காதல் ஒரு அழகான உணர்வு , எல்லோருக்குள்ளும் காதல் இருக்கும் இருக்கணும் அப்புடி இல்லாம நான் யாரையும் காதல் பண்ணலைன்னு சொன்ன அவங்களா நல்ல மருத்துவரை பொய் பார்க்கலாம் ,
ரொம்ப சந்தோசமா போய்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு வந்தால் , நான் கல்லூரி படிக்கும் பொது இல்ல , 10 வது படிக்கும் பொது , 8 வது வரை படித்து விடுதியில் தங்கி , எனக்கு அது பிடிக்காமல் போகவே , என் ஊருக்கு பக்கத்து ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கு படிக்க வந்தேன் , 9 ஆம் வகுப்பில் சேர்ந்த பொது அந்த வகுப்பில் உள்ள பாதிப்பேர் என் ஊரை சேர்ந்த என் நண்பர்கள் ,
அவளை சில முறை பார்த்த போதும் ஒன்றும் தோன்றியது இல்லை , எங்கள் பள்ளிக்கூடம் 9 மணிக்கு நான் பள்ளிக்குள் 8:30 மணிக்கு வருவேன் , அதே சமயம் அந்த பொண்ணும் வருவாள் இது எதார்த்தமானது என்றே நான் நினைக்கிறேன் , தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் வருவதால் நண்பர்கள் என்னை கிண்டல் பண்ண ஆரம்பித்தார்கள் , எங்களுக்குன்னு ஒரு group இருந்தது அதில் எல்லாரும் love பண்ணி கொண்டு இருந்தாங்க , நான் மட்டும் பண்ணாம இருந்தேன் , ஒரு தொகுதி பங்கீடு மாதிரி அது உன் ஆளு இது என் ஆளுன்னு ஒவ்வொரு பொண்ணையும் இவங்களே அவங்க அவங்க அளக்கிகுவாங்க இதுல என்ன முக்கிய அம்சம்ன அந்த பொண்ணுகளுக்கு இந்த மேட்டர் தெரியாது ,
என்னோட நண்பர்கள் என்னையும் அந்த பொண்ணையும் சேர்த்து வச்சு ரொம்ப கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க , காலாண்டு தேர்வு நெருங்கும் பொது ஒருநாள் நைட் புத்தகத்த துறந்து வச்சுகிட்டு தூங்கிகிட்டு இருந்தேன் , அன்னைக்கும் அப்படிதான்..
அப்படி பொய் கிட்டு இருக்கும் பொது திடிர்னு அவளோட யாபகம் முதல் முதல் ல எனக்குள் வந்தது என் அந்த பொண்ண நினைக்கிறோம் அப்பறம் என்னோட நண்பர்கள் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கனு தோனுச்சு , இரவு 12 மணி ஆகிருச்சு TV பக்க ஆரம்பித்தேன் அவளின் யாபகம் தொடர்ந்தது , பொய் தூங்கிட்டேன் கனவிலும் வந்தால் , தூக்கமும் போச்சு , எழுந்து நடக்க ஆரம்பித்தேன் , தூங்கு ப காலைல பள்ளிக்கூடம் போகணும் ல அம்மாவின் குரல் , அவளின் நினைவு என் நிழலை போல் தொடர்ந்தது , மீண்டும் வந்து துங்கினேன் இல்லை தூங்க முயற்சி செய்தேன் அப்போது என்னோல் அவள் மேல் ஏற்பட்ட chemistry ஒரு மாதிரியான வலி இதயத்தில் மனசெல்லாம் அவ இருந்தால் ஒரு மாதிரி மனசு வலித்த போதும் அந்த சுகம் எனக்கு பிடித்தது , என் துக்கத்தை கேடுதவள் , கலையில் எழுந்தேன் எனக்குள் கேட்ட முதல் கேள்வி இதற்கு பெயர் என்ன என்னால் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஒரு பொண்ணின் மேல் , ஒரு வேலை காதலா ?
பள்ளிக்கு பொய் கடைசி பெஞ்ச் ( கல்லூரி முடிக்கும் வரை நான் கடைசி பெஞ்ச் தான் புரியலையா மாப்ள பெஞ்ச் ) ல இருந்த நண்பனுடன் இரவில் நடந்ததை சொன்னேன் , உடனே அவன் “ டே பங்காளி கைய குடுடா confirm ட இது காதல் தான் ” எனக்கு கொஞ்சம் பயம் கலந்த சந்தோசம்
எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் உள்ளே வர ஆரம்பித்தால் , 10 வது தான் அங்க l ஏரியா வில் அனைவரும் படிக்கும் கடைசி வகுப்பு , என் தலைஎழுத்து 10 வதோடு முடிந்து விடுமோ என்று நினைத்தேன் , என்ன எங்க ஏரியா ல காலேஜ் சே இல்ல , காதலர் தினம் படத்தில் வரும் இந்த டயலாக் எனக்கு ரொம்ப பிடிக்கும் “ ஏழை நாய் எல்லாம் எதுக்குடா படிப்பு ” , ஒரு கிராமத்தில் பிறந்தது எங்களோட தப்பா , என்னுடன் படித்த என் நண்பர்கள் யாருமே கல்லூரி வரை வரவே இல்லை என்னை தவிர என்பது வேறு கொடுமை , நல்ல படிச்சா பசங்கள கூட படிக்க வைக்க மட்டங்க , அனா பணம் மட்டும் நெறைய இருக்கும் , நல்ல படிச்சு பெரிய ஆளா அக வேணும் கிறது எனக்குள் இருக்கும் வெறி , அப்புடி ஆவேனகிறது ?
பள்ளி முடிந்து வெளியே வந்தேன் , அவளை பார்த்தேன் , முதல் முதலாக ஒரு பெண்ணை பார்த்தேன் அங்குலம் அங்குலமாக , ரொம்ப அழகா இருந்த , ஒரே நேரத்துல வனத்தில் ஆயிரம் நிலா வந்த எப்புடி இருக்கும் அப்புடி , புள்ளி மனுக்கு பெக் மட்டி பள்ளிக்கூடம் போக சொன்ன எப்புடி இருக்கும் அப்புடி இருந்த , என் மனசு மட்டும் என்கிட்ட இல்லவே இல்லன்னு தோனுச்சு , பள்ளிகூடத்த விட்டு போகவும் மனசே இல்லை , அவளோட lady bird cycle என்னோடது herculase , அவ cycle முன்னாடி கூடை மதி ஒன்னு இருக்கும் அதுலதான் அவளோட பெக் க வைப்ப , அவளோட close friend ஒருத்தி , ரெண்டு பெரும் ஒன்னாவே தான் இருபங்க , நாங்க அவங்களுக்கு வச்ச பேரு ரெட்ட கிளி (காதலிக்கிறதுக்கு முன்னாடி )
அவள் மட்டும் இல்ல அவளோட cycle , பெக் எல்லாம் கூட எனக்கு அழகா தெரிஞ்சது , அன்னைக்கு எல்லாமே எனக்கு புதுசா இருந்தது , எனக்கு cycle ஓட்ட ரொம்ப புடிக்கும் அதுவும் வேகமா பள்ளிகுடதுல இருந்து 10 mins ல வீட்டுக்கு போயிருவேன் , எங்க ஊருக்கும் அவளின் ஊருக்கும் ஒரே road தான் போகும் ஒரு வளைவு வந்து ரெண்டு ரோட பிரியும் அங்க நாங்க பிரிவோம் , நாளை சந்திப்பொம் என்ற நம்பிக்கையில் , அவள் மேல் என் இதயத்தில் எழுதப்பட்ட காதல் , எதோ வானில் பறந்தது போல் யாபகம் , வீட்டுக்கு போகும் பொது திடிரென தோன்றியது , அவள் என்னை காதலிப்பாள , அவ ரொம்ப சிகப்பு நானோ ரொம்ப கருப்பு , அவளுக்கு சுண்டி விடணும்னு நெனச்சாலே ரேதம் வந்துரும் எனக்கோ கத்தியவச்சு கிரினாலும் ரெத்தம் வராது , சிகப்பகனும் என்ன பண்ணலாம் idea fair & lovely, அப்பறம் முஞ்சில மிசையே இல்லை மிசை இருந்தாதான் பொண்ணுகளுக்கும் பிடிக்குமாம் ok , அப்பறம் நல்ல படிக்கிறவங்கள புடிக்குமாம் , ok, அழகா இருக்கிற பசங்கள புடிக்குமாம் அனா இது கொஞ்சம் இல்லை நெறைய கஷ்டம் எப்புடி அழகா ஆகுறது , அம்மா விடம் கேட்ட கேள்வி இது நான் எம்மா கருப்ப பிறந்தேன் , என்ப நீ அழகா தானே இருக்கே , அனா கருப்ப இருக்கனே உங்க கலர் ல என்னை பெக்கம எம்மா அப்பா கலர் ல பேத்திங்க , போடா எனக்கு வேலை இருக்கு இதுக்கெல்லாம் நம்ம சித்திதான் சரியான ஆளு என்ன கேட்டலும் பதில் சொல்லும் பக்கி , வேகமா சித்திட பொய் சித்தி என்னை பசங்க எல்லாம் என்னை கருப்ப இருக்கமுனு கிண்டல் பண்டரங்க அப்புடின்னு ஒரு பிட்ட போட்டேன் , யாரு சொன்னானு கேட்டாங்க , அத விடுங்க நான் ஏன் கருப்ப பிறந்தேன்னு கேட்டேன் , ஆம்பளைக்கு அதுதாப்ப அழகு , பொன்னுகுதான் கலர் தேவை உனக்கு தேவை இல்லை , அவங்க என்ன சொன்ன போதும் மனசு ஏத்துக்கவே இல்ல நான் அழகா அகனும் அதுக்கு என்ன வழி , வழி சொன்னங்க கடலை மாவு , night துங்கும் பொது போட்டுடு தூங்கு ,"சூப்பர்" அப்பறம் fair & lovely போடு , அப்பறம் lux soap போடு , ok done , “சிங்க மொன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு ”
கடலை மாவு , சந்தானம் , fair & lovely எல்லாத்தையும் மூஞ்சியில் பூச ஆரம்பித்தேன் , அவள் மேலான காதலும் நான் கருப்பு என்ற தாழ்வு மனப்பான்மையும் என்னுள் பெருகிக்கொண்டே போனது ….
பயணம் தொடரும்....