கண்களில் தொடக்கி
இதயத்தில் கலந்தால்
காதல் ....
இதயத்தில்  தொடக்கி
உயிரில் கலந்தாயடி
இதற்கு பெயர் என்ன ?

-
ரா சிவராஜன்