வியாழன், ஏப்ரல் 01, 2010

முதல் காதல் ( முடிவு ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்.. வியாக்கிழமை  எப்போதும்  கருப்பு  நிற  உடைகளை  மட்டும்  அணிய  ஆரம்பித்தால்  , நானோ  நண்பர்களுடன்  cricket விளையாடுவது  முழு  நேர தொழில் ஆனது  , எனக்காக  சைக்கிள்  நிற்கும்   இடத்தில  காத்திருக்க  ஆரம்பித்தால்  , வந்த  பிறகும்  ஒன்றும்  பேசாமலே  இருவரும்  செல்வோம்  , கண்களால்  மட்டுமே  பேசிக்கொள்ளும்  எங்கள்  காதல்  மொழியில்   வார்த்தைகள்  மட்டும்  ஏனோ  நாவிலேயே  தற்கொலை  செய்து  கொள்ளும்  ,     காலையில்  நான்  லேட்டாக  வரும்போது  அவள்  சைக்கிளை  ஓட்டாமல்  உருட்ட  ஆரம்பித்து  விட்டால்  , அவளை  பார்க்க  கூடாது  என்று  நினைத்தேனே  தவிர  அவளை  பார்க்காமல்  இருந்தேனா   என்பது  ? , அவளை  நினைக்க  கூடாது  என்று  நினைத்தேனே  தவிர  நினைக்காமல்  இருந்தேனா என்பது ? , அவளை  விட்டு  விலகியதில்  என்  நண்பர்களுக்கு  ஏனோ  வருத்தம்  , என்  நண்பர்கள்  ரொம்பவும் சொன்னதால்   அவளிடம்  காதலை    சொல்ல  ஒத்துக்கொண்டேன்  ,அன்னைக்கு  அவள்  சைக்கிளில்  வரவில்லை  நடந்து  தான்  போக  வேண்டும்  , நான்  எழுதிய  வார்த்தைகள்  இவை  கஷ்டப்பட்டு  English dictionary grammar book எல்லாம்  பார்த்து  “ are you love me” இதுதான்  அவள்  நடந்து  பொய்  கொண்டு  இருந்தால்,   அந்த  பேப்பரை  மடக்கி  கீழே  போட்டேன்  அவள்  கண்  முன்னாடியே  , அவள்  குனிந்து  எடுக்க போகும்  பொது  … எங்கள்  science வாத்தியார்   bike kil   ஒரு  சந்து  வழிய  வந்துட்டார்  , அவள்  எடுக்கவே  இல்லை  , நான்  என்  காதலை  சொல்ல  எடுத்த  முதல்  , கடைசி  முயற்சி  படு  தோல்வியில்  போய்  முடிந்தது  ,  என்  நண்பர்களும்  எனக்காக  எதுவும்  செய்ய  தயாராக  இருந்தார்கள்  , இப்போது  என்  நண்பர்கள்    பாதிபேர்  இன்று எங்கு  இருக்கிறார்கள் என்றே  எனக்கு  தெரியாது  ,   ஒருநாள்  ஒரு  செய்தி  வந்தது  ஒருத்தன்  வேற  வகுப்பு  ,  அவளுக்கு  love letter கொடுததாதா    , பொங்கி  எல  ஆரம்பித்த ,  என்னை  இல்லை  என்  நண்பர்களை  நானே  சமதம்  செய்தேன்  , இருந்த  போதும்  அவனை  எப்படியாவது    எதாவது  பண்ண வேணும் என்று தோன்றியது   ,
முழு  ஆண்டு  தேர்வு  வந்தது  , நானோ  எல்லா  பள்ளி தேர்வுகளிலும்  மதிப்பெண்  அதிகமாகி  கொண்டே  போனது  அவளுக்கோ  குறைந்து  கொண்டே  போனது  “ நேற்று  நான்  இருந்த  இடத்தில  இன்று  அவள் ”

எங்கள்  பள்ளியில்  தேர்வு  எழுத  முடியாது  , அதனால்  வெளியூரில்  உள்ள  பள்ளியில்  சென்று  தேர்வு எழுத  வேண்டும்  பேருந்தில்  தான்  போக  வேண்டும்  , அரை மணிநேரம்   ஆகும்  அங்கெ போவதற்கு  பசங்களும்  பொண்ணுகளும்  ஒண்ணாகவே  போவோம் (அடே  அப்பா, சென்னையில் பொய் பாருப்பா ) , வகுப்புலதான்  பொண்ணுகளுக்கு  தனி  வகுப்பு  பசங்களுக்கு  தனி  வகுப்புன்னு  பிரிச்சு  வச்சுட்டாங்க    , இங்கேயாவது  ஒன்ன  போக  விட்டாங்களே  , நமக்கு  நம்ம  ஆளு  மட்டும்  வந்த  போதும்  , எனக்கு  முதல்  முதலாய்  பரு  வந்தது  , எனக்கு  ஒன்றும்    சந்தோசம்  இல்லை , மிசை  முளைக்க  ஆரம்பித்தது  , நண்பர்கள்  சொல்ல  ஆரம்பித்தார்கள்  டே  பங்காளி  வர  வர  என்னடா  வெல்லையகிட்டே  போற (வெல்லையகுதுங்குறது    நம்ம  அகராதியில    பெரிய  வார்த்தைங்க  கொஞ்சம்  லைட்  கருப்ப  ஆகிட்டு  இருந்தேன் ) பேருந்தில் போகும் போதெல்லாம்  புத்தகம்  பார்த்து  படித்ததை  விட  அவள்  முகம்  பார்த்து  படித்த  நேரம்  அதிகம்  , அவளோ  புத்தகத்தை  துறப்பதே  இல்லை  ஒரே  கடலை  அவளோட  தோழியுடன்  பார்வை  மட்டும்  என்மேலேயே  இருக்கும்  , என்னிடம் பேச நினைப்பதை எல்லாம் தான் தோழியிடம் என் முகம் பார்த்து பேசுவாள், என்னோடு  எதாவது  பேசுடா  என்று  நினைதலோ  என்னவோ  , அவள்  என்  முகம்  பார்த்த  நேரத்தை  விட  என்  கண்கள்  பார்த்த  நேரமே  அதிகம்  , அவள்  விழி  தரும்  வலியை  உணர்ந்தேன்  , அவள்  பார்வை  திருடர்கள்  என்  கண்  வழியே  என்  இதயம்  புகுந்து  இதயத்தை  திருடி  அவளிடம்  கொடுக்க  அவளோ  திருப்பி  உன்னிடம்  தரவே  மட்டன்  என்பதைப்போல  கண்களை  முடிக்கொள்வாள்  , இருண்ட  என்  வானில்  ஒரு  முழு  வட்ட  நிலா  வந்து  அது  எப்போதும்  என்னை  பார்த்து  புன்னகைத்து  கொண்டே  இருப்பதை   போல் இருந்தது , தேர்வு  நாட்களும்  ஓட  ஆரம்பித்தது  , கடைசி  தேர்வும்  வந்தது  ,

என்  சைக்கிளில்  பள்ளிக்கு  செல்லும்  கடைசிநாள் ஒன்று  , சைக்கிள்  எனது  நண்பன்  ,  நான்  செல்லும்  போதே  அவளும்  வந்தால்  , இன்றைக்காவது  பேசிவிட  வேண்டும்  என்று  மனசு  தவிக்க  ஆரம்பித்தது  , யாராவது  அவளுடன்  பேசுவதை  பார்த்து  அவளுக்கு  பிரச்னை  வரவேண்டாம்  என்று  விட்டு விட்டேன்  , இருவரும் சைக்கிளை ஓட்டவே இல்லை உருட்டிய படியே பள்ளிக்கு சென்றோம் , அந்த வழியில் உள்ள மரங்களும் பறவைகளும் கூட எங்கள் இருவரின் வருகைக்காக இன்றும் காத்திருக்கும் ,   இன்றைக்கு  கடைசி  நாள்  , என்  வானில்  இருந்த  நிலா  விளக்கிப்போகும்  , என்னை  பார்த்து  புன்னகைத்து  வந்த  புள்ளிமான்  ஓடிப்போகும்  , என்  வீடில்  சின்னதாய்  சத்தமிட்டு  கொண்டு  இருந்த  சிட்டுக்குருவியும்  வேறு  வீட்டுக்கு மாறிப்போகும்   , என்  உலகம்  கொஞ்சம்   கொஞ்சமாக  இருள்வதை  உணர்ந்தேன்  , என்னை  விட  அவளையே  அது  கலங்க  வைக்கும்  என்று  தோணிற்று  , என்  நண்பர்கள்  முகத்தில்  சந்தோசம்  கலந்த  கவலை , தேர்வு  எழுத  போகும்  போதும்  அவள்  முகம்  பார்த்தே  நேரம்  போனது  , இன்று  மட்டும்  அவளின்  முகம்  பாத்திருந்தால்  , மேகம் எல்லாம் ஒன்று கூடி கண்ணீர் விட்டு மலையாய் தன்னையே மாய்த்து கொண்டு இருக்கும் ,     10 வது  கடைசி  நாள்  , கடைசி  தேர்வு  முடிந்தது  , என்  வாழ்வில்  பூத்த  முதல்  காதலும்    முடிவை  நோக்கி  போய்கொண்டு  இருந்தது  , தேர்வு  முடிந்து  நான்  வெளியே  வந்த  உடன்  அவள்  அவளின்  தோழியிடம்  பேச  ஆரம்பித்தால் " சொல்ல  முடியாது  அடுத்த  வருஷம்  எனக்கு  கல்யாணம்  பண்ணி  வச்சாலும்  வச்சுருவாங்க  , அனா  நீ  ஒன்னும்  கவலை  படாத  டீ   எங்க  அப்பாகிட்ட  எப்புடியாவது  பேசி  நான்  11 வது  படிக்க  வந்திறேன்  , அனா  அது  கொஞ்சம்  கஷ்டம்  தான்  என்னை  படிக்கவைக்கமட்டங்கனு  நினைக்கிறேன்"  , அவள்  என்னிடம்  ஜாடையாக  பேசிய  வார்த்தைகள்  இவை  , அவள்  மனம்  தொட்டு  தோன்றிய  காதல்  அவள்  முகம்  பார்த்தே  முடிந்தது  ,  அவள்  நான்  வருவேன்  என்று  சைக்கில் வைக்கும் இடத்தில்   காத்திருந்தாள்  , நான் அங்கு சென்றதும் லேசான ஒரு புன்னகை  , என்னை விட்டு பிரிந்து போக ஆரம்பித்தால் , ஏப்ரல் மதியம் சரியான வெயில் , அவளுக்கு பின்னையே பயணிக்க ஆரம்பித்தேன் , வாழ்வில் ஒரு பெண்ணின் பின்னல் போன முதலும் முடிவுமான அந்த அத்யாயம் முடிவை நோக்கி ,  எங்களை பிரிக்கும் அந்த பாதை வந்தது,, என்னை திரும்பி பார்த்து கொண்டே போக ஆரம்பித்தால் ,   அவள்  போகும்  வரை  பார்க்க  ஆரம்பித்தேன்,  யாருக்கு  தெரியும்  இங்கு கத்தியே  இல்லாமல்  ஒட்டிய  இரண்டு  இதயத்தை  துடிக்க  துடிக்க  வெட்டி  எடுக்கிறது  காலம்  என்று .

இனிமேல்  அவளை  எப்போது  பார்பேன்  .............

10 வது  தேர்வு  முடிவு  பார்க்க  அவள்  வரவே  இல்லை 

11 வது  அவள்  எந்த  பள்ளியிலும்  சேரவே   இல்லை 

12 வது  படிக்கும்  பொது  அவளுக்கு  திருமணம் நடந்தது  மாப்பிள்ளை  வெளிநாட்டில்  வேலை  பார்க்கிறார்    , உன்னை  விட  ரொம்ப  கறுப்பாம் டா  பங்காளி இது என் நண்பன் சொன்னது....

நான்  கல்லூரியில்  சேர்ந்து  சிறிது  நாள்களில்  எங்கள்  ஊருக்கு  வந்தேன்  , மீண்டும்  கல்லூரி  சொவதற்காக  பேருந்தில்  சென்று  கொண்டிருந்தேன்  பேருந்தில்  சரியான  கூட்டம்  , எனக்கு  பின்னல்  ஒரு  பெண்  என்னங்க  ஒரு  ticket ( வாங்கித்தாங்கன்னு முடிக்காமலேயே  ) என்று  சொல்லும்  பொது  திரும்பிவிட்டேன்  அப்படியே  நிறுத்தி  விட்டாள்  கையில்  இருந்த  காசையும்   கசக்கி  விட்டாள்  , அவளை  மீண்டும்  பார்த்தேன்  , அவள்  குடி இருந்த  என்  இதயத்தை  காலம்  வெடி  வைத்து  உடைத்ததை  போல்  இருந்தது  ,  மூளைக்கு  தெரியும்  அவளை  பார்க்ககூடாது  அவள்  இன்னொருவனின்  மனைவி  என்று  அனல்  மனசுக்கு  ? , அவளிடம்  இதுவரை  நான்  ஒரு  வார்த்தை  கூட  பேசியதே  இல்லை , அவள்  என்னிடம்  பேசிய  ஒரு  வந்தாய்  என்னங்க  ஒரு  ticket அவ்வளவு  தான் , பக்கத்தில் இருந்த  யாரோ    அவளிடம்  அவளை  பத்தியும்  அவளின்  கணவனை  பத்தியும்  விசாரிக்க    ஆரம்பித்தார்கள் , அவளும்  என்னை  பார்த்துக்கொண்டே  பதில்  சொல்ல  ஆரம்பித்தால்  ,வராத  புன்னகையை  இழுத்துக்கொண்டு , நான்  நல்ல  இருக்கேன்  பாட்டி  , ஓஓஓ  அவர  அவரு  ரொம்ப  நல்லவரு  பாட்டி  , என்னை  ரொம்ப  நல்ல  பதுகிறாரு , நீ  ஒன்னும்  கவலை  படாதே  பாட்டி  , நான்  ரொம்ப  நல்ல  சந்தோசமா  இருக்கேன்  , அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது , ஒன்றுமே கேக்காத அந்த பாட்டியிடம் பேச ஆரம்பித்தால் , எதுக்கும்  கவலைபடாத  பாட்டி , நீ  நல்ல  இருக்கணும்  எப்பவும்  கடவுள்  கிட்ட  வேண்டிக்கொண்டே இருப்பேன்   , நல்ல  சாப்பிடு  பாட்டி , உடம்ப  நல்ல  பத்துக்கோ  பாட்டி ,  நீயும்  சந்தோசமா  எத  பத்தியும்  கவலை  படமா  நல்ல  இரு  பாட்டி நான் வர்றேன் , பேருந்தில் இருந்து இரங்கி அதே புன்னையுடன் அதே பார்வையுடன் என்னை பார்த்தல் , அவளின் பார்வையும் புன்னகையும் "எல்லாம் நன்மைக்கே எதற்கும் கலங்காதே என்று சொல்வதை போல் இருந்தது",   நான் இறங்க வேண்டிய இடம் இது இல்லை என்பதால் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன் ......


பயணம் தொடரும்....