செவ்வாய், பிப்ரவரி 14, 2012

"இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்"


அன்று கையில் ஆயிரம் 
மலர்களுடனும் 
புன்னகையுடனும் 
அவளுக்கு வாழ்த்து சொல்ல
ஆசை எனக்கு ....

அவளோ எனக்கு
முன்னரே எழுந்து
எனக்கு முத்தமிட்டு
வாழ்த்து சொல்கிறாள் ...

"இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்"
                        " அன்பே "
ம்ம்ம்ம் , இன்று எங்களது திருமண நாள் ... :)

-

சிவராஜன் ரா 

செவ்வாய், டிசம்பர் 13, 2011

அவள்...(காதல் கவிதைகள்)

ந்தன் கனவுகளில்
தேடாதே ,
என்னை
நான் உன்னுடைய  நிஜம் ....

னது சந்தோசம்
உனது புன்னகையில்
ஒளிந்திருக்கிறது ...

நிலா எனக்கு வடக்கே
உதிக்கிறது
அவள் வீடு
வடக்கு தெருவில் ...

காதலிக்கிறோம்
என்பதை விட
காதலிக்கபடுகிறோம்
என்பதே அழகு  ...! 

ண்களில் தொடக்கி
இதயத்தில் கலந்தால்
காதல் ....
இதயத்தில்  தொடக்கி
உயிரில் கலந்தாயடி
இதற்கு பெயர் என்ன ?

-
ரா சிவராஜன்

சனி, அக்டோபர் 29, 2011

அன்பே . . .

ம்
திருமணதன்று
கைது செய்தேன்
உன்னை அன்பே
ஆனால்
நானல்லவோ 
உன்னிடம் கைதி
ஆகிப்போனேன்...


த்தனை
கொடி ஆண்கள்
இந்த உலகில்
சிலர் அழகு ,
சிலர் அறிவு
நீ அழகில்லை
நீ அறிவில்லை
அழகாய் இருக்கிறாய்
அறிவாய் இருக்கிறாய்
எனக்கு மட்டும் ....


காலையில்
சுட்டெரித்து
மாலையில் மயக்கும்
சூரியன் போல
நீயும் காலையில்
என்னை படுத்தி
மாலையில்
அணைக்கிறாய் ....




காலையில்
உன் மேல்
கோபம் என்றபோதும்
மாலையில் அது
மறைகிறதே
தாமரை இலை நீர் போல
இதற்கு பெயர்தான் காதலா
என் காதலா .....

நீயே
என் துக்கமும்
சந்தோசமும்
ஆகிப்போனாய்
உன் கை
பிடித்தது முதல் . . .



நீ
வரும் வரை
காத்திருந்து
கண்கள் பூத்து
போகின்றன
ஏன்  இந்த மலரை
வாட வைக்கிறாய் .....


ன்னை
உனக்கு
பிடித்து இருக்கிறதா
என்று நான் கேட்டபோது
நீ தந்த மௌனம்
என்னை கொன்றது ...

ன்
கண்கள்
நீரால் கரைந்த பொது
நீ தந்த முதல் முத்தம்
என்னை வென்றது .....



னதில்
உன்னையும்
வயிற்றில் உன்
குழந்தையையும்
சுமக்கின்றேன் காதலனே
வலிக்கவில்லை 
ஏனென்றால்
நீதானே
எப்போதும் என்னை
சுமக்கின்றாய் . . .



னக்கு
என்ன வேண்டும்
கேள் என்னிடம்
என் உயிரை தவிர
உனக்கு முன்னால்
சாகமாட்டேன்
நீ போன பிறகு
வாழவும் மாட்டேன் ....

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

காதல் கவிதைகள் ...!


 
கீற்று
கொட்டகை
பாவாடை தாவணி
அவள் எழுந்து சென்ற பின்
அவள் இருந்த இடத்தில்
சென்று அமர்ந்து கொண்டேன்
முதன் முதலாய் எனது
காதல் சொல்லப்பட்டது ....







 அவளை
காண்பதற்காகவே
முதல் வரிசையில்
போய்  நின்று
கொள்கிறேன்
ஒன்றும் தெரியாதவன்
போல அவள்
என்னை பார்கையில் . . .




 




புதிதாய்
வாங்கிய பேனா
என் கையப்பத்தை
மறந்து எழுதின
உந்தன் பெயரை ...







 



நான்
படித்த
கவிதைகளில்
மிகவும்
அழகானது
அவளின்
பெயர்தான்  ...






 



நானும்
ஒரு அன்றாடம் காச்சி
ஆகிப்போனேன்
உன்னை பார்க்காத
நாட்களில்
எனது கண்கள்
பசியருவதில்லை ....










வனோ
ஒருவனின்
கை பற்றி சென்றவளை
நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
தவிப்பதில் இருந்தே
உணர்கிறேன் ,
எனது காதலை...








து
இன்னும் நீளாதா
என்று நான்
ஏங்கி தவித்த பொது
முடிந்தது உந்தன்
முதல் முத்தம் . . .










யார்
சொன்னது சேலையை
பெண்கள் மட்டும்
அணிகிறார்கள் என்று
நானும் அணிகிறேன்
சேலையை
இரவில்
உன்னுடன் சேர்த்து ....

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

பப்பு கிளம்பிடான்யா..!


(ஒரு ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு இதை  நினைத்து  பார்த்து கொள்ளுங்கள் )  
இடம் : துபாய் , மணி :  5 :50 மாலை
(அப்படியே நம்ம கேமராவை அவுட் போகஸ் ல துபாய் யை வனத்தில் இருந்து காமிக்க   மெதுவா ஆரம்பிச்சு , அப்படியே வேகாத கூட்டி ஒரு ஜன்னல் வலிய போய்கிட்டு இருக்கு கேமரா, ஒரு இடத்தில் அது நிற்கிறது )

  அந்த ஒரு அரை முற்றிலும் குளிருட்ட பட்ட அரை அது ,  நெட்வொர்கிங் மிசின்கள், சர்வர், நெட்வொர்கிங்வாயர்கள் என் ஒரே ஹை டெக் நிறைந்து வழிகிறது , இருண்ட அரை அதில் மிசின் களில் இருந்து வந்த , சிறு சிறு ஒளியை தவிர வேறு எதுவும் இல்லை , அந்த மிசின் களுக்கு மத்தியில் ஒருவன் உட்கார்ந்து கொண்டே தூங்கி வலிந்து கொண்டு இருந்தான், இதுல குறட்டை சத்தம் வேறு , குர்ர்ர் குர்ர்ர் (குறட்டை விடுராராம்மாம்)    இவன்தான் நமது பப்பு ...  
(இதை எல்லாம் ஒரு சங்கர் படம் ரேஞ்சுக்கு நினைத்துகொள்ளுங்கள் பக்கியளா)

திடிரென ஒலிக்க ஆரம்பித்த தொலைபேசி , ஒற்றை கண்களை மட்டும் விழித்தான் பப்பு ( ஒரு நிமிடம் போருக்க முடியுமா நம்ம ஹீரோ என்திரிசுட்டறு ஒரு ஒபெனிங் சாங் போடுகிறேன் , இவன்  பேரை  சொன்னதும் பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும் ;! இவன்  உலகம்  தாண்டிய உயரம்  கொண்டதில் நிலவு  நிலவு  தலை  முட்டும் !, கவிஞர் திரு . வைரமுத்துவின் வரியை ஆட்டைய போட்டதுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் )  தொலை பேசியை எடுத்து பேச ஆரம்பித்தான் பப்பு , எதிர் முனையில் அவனது மேலாளர் பப்பு , வேகமாக எனது அறைக்கு வா , மேலாளர் அழைத்து விட்டார் , பாய்ந்து சென்றான் அப்படி நினைத்தால் அது உங்கள் தப்பு ,

அடி அசைந்து கொட்டாவி விட்டு கொண்டே , மாலை வணக்கம் தலை , பப்பு மேலாளருக்கு இல்லை , மேலாளர் பப்புவிற்கு போட்டார் , நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா பப்பு , மேலே பார்க்க ஆரம்பித்தான் பப்பு , பெருத்த முச்சு விட்டு கொண்டு , நான் கண்டிப்பா போய்தான் அகனும் , ( டேய் இது உனக்கே ஓவரா இல்ல , நீ எங்க போய் எந்த வெட்டி முறிக்க போற ) , உன்னை விடுவதற்கு எங்களுக்கு மனமே இல்லை பப்பு , உன்னை போல ஒருவன் எங்களுக்கு இனிமேல் கிடைக்க மாட்டன் பப்பு ( அப்பு நான் இது வரைக்கும் வேலையே பார்த்தது கிடையாது ,நீ என் இவ்வளவு பீலிங்க்ஸ் விடுற திரும்பி கொட்டாவி விட்டு கொண்டான் பப்பு),

இதில் ஒரு கையழுத்து போட்டு விட்டு போ பப்பு , இந்த கம்பெனி கான்ட்ராக்ட் முடிந்ததால் பப்பு இந்த கம்பெனி விட்டு வெளியே போகிறான் , இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு , பப்பு கிளம்பினான் நல்லபடியா போய் விட்டு வா பப்பு , ( இந்த இடத்துல உங்க காதுக்குள்ள லாலா லாலா லாலா அப்புடி ஒரு மியூசிக் வந்து கிட்டு இருக்கணும் ) மேலாளர் மற்றும் பப்புவின் கண்களில் கண்ணீர் , ( இங்கே விக்ரமன் படம் ரேஞ்சுக்கு நினைத்து கொள்ளுங்கள் அந்த லாலா லாலா மியூசிக் கூடவே ,  அட பாசகார பய பக்கியா , இம்ம்புட்டு பாசமாவாடா இருப்பிய ) ,

 இப்படி ஒரு அடிமையை விட்டு விட்டோமே என்று மேலாளருக்கு வருத்தம் , நம்மகிட்ட இருந்த ஒரே ஒரு அடிமை கம்பனியை விட்டுடமேனு பப்புவிற்கு வருத்தம் ....
தனது ஒப்பந்தத்தை தொடராமல் , வேலையை விட்டு விட்டு செல்ல ஆரம்பித்தான் பப்பு ...
 தென்பாண்டி   சீமையிலே .... தேரோடும் வீதியிலே ... மான் போல வந்தவனே... யார் அடிச்சாரோ ....

பப்புவின் பயணம் தொடரும் ....
The End .....
     

-
நமது வாழ்கையில் நிறைய பேர் வந்து செல்கின்றனர் , சிலரை பிடிக்கிறது , மிகவும் பிடிக்கிறது , ஒரு சிலரை உயிருக்கு உயிராக நேசிக்கவும் செய்கிறோம் , வாழ்கை செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்து கொண்டே இருந்த பொது அவர்களின் முக்கியத்துவமோ மதிப்போ நமக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் அனால் பிரிவு என்ற ஒன்று வரும் பொது மட்டுமே அவர்களின் உண்மையனா மதிப்பு நமக்கு தெரிய வரும் , இருந்த போதும் தனிப்பட்ட ஒரு ஆத்மாவின்  பயணம் தனிமையானதே யாரையும் சார்ந்து அது செல்வது இல்லை , இண்டர்நெட்டும் ஜி டால்க் இருக்கும் வரை நம்மள யாராலும் பிரிக்க முடியாது ,   இதுவரை இந்த தேசத்தில் ( அமீரகம் ) எனக்கு அன்பும் , பாசமும் தந்த எனது நண்பர்கள்  அனைவருக்கு நன்றி , இனி நமது அடுத்த பதிவு எனது தாயத்தில் இருந்து வெளிவரும், அனைவருக்கும் , அனைத்திற்கும் நன்றி ....    

 


 

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

பொர்ணமி நிலா...!





என்னோட பெயர் விஜய், அன்றைக்கு முதல் நாள் அலுவலகத்துக்கு சென்று இருந்தேன்  , எல்லோரை போலவும் பெருசா முன்னேரனும் , இது என்னோட ஆசை , உதவி மார்க்கெட்டிங் அதிகாரியாக பணியில் சேருகிறேன் , நான் ஜெயிக்கணும் ஜெயிப்பேன் இது எனது நம்பிக்கை , எனது இருக்கையில் அமர்ந்தேன் , எனது அருகில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள், ரொம்ப அழகா இருந்தால் , எனக்கு பெண்கள் மீது அதிக ஈடுபாடு   இல்லை , எனது கணினியில்  மூழ்கினேன்  , சிறிது நேரத்தில் என்னிடம் வந்தால் அந்த பெண் , தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் , அவள் பெயர் நிலா , அவள்தான் எனது துறை தலைவர் என்பது அவள் சொல்லித்தான் தெரியும்.


அவள் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள் , எவ்வளவு சிக்கலான கஷ்டமான நேரங்களிலும் அவள் முகத்தில் புண்ணகை நிறைந்தே இருக்கும் , யாரிடமும் அதிகம் பேசி எனக்கு பழக்கமில்லை , நானும் எனது கணினியும் தான் பேசிக்கொள்வோம் , நாட்கள் ஓடின கடினமாக உழைக்க ஆரம்பித்தேன் , மதிய வேளையில் தனியே அமர்ந்தே உணவு உண்பேன் , தனிமை எனக்கு பிடித்த ஒன்று , நிலா என்னை சில முறை அழைப்பாள்  மதிய சாப்பாடிற்கு , நான் எதையாவது சொல்லி அவளுடம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவேன் , என்னோடன் வேலை பார்த்த யாருடனும் நான் அதிகம் பேசுவதில்லை, எனக்கு திமிர் பிடித்தவன் , பெருமைக்காரன் , வேறு சில பெயர்களும் அவர்கள் கொடுத்தனர் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை , நிறைய வாடிக்கையாளர்கள் என்னால் எனது நிறுவனத்துக்கு கிடைத்தனர் , எனக்கு பதவி உயர்வும் கிடைத்தது , எதிலும் பெரிய இருப்பு இல்லாமல் போய் கொண்டு இருந்தது வாழ்கை .

அன்று வெள்ளிகிழமை அனைவரும் நிலாவிடம் சென்று எதோ வாழ்த்து சொல்லுவது போல் இருந்தது , நான் கண்டு கொள்ளவே இல்லை ,  அன்று மாலை நிலா என்னிடம் வந்தாள்..

விஜய் இன்றைக்கு என்னோட பிறந்தநாள் நீங்கள் கண்டிப்பா நான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் , நான் முடியாது என்று மறுத்து விட்டேன் , அவளோ விடுவதாக இல்லை , எனது அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை , அவர்களை மருத்துவமனை அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லி கடைசியில் தப்பித்து கொண்டேன் , அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்று பிறகு இரவில் அம்மாவை கூட்டி கொண்டு வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க வெளியில் போக வேண்டி இருந்தது , அனைத்தையும் வாங்கி முடித்தவுடன் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டு இருந்தேன்.

 யாரோ என்னை அழைப்பதை போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அங்கெ நிலா நின்று கொண்டு இருந்தாள் , என் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன் , அம்மா உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது , நான் ரொம்ப நல்ல இருக்கேன் என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்த உடன் , என்னை நோக்கி முறைப்பது போல் பார்த்தாள்  , நான் தலையை கீழே குனிந்து கொண்டேன் , பிறகு அவளை பார்க்கவே இல்லை , என்னை தப்பாக நினைத்து இருப்பாள்  அதுவும் அம்மாவுக்கு உடல்நிலை சரி  இல்லை  என்று பொய் சொன்னதற்கு  ,பிறந்தநாள் என்று சொல்லி என் அம்மாவிடம் ஆசிர்வாதமும் பெற்று கொண்டாள் , பேருந்து வந்ததும் முவரும் ஒரே பேருந்திலேயே சென்றோம் , என் அம்மாவுடன் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தாள் , நாங்கள் இறங்கும்  நிலையம் வந்தவுடன் நானும் அம்மாவும் நிலவும் இறங்கினோம் , அம்மா சொன்னார்கள் இரவாகி விட்டது அந்த பெண்ணை  போய்  வீட்டில் விட்டுவிட்டு வா என்றார்கள் , நான் அம்மா பிள்ளை எனது அம்மாவை ரொம்ப பிடிக்கும் அப்பா இல்லை , எனக்காகவே வாழும் எனது அம்மா , நிலா சொன்னால் பரவா இல்லை நான் தனியாகவே போய் விடுகிறேன் என்று பிறகு ஒத்துக்கொண்டால் அவளை அழைத்து சென்றேன் , இருவரும் மௌனமாகவே நடந்தோம் என்னை தப்பாக நினைத்திருப்பாள், பரவ இல்லை என்று எண்ணிக்கொண்டேன் ,

உங்கள் வீடு எங்கே உள்ளது என்று அவளிடம் கேட்டேன் , நான் விடுதியில் தான் தங்கி உள்ளேன் என்றாள் , உங்கள் அம்மா அப்பா எங்கே ? அவர்கள் யார் என்றே தெரியாது நான் ஒரு அநாதை அனால் யாருக்கும் தெரியாது என்றால் சிரித்து கொண்டே ,  அவளது விடுதி வந்தது , நீங்க போய் விட்டு வங்க என்று சொல்லி உள்ளே சென்றவள் , எனக்கு  என்னோட பிறந்த நாள் என்னனு எனக்கே தெரியாது சும்மா நானா இத பிறந்தநாள் அப்படி சொல்லி கொண்டாடுகிறேன் மீண்டும் அதே சிரிப்புடன் உள்ளே சென்றல் நானோ இதயம் கனத்து போய் மரம் போல் அதே இடத்திலேயே நின்று கொண்டு இருந்தேன், சற்று தொலைவில் சென்றவள் என்னை திரும்பி பார்த்தல் , நான் இப்போதுதான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றேன் , அப்பாட  இப்போதாவது சொன்னியே நன்றி என்றாள் ...

வீட்டிற்கு வந்து விட்டேன் , மனதெல்லாம் அவளின் நினைவு மட்டும் ஓடியது , அம்மா அழைத்தார்கள் , அவர்களிடம் சென்று என்ன என்று கேட்டேன் , அந்த பொண்ண பாதியப்பா , ரொம்ப அழகா இருக்கின்றாள் , அந்த மாதிரி ஒரு பொண்ணைத்தான் உனக்கு காட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன் , நான் ஒன்றும் பதில் சொல்லாமலேயே திரும்பி வந்தேன் , இரண்டு நாட்கள் விடுமுறை ஓடியது , அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது , அவளை பற்றி தெரிந்தது கொள்ள வேண்டும் போல இருந்தது , அவளுக்கென்று யாரும் இல்லை என்றபோது எப்போதும் அவளின் சந்தோசத்திற்கு பஞ்சம் இருக்காது .

அன்று திங்கள் கிழமை காலையிலேயே அலுவலகம் சென்று அவளின் வருகைகாய் காத்திருந்தேன் , கலையில் அவள் வரவில்லை , மதியம் அவள் வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள் , இன்று அவள் சந்தோசமாக இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது , உணவு இடை வெளி வந்தது , அனைவரும் சாப்பிட சென்று விட்டனர் , அவள் மட்டும் அங்கே உட்கார்ந்து இருந்தாள் , நான் அவளிடம் சென்று சாப்பிட போகலாமா என்றேன் , முதல் முதலாய் ஒரு பெண்ணை சாப்பிட அழைத்தேன் , அவளோ பசிக்கவில்லை நீங்கள் பொய் சாபிடுங்கள் என்றாள் , என் கவலையாய் இருப்பது போல் இருக்கிறீர்கள் என்றேன் , ஒன்றும் இல்லை என்றால் ,  நான் சாப்பிட சென்று விட்டேன் , மாலையில் அவள் முகம் மிகவும் வாடி இருந்தது , என்னிடம் வந்தவள் நீங்கள் இன்று மாலை சும்மா இருந்தாள் என்னோடன் வர முடியுமா என்றாள், நான் சரி என்றேன் , அன்று மாலை அலுவலகம் முடிந்து ஆவலுடன் சென்றேன் .. எங்கே அழைத்து செல்கிறாள் என்னை ...?


அது ஒரு அநாதை ஆசிரமம் , விஜய் இந்தா மாதிரி இடத்துக்கு போய் இருக்கிறாயா? என்று கேட்டால் என்னிடம் , இல்லை என்றேன் , அங்கு நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தன , எனக்கு ஒருமாதிரியான உணர்வு , இங்குதான் நான் வளர்ந்தேன் விஜய், இங்கு இருக்கிற எல்லாருக்கும் ஒரு வேலை உணவிலிருந்து எல்லாமே போராட்டம் தான் , வா விஜய் உள்ளே போகலாம் என்று அழைத்தால் , நானும் உள்ளே சென்றேன் , அங்கெ ஒரு குழந்தை நோயால் படுத்து இருந்தது , விஜய் இவளுக்கு சின்ன ஆபரேஷன் பண்ணனும் , வயிற்றில் சின்ன காட்டி இருக்கிறதாம் , அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார் என்ற பொது அவளின் இயலாமை கண்களில் நீராய் , அதற்க்கு மேல் என்னால் அங்கு இருக்க முடிய வில்லை , நான் ஒன்றும் சொல்லாமல் நான் வருகிறேன் என்று அவளிடம் சொல்லி விட்டு வெளியே சென்று விட்டேன் ...

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை அதனால் என் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் பணம் கேட்டு பார்த்தேன் அந்த குழந்தைக்காக , எனக்கு கிடைக்கவே இல்லை , அப்போது நண்பன் சொன்ன ஒரு யோசனை எனக்கு உதவியது , எங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம் அதன் பிறகு தேவையான பணம் கிடைத்தது , அதை கொண்டு சென்று நிலவிடம் கொடுத்தேன் , அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரிய வில்லை , என் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள்,

அந்த குழந்தையின் அருவைசிகிசை முடிந்தது ,  அந்த குழந்தை பிழைத்து விட்டது , அவளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது , அன்று நல்ல  மழை , நான் உனக்காக காத்து கொண்டு இருக்கிறேன் வேகமாக வா ... என்றதுடன் துண்டித்துகொண்டாள் இணைப்பை , அவளுக்காக காத்திருந்தேன் ஒரு பேருந்து நிலையத்தில் , நன்றாக மழை பெய்ய ஆரம்பித்தது , வீதி எங்கும் மழை நீர் , அவள் வந்தாள் , ரொம்ப சந்தசமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன் , என்னை பார்த்தவுடன் வேகமாக ரோட்டை கிராஸ் செய்து என்பக்கம் வருவதற்காக நடந்து வந்து கொண்டு இருந்தாள் , கருப்பு குடை பிடித்து எதோ ஒரு மயில் மழை வந்த சந்தோஷத்தில் இறக்கை விரித்து ஆடுவது போல் , அன்றுதான் அவளின் பேரழகு எனக்கு தெரிந்தது ,


ஒரு துளி மழைநீர் என் முகம் மேல் விழ கண்களை முடிக்கொண்டேன் , அவள் விரல் என் மேல் பட்டது போல் ஒரு உணர்வு , மழை ஜில்லென்ற கற்று மாலை நேரம் அழகான ஒரு பெண் என்னை காண வருகிறாள் என்று நினைத்த பொது உலகமே எதோ எனக்காகவே படைக்க பட்டது போல் உணர்ந்தேன் , திடிரென ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு கண் களை முழித்து கொண்டேன் , நிலா லாரியில் அடிபட்டு விழுந்தால் , ஒரு நொடி என் கண்களை நம்ப முடிய வில்லை , உலகம் பிரம்மித்து போனது போல ஒரு உணர்வு , அவளை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் , அவள் கையில் வைத்திருந்த பை ஒன்றை என்னிடம் தந்தனர் , அவள் சுய நினைவிற்கு வரவில்லை , அவளது பையில் அவளது டைரி இருந்தது , அதை அடுத்து படிக்க ஆரம்பித்தேன் , விஜய் உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது , உனது அமைதி , திறமை , பார்வை எல்லாம் , என்னோட பேசு விஜய் , உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன் , நீ சூரியனாக வந்த பின்புதான் என் உலகம் வெளிச்சம் அடையும் , அவள் கண்முடி மருத்துவமனையில் உறங்கிய போதும் அவள் டைரி என்னிடம் பேசிக்கொண்டு இருந்தது.


நாட்கள் ஓடின அவளுக்கு சுய நினைவு வரவே இல்லை , எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள் என் வீட்டில் , ஏனோ எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை எனக்கு , இன்றைக்கு புதன் கிழமை நான் அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறேன் , யாரோ என்னை குபிடுற மாதிரி இருக்கு , ஒரு நிமிஷம் இருக்க பாத்துட்டு உங்களிடம் சொல்லுகிறேன் , அட என் அம்மா தாங்க , என்ன சொள்ளரங்கனு கேக்குறிங்களா , எனக்கு 35 வயசு ஆகிவிட்டதாம் , அதனால கல்யாணம் பண்ணிக்க சொல்லுராங்க , இப்ப நிலவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் , கூடிய விரைவில் அவள் குணமடைந்து விடுவாள் என்பது எனது நம்பிக்கை , நிலா என் மேல் வைத்த நம்பிக்கை , நான் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை இது இரண்டும் சமகான அளவு வரும் பொது நான் கண்டிப்பா ஜெயிப்பேன் , பத்து வருடமாக நான் காத்திருந்ததற்கு கடவுள் எனக்கு கண்டிப்பா வெற்றி கொடுப்பார் ,  எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது போய் விட்டு வருகிறேன் ......

அதுவரை நமது புண்ணகை பயணம் தொடரும் ....


அன்புடன்...
புண்ணகைதேசம் சிவா

குறிப்பு:
சமிபத்தில் நான் ஷர்ஜாஹ் வில் சந்தித்த ஒருவரின் கதை இது , எனது வலைப்பதிவில் தோல்வியான எதையும் சொல்லகூடாது என்பதற்காகவே கதையை மாற்றினேன் , உண்மையில் அந்த பெண் அடிபட்ட இடத்திலேயே இறந்து விட்டாள் , அவரோ சிவ தீட்சை வாங்கி கொண்டு , திருமணம் செய்யாமலே வாழ்கிறார் 45 வயது ஆகியும் , இன்று பெரிய நிறுவனம் ஒன்றின் முதன்மை அதிகாரி அவர் , உடல் ஆசைக்காக காதலை பெண்கள் மீது வீசும் நாய்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்வது ?
அவரது அம்மாவும் அவரை விட்டு சென்று விட்டார்

இப்போது இவருக்கென்று யாரும் இல்லை , நானும் ஒரு அநாதை என்று சிரிக்கிறார்
மாதம் மாதம் அநாதை குழந்தைகளுக்கு உதவுவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை ....

திங்கள், ஜூலை 12, 2010

ஒரு தேவதையின் கண்ணீர்....


ஒரு  பேருந்து  பயணத்தில்  என்னக்கு  ஏற்பட்ட மறக்க முடியாத  நினைவு  அது  , கல்லூரியில்  சேர்ந்து  விட்டு  திரும்பிக்கொண்டு  இருந்தேன்  , காரைக்குடி  வந்ததும்  வேறு  ஒரு  பேருந்துக்கு  மாறவேண்டும்   , கையில்  ஆனந்த   விகடன்  அட்டையில்  விஜய்  படம்  , காலை மதியம் இரண்டு  வேலையும்  நல்ல    இருந்தாலும் பேருந்தில் போகும் பொது பசி வந்தாள்  என்ன பண்ணுவது? முன்று  மணிநேரம் நிறுத்தாமல்  வண்டி போகும் அதனால்  போய் சாப்பிட  எதாவது வாங்கி வைத்து  கொள்ளலாம்  என்று  முடிவு பண்ணி, பேருந்து  புறப்படுவதற்குள்  போய் வாங்கி கொண்டு  வந்து விட்டேன் , அதிகமான  ஒன்னும் இல்ல ஒரு பாட்டில்  பெப்சி , பிஸ்கட் , சிப்ஸ் , சக்கலேட் அவளவுதான்  இதுக்குமேல நம்ம வயறு தாங்காது  மதியம் வேற சிக்கன் பிரியாணி வெயிட் டா சாப்பிடாசு    , கைகள் புத்தகத்தை   புரட்ட   ஆரம்பித்தன   , பேருந்தில்  பாடல்  ஒலிக்க   ஆரம்பித்தது  ஒருவர்  ஒருவராக  பேருந்தில்  ஏறி  உட்கார ஆரம்பித்தார்கள்  ,

அப்போது  ஒரு  பெண்  குழந்தை  ஒரு  ஐந்து  வயது  இருக்கும்  என்னை  நோக்கி  வந்தாள் , அலுக்கு   சட்டை  , மூக்கு வலிந்து கொண்டு  அதை  கையால்  துடைத்து  கொண்டே  , யாரோ  தின்று   விட்டு  தூக்கி   போட்ட   சாக்லேட்  கவரை வாயில்  கடித்து  கொண்டு  , என்னை நோக்கி அந்த குழந்தை,  அண்ணா  பசிக்குது  என்று கையை நீட்டியது  , நானும் பர்சில் தேடி பிடித்து சில்லறை எடுத்து கொடுத்து விட்டேன்  , ஒரு புன்னைகையோடு இரு கை கூப்பி வணங்கினாள்,

எனக்கு பின்னல் இருந்த ஐம்பது வயது மதிக்க பெண் ஒருவர் தனக்கு அருகாமையில் இருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் , அவ வீடு கல்யாணத்துக்கு வந்தேன், என்ன? பந்தி வச்சாங்க முன்று  முறைக்கு மேல சாப்பாடு வைக்கவே  இல்ல , இந்த பெண் குழந்தை அந்த அம்மாவிடம் போய் அம்மா பசிக்குது என்று கையை நீடினால் , உடனே அந்த அம்மா  சீறி பாய தொடங்கினார் , இந்த சனியனுகளுக்கு  வேற பிச்சை பிச்சைன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க   , அய் அந்த பக்கம் போடி என்று எந்த பெண் குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர் , அம்மா பசிக்குதுமா என்று சோக முகத்துடன் கெஞ்ச ஆரம்பித்தாள்  அந்த பெண் குழந்தை, வசை மொழி  மட்டும் கிடைத்தது( இந்த அம்மாவுக்கு இந்த வயதில் ஒரு பேர குழந்தை இருந்து ,அது இப்படி பிச்சை எடுத்தால் எப்படி இருக்கும் ) .

அதற்கு பிறகு உட்கார்ந்து இருந்த கனவான்களும் அந்த பெண்குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர்( இப்போதுள்ள பெண்களுக்கே இறக்கம் இல்லாமல் போய் விட்டது ஆண்களுக்கு இருக்குமா என்ன..? )  
அவள் பேருந்தை விட்டு கீழே இறங்கினாள் , பேருந்துக்கு  கீழே  யாரோ  பேசுவது  கேட்டது  , ( அந்த பெண் குழந்தையை பிச்சை எடுக்க வைப்பவள் ) ஏண்டி  மூணு   வேலை   நல்ல  கொட்டி கொள்கிறாய் ,  போய்  அழுது  கிட்டே  காசு கேளுடி  , அப்பதான்  நிறைய   காசு  கொடுப்பாங்க    என்றாள்  , அதற்கு  அந்த  பெண்  குழந்தை  : எனக்கு  பசிக்குது  காலையிலும்    நான்  சாப்பிடவில்லை    உண்மையாகவே ரொம்ப பசிக்குது  என்றாள்   அழுது  கொண்டே  , உனக்கு  சாப்பாடெல்லாம்  கிடையாது, பெரிய கலெக்டர் வீட்டு குழந்தை இவள் ,  போய்   ஒரு  50 rs யாவது  வாங்கிட்டு  வந்து   உனக்கு  சாப்பாடு  .

வயிற்றில் பசி கண்களில் கண்ணீர் மூலையை செயலிழக்க வைக்கும் வெயில் , உலகம் இருண்டதை போல அந்த பெண் குழந்தை உணர்திருக்க கூடும் , அந்த  குழந்தை   தான் ஏற்கனவே இந்த பேருந்தில் ஏறியதை மறந்து ஏறிவிட்டால் , பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் திட்ட ஆரம்பித்தார்கள் அந்த பெண் குழந்தையை , கீழே  இறங்கியவள், ரொம்ப பசிக்குது என்று அழுது கொண்டே சென்றாள்.

சில  சமயங்களில்  மட்டும்  நம்  வாய்  மூடப்படமலேயே  ஊமையாகிறோம் ,  கை  கட்டமலையே  கை  காட்டி  வேடிக்கை  பார்க்கிறோம்  என்பது  மட்டும்  புரிந்தது,  பேருந்து  கிளம்பியது  , கையில் இருந்த பிஸ்கட் யாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம் , அவள்  கண்ணீருடன்  வேறு  ஒரு  பேருந்தில் "அம்மா பசிக்குது " என்று  கை நீட்டுவதை தொடர்ந்தாள்  ……..

அவள் என் நினைவில் சிம்மாசம் இட்டு புன்னகையுடன் உட்கார்ந்த பொது .... என் மொபைல் ஒலித்ததை என்னால் உணரமுடிந்தது , என் அம்மா , சாப்பிடு விட்டாயா  ....? நான் நல்ல சப்பிடுடேனம்மா ஆனா ....? 

 இவைகளுக்கு பதில் வேண்டும்  : குழந்தைகள் பிச்சை எடுப்பது ஒரு ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்குமா..?
இது யார் செய்த குற்றம் ..? ஒரு திருடன் , ஒரு விபச்சாரி , இவர்களின் பின்னல் மறைக்க பட்ட இது போன்ற ஒரு கதை இருக்கும் , இதெற்கெல்லாம் முடிவு சமுதாயம் தான் சொல்ல வேண்டும் நீங்கள் தான் சமுதாயம் , பதில் சொல்லுங்கள் ......

வியாழன், ஜூலை 01, 2010

நிலா..!


அதோ நிலவை பார்
ஒருவாய் சாப்பிடு
என் கண்ணே
உணவளிதாள் அம்மா
அன்று நிலவை காட்டி ..!

நேற்று நிலா
என்றால் அம்மா
ஊட்டிய சோற்றின்
யாபகம் ...!

யார் நிலவில்
இருப்பார்கள்
பாட்டி வடை
சுட்டு விற்கிறாள்
அங்கெ..!

இன்று நிலா என்றால்
அவளின் முகம்
என்னை பார்த்து
புண்ணகைக்கும்   பொது
பொர்ணமியாய்...

ஏன் இவ்வளவு வெட்கம்
என்னை கண்டவுடன்
மேக கூடத்திற்குள்
சென்று உன்னை
மறைத்து கொள்கிறாய் ..!

உனது வெட்கம்
தாங்காமல்
மழையாய் பெய்கிறது
மேகம் என் மேல் ...

காதல் மழையில்
நனைகிறேன் நான்
துரத்தில் நின்று
சிரித்து கொண்டு
இருக்கிறாய் ஒன்றுமே
தெரியாதது போல்
நிலவாய்...!

ஒரு இரவில்
உன் மீது வந்த
காதல் ...
வெயிலை வென்று
எடுத்த மழையின்
வெற்றி ....
என் ஆண்மையை
வென்ற உந்தன்
வெற்றி ...


கண்கள் மூடி
உன்னை நினைத்தாள்
உன்னை கைகளில்
பிடித்துவிடுகிறேன்
கண்களை விழித்து
பார்த்த போதுதான்
உணர்ந்தேன் நீ
என்னிடம் இல்லை ..!

நானும் என்னிடம்
இல்லை ,
என்னை உன்னில்
தொலைத்து விட்டு
தேடி அலைகிறேன்
விண்வெளியில் ...

குறிப்பு : எப்போ நிலவை பார்த்தாலும் , ஒரு பொண்ணு என்னை பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கு ....