மீண்டும் ஒருமுறை நாம் வானில் ஏறி விண்ணை தொடுவோம் , தோல்விகள் , அவமானம் , பிரிவு... இவை நம்முடனே தொடர்ந்து வந்த போதும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டியது பாடமே தவிர கவலை இல்லை , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் , நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் ,நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதை அடைவதற்காக நாம் நடத்தும் விட முயற்சியுடனான போராட்டத்தில் இருக்கிறது சுவாரசியமான வாழ்கை, ஏற்று கொள்வோம் எதையும் சந்தோசத்துடனே., தொடரட்டும் சந்தோசம் உங்கள் புன்னகையோடு..!
ஞாயிறு, செப்டம்பர் 26, 2010
பப்பு கிளம்பிடான்யா..!
(ஒரு ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு இதை நினைத்து பார்த்து கொள்ளுங்கள் )
இடம் : துபாய் , மணி : 5 :50 மாலை
(அப்படியே நம்ம கேமராவை அவுட் போகஸ் ல துபாய் யை வனத்தில் இருந்து காமிக்க மெதுவா ஆரம்பிச்சு , அப்படியே வேகாத கூட்டி ஒரு ஜன்னல் வலிய போய்கிட்டு இருக்கு கேமரா, ஒரு இடத்தில் அது நிற்கிறது )
அந்த ஒரு அரை முற்றிலும் குளிருட்ட பட்ட அரை அது , நெட்வொர்கிங் மிசின்கள், சர்வர், நெட்வொர்கிங்வாயர்கள் என் ஒரே ஹை டெக் நிறைந்து வழிகிறது , இருண்ட அரை அதில் மிசின் களில் இருந்து வந்த , சிறு சிறு ஒளியை தவிர வேறு எதுவும் இல்லை , அந்த மிசின் களுக்கு மத்தியில் ஒருவன் உட்கார்ந்து கொண்டே தூங்கி வலிந்து கொண்டு இருந்தான், இதுல குறட்டை சத்தம் வேறு , குர்ர்ர் குர்ர்ர் (குறட்டை விடுராராம்மாம்) இவன்தான் நமது பப்பு ...
(இதை எல்லாம் ஒரு சங்கர் படம் ரேஞ்சுக்கு நினைத்துகொள்ளுங்கள் பக்கியளா)
திடிரென ஒலிக்க ஆரம்பித்த தொலைபேசி , ஒற்றை கண்களை மட்டும் விழித்தான் பப்பு ( ஒரு நிமிடம் போருக்க முடியுமா நம்ம ஹீரோ என்திரிசுட்டறு ஒரு ஒபெனிங் சாங் போடுகிறேன் , இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும் ;! இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் !, கவிஞர் திரு . வைரமுத்துவின் வரியை ஆட்டைய போட்டதுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் ) தொலை பேசியை எடுத்து பேச ஆரம்பித்தான் பப்பு , எதிர் முனையில் அவனது மேலாளர் பப்பு , வேகமாக எனது அறைக்கு வா , மேலாளர் அழைத்து விட்டார் , பாய்ந்து சென்றான் அப்படி நினைத்தால் அது உங்கள் தப்பு ,
அடி அசைந்து கொட்டாவி விட்டு கொண்டே , மாலை வணக்கம் தலை , பப்பு மேலாளருக்கு இல்லை , மேலாளர் பப்புவிற்கு போட்டார் , நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா பப்பு , மேலே பார்க்க ஆரம்பித்தான் பப்பு , பெருத்த முச்சு விட்டு கொண்டு , நான் கண்டிப்பா போய்தான் அகனும் , ( டேய் இது உனக்கே ஓவரா இல்ல , நீ எங்க போய் எந்த வெட்டி முறிக்க போற ) , உன்னை விடுவதற்கு எங்களுக்கு மனமே இல்லை பப்பு , உன்னை போல ஒருவன் எங்களுக்கு இனிமேல் கிடைக்க மாட்டன் பப்பு ( அப்பு நான் இது வரைக்கும் வேலையே பார்த்தது கிடையாது ,நீ என் இவ்வளவு பீலிங்க்ஸ் விடுற திரும்பி கொட்டாவி விட்டு கொண்டான் பப்பு),
இதில் ஒரு கையழுத்து போட்டு விட்டு போ பப்பு , இந்த கம்பெனி கான்ட்ராக்ட் முடிந்ததால் பப்பு இந்த கம்பெனி விட்டு வெளியே போகிறான் , இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு , பப்பு கிளம்பினான் நல்லபடியா போய் விட்டு வா பப்பு , ( இந்த இடத்துல உங்க காதுக்குள்ள லாலா லாலா லாலா அப்புடி ஒரு மியூசிக் வந்து கிட்டு இருக்கணும் ) மேலாளர் மற்றும் பப்புவின் கண்களில் கண்ணீர் , ( இங்கே விக்ரமன் படம் ரேஞ்சுக்கு நினைத்து கொள்ளுங்கள் அந்த லாலா லாலா மியூசிக் கூடவே , அட பாசகார பய பக்கியா , இம்ம்புட்டு பாசமாவாடா இருப்பிய ) ,
இப்படி ஒரு அடிமையை விட்டு விட்டோமே என்று மேலாளருக்கு வருத்தம் , நம்மகிட்ட இருந்த ஒரே ஒரு அடிமை கம்பனியை விட்டுடமேனு பப்புவிற்கு வருத்தம் ....
தனது ஒப்பந்தத்தை தொடராமல் , வேலையை விட்டு விட்டு செல்ல ஆரம்பித்தான் பப்பு ...
தென்பாண்டி சீமையிலே .... தேரோடும் வீதியிலே ... மான் போல வந்தவனே... யார் அடிச்சாரோ ....
பப்புவின் பயணம் தொடரும் ....
The End .....
-
நமது வாழ்கையில் நிறைய பேர் வந்து செல்கின்றனர் , சிலரை பிடிக்கிறது , மிகவும் பிடிக்கிறது , ஒரு சிலரை உயிருக்கு உயிராக நேசிக்கவும் செய்கிறோம் , வாழ்கை செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்து கொண்டே இருந்த பொது அவர்களின் முக்கியத்துவமோ மதிப்போ நமக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் அனால் பிரிவு என்ற ஒன்று வரும் பொது மட்டுமே அவர்களின் உண்மையனா மதிப்பு நமக்கு தெரிய வரும் , இருந்த போதும் தனிப்பட்ட ஒரு ஆத்மாவின் பயணம் தனிமையானதே யாரையும் சார்ந்து அது செல்வது இல்லை , இண்டர்நெட்டும் ஜி டால்க் இருக்கும் வரை நம்மள யாராலும் பிரிக்க முடியாது , இதுவரை இந்த தேசத்தில் ( அமீரகம் ) எனக்கு அன்பும் , பாசமும் தந்த எனது நண்பர்கள் அனைவருக்கு நன்றி , இனி நமது அடுத்த பதிவு எனது தாயத்தில் இருந்து வெளிவரும், அனைவருக்கும் , அனைத்திற்கும் நன்றி ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)