புதன், மார்ச் 31, 2010

முதல் காதல் ( பாகம் 3 ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..

  காதலே உலகம் என்றாகிப்போன வாழ்வில் , அவளை ஒரு முறை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருப்பேன் , அவளும் ஒருநாள் தெரிந்து கொண்டால் தான் தோழியின் மூலமாக நான் அவளை காதலிப்பதை , உலகில் கரையாத கல் ஒன்று உண்டு அது பெண்ணின் மனம் , அவள் அதற்கு சிறந்த உதாரணம் , அவளின் தோழியின் முலமாக அவளுக்கு தெரிய வைத்ததே என் நண்பர்களும் நானும் தான் , பதில் ஒன்னும் இல்லை ,  என் உலகம் அவளான பொது  என் நண்பர்களை பிரிந்து செல்வதை உணர்ந்தேன் , என் மேல் அவளுக்கு நல்ல எண்ணம் எதுவும் இல்லை என்பதை உணர தொடங்கினேன் ,  10 வது தேர்வு நெருங்கியது , எல்லா பாடத்திலும் மதிப்பெண் குறைந்து விட்டது , ஒழுங்க படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்,
அவளை மறக்கவேண்டும் என்று ஒரு மனசு சொன்னது , அது முடியாதது என்று எனக்கே நன்றாக தெரியும் , திடிரென ஒருநாள் கருப்பு பாவாடை தாவணியில் வந்தால் , பூ வைக்கவே இல்லை , கருப்பு கலர் ரிப்பன் , சுடிதாரில் தான் எப்போதும் வருவாள் , அன்னைக்கு மட்டும் வேறு விதமாக , எங்கள் வகுப்பில் போட்டி அதிமமாக ஆரம்பித்தது படிப்பில் யார் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் என்று , வாழ்க்கைல வெற்றி பெறனும்ன அவளை மறந்தே திறனும் என்பது முடிவு , மூளை எடுத்த இந்த முடிவை மனம் மட்டும் ஏற்றுகொள்ள மறுத்தது , அவள் என்னை பார்க்க ஆரம்பித்தால் , அவள் என்னை பார்க்கும் போதெல்லாம் தலையெய் கீழே குனிய ஆரம்பித்தேன் , அடிக்கடி என்னை அனைவரிடமும் கேட்க ஆரம்பித்தால் , எவன் இல்ல இல்ல மன்னிக்கவும் அவங்க எங்க பாக்கவே முடியல , நல்ல இருக்கங்களா என்று , நானோ அவளை இனிமேல் பாக்கவே கூடாது , நாம ஆசைபட்ட எல்லாமே நமக்கு கிடைக்கும் ரொம்ப லெட்ட கூட இருக்கலாம் , அனா நம்ம ஆசைபட்ட பொருள் நமக்கு கிடைக்கும் பொது அதை எதுகிற மன நிலைல நாம இருக்க மாட்டோம் , குழந்தைகள பாருங்க அம்மான அதுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க அம்மா வருகிற வரைக்கும் ஒரு பொம்மைய குடுத்துட்டு அவங்க அம்மா வந்த பிறகும் அது அம்மாவிடம் போகாது பெருசா பக்கத்து அது பொம்மையுட விளையாடிகிட்டு இருக்கும் , அது மாதிரிதான் நாமலும் காதல் , நட்பு , படிப்பு , வேலை , இதெல்லாம் முக்கியமா தெரிஞ்ச போதும் சரியான நேரத்துல அதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுதமான கண்டிப்பா யாருமே குடுக்குறது இல்லைனுதான் சொல்லுவேன் ,  அப்படிதான் நானும் அவள் பார்க்காத வரை அவளையே சுத்தினேன் , நான் விலகிய பிறகு பார்க்க ஆரம்பித்தால் , அவள் பார்க்க ஆரம்பித்த பிறகும் , பார்க்கவே இல்லை . உலகில் செய்யவே கூடாத ஒன்று நம்பிக்கை துரோகம் , அவளை காதலித்தாலும் ஆவலுடன் சேர முடியாது , என் வீட்டில் என் மீது உள்ள நம்பிக்கை இது இரண்டும் சரியாக இருக்கவேண்டும் என்றால் அவளின் பக்கமே போக கூடாது , நானோ விலகி விலகி போக அவளோ என்னை நெருங்க ஆரம்பித்தால் காதலுடன்...
பயணம் தொடரும்....
 

செவ்வாய், மார்ச் 30, 2010

முதல் காதல் ( பாகம் 2 ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..




அவளின் மீதான காதல் கூடிக்கொண்டே செல்ல , எங்க வீட்டில் வைக்கும் fair &Lovely   அதிகமாக காலியாக ஆரம்பித்தது , சில முறை இப்படி நடந்து இருக்கிறது , என் அம்மா என்னிடம் கேட்ட கேள்வி இது ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே பெரிய பாக்கெட் fair &Lovelyவாங்கிட்டு வந்தேன் அதுக்குள்ளே காலி பண்ணிடியா     என் மனசுக்குள் நான் பேசிக்கொள்வேன் " உங்களை யாரு என்னை கருப்ப பெத்துக  சொன்னது " ஒரு நாளைக்கு ஒரு முறை போட்ட பரவா  இல்லை , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போட்ட இப்படித்தான் ஆகும் , அதே சமயம் என் அப்பாவின் குரல் வரும் எங்க இங்கே நான் சேவிங் பண்ண வச்சுருந்த ப்ளைட ஒன்னையும் காணோம் , அதுவும் அடியேனே , மிசை வளரனுமா இல்லையா , செய்யிற தொழில்ல ஒரு பக்தி இருக்கனுமா இல்லையா , சேவிங் மெசின் இல்லாம வெறும் ப்ளைட மட்டும் வச்சு இல்லாத மிசைய சேவிங் பண்ணி கொண்டு  இருந்தேன் , இது எப்புடியோ எங்க அப்பா பாத்துட்டு ஒரு நாள் என்கிட்ட வந்து எதோ கிப்ட் மாதிரி தந்தாங்க அத நான் தொறந்து பார்த்தேன் , நான் அப்புடியே சாக் ஆகிட்டேன் , உள்ள சேவிங் மெசின் இருந்தது , உனக்கு வேண்டும் என்றால்  தனிய வச்சுக்கோ என்னோட ப்ளைட காலி  பண்ணாதப்பா   அப்புடின்னு சொல்லிடு போய்டாங்க , வீட்ல அசிங்கம் மேல அசிங்கம் பட்டுகிட்டே இருந்தாலும் அவளின் நினைவு மட்டும் என்னை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு பொய் விடும் , அவளும் நானும் மட்டும் வாழும் அந்த அதிசய உலகம் .

கலையில் ஆசை ஆசையாய்  எல  ஆரம்பித்தேன் , அவளை பள்ளியில் பாப்போம் என்ற சந்தோசம் மனசு முழுவதும் , அதே 8 :30 மணிக்கு அவ வருவாள் என்று  காத்துகொண்டு இருப்பேன் , அன்னைக்கு 9 : 00  ஆகிருச்சு அவ வரவே இல்ல , ஒன்பது மணிக்கு பள்ளி ஆரம்பம் ஆகி விடும் , சரி பள்ளிக்கு பள்ளிக்கு போகம வீட்டுக்கு திரும்பலாம்னு நினைச்ச வீட்டுக்கு பொய் அந்த பக்கிய " ஏன் பள்ளிக்கூடம் போகல , உனக்கு என்ன ஆச்சு ?" அப்புடி இப்புடின்னு கேள்வி கேட்டே என்ன கொன்னுருங்க , லெட்ட அனாலும் பரவ இல்ல பள்ளிக்கே போகலாம்னு போனேன் prayer போய்கிட்டு இருந்தது , ஏன் வகுப்புக்கு பின்னல் ஒரு சுவர் இருக்கிறது நாங்க லெட்ட வந்த அதுல ஏறி குதுச்சு வகுப்புக்கு போவோம் , அப்போது ஏன் நண்பன் சொல்லித்தான் தெரியும் அவளின் அப்பா வெளிநாடில் இருந்து வந்ததால் அவள் பள்ளிக்கே வரவில்லைன்னு , இன்னைக்கு பொழுது போகாதே என நொந்து கிட்டு , நாளை எப்போது வரும் என காத்திருந்தேன் , என் நண்பனிடம் அவளை பற்றியும்  அவளின் குடும்பம் பற்றியும் கேக்க சொல்லி இருந்தேன் , அவனும் சொன்னான் விசாரித்து , அந்த பொண்ணு ரொம்ப வசதியாம்ட , முதல் பந்திலேயே  அட்டம் இழந்து விட்டேன் , அவளுக்கு கருப்புன சுத்தமாவே பிடிக்காதாம் " சூப்பர்" , பிடித்த ஹீரோ விஜய் , அட நம்ம ஆளு ,  மாவட்டத்துல 10  ல முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதே அவளின் இப்போதைய கொள்கையும் , "   10  ல பாசவது அகனும்கிறது நம்மளோட கொள்கை , அவங்க வீட்ல பணக்கார மாப்பிளைக்கு  தான் பொண்ணு கொடுப்பாங்களாம் "சரி..."
இவையெல்லாம் அவளின் மீதான காதலில் நான் வாய்த்த தன்னம்பிக்கையை அசைக்க ஆரம்பித்தது ,
அடுத்தநாள் அவளை பார்த்தேன் எப்படியும் இவ நமக்கு கிடைக்க மாட்டாள்  என்ற விரக்தியுடன் , அவள் மட்டும் எதையும் கண்டு கொள்ளாமல் சின்ன சின்ன பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து பறப்பது போல் பறந்து கொண்டு இருந்தால் சைக்கிளில் , ஒரு முறை என்னை திரும்பி பார்க்க மாட்டாளா  , ஒரு வார்த்தை பேச மாட்டாளா  என்று ஏங்கிய நாட்கள் அதிகம் , இதற்கிடையே  காலாண்டு தேர்வு வந்து விட்டது ,     தேர்வு விடுமுறையில் அவளை பார்க்க முடியாது என்ற கவலை வேறு , மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது , அவளை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் மனசு முழுவதும் , ஒருநாள் அவளை நினைத்து கொண்டே என் பேனா பேபரில் கிறுக்கிய வரிகள் இவை ,
"இமைகள் எனும் கேமராவால் படம் பிடித்து 
கண்கள் எனும் காந்தத்தால் என்னை கவர்ந்து இழுத்து 
பாசம் எனும் படைவீறாக்கள் கொண்டு என்னை சிறை பிடித்து 
இதயம் எனும் இருட்டறையில் அடைத்தவளே "
எழுதி முடித்து விட்டு பார்த்த பொது ஒரு கவிதை மாதிரி இருந்தது , என் வாழ்வில் நான் எழுதிய முதல் கவிதை இது ,
பள்ளி முடிந்து சைக்கில் எடுத்து கொண்டு வெளியே வந்தேன் , அவளை மிக அருகில் பார்த்தேன் ரெம்ப அழகா இருந்த கன்னத்தில் சின்னதா அழகா ரெண்டு பரு இருந்தது , பரு வந்த எல்லாருக்கும் அசிங்கம இருக்கும் அனா அவளுக்கு மட்டும் அழகா இருந்தது , வீட்டுக்கு சித்திட சொன்னேன் ஒரு பொண்ண எனக்கு பிடித்து  இருக்கு , என்ன அந்த பொண்ணு உங்களை மாதிரி இருக்குனு "அள்ளி விட்டேன் " அவங்களும் அப்படியப்பா , ரெண்டு பாரு இருக்கு அவளுக்கு எவளவு அழகா இருக்கு தெரியுமா , அவங்க சொன்னது அந்த பொண்ண யாரோ நல்ல பக்குரங்கனு அர்த்தம் அப்புடின நம்ம பாசைல (சைட் அடிக்கிறது  ) அர்த்தம் , அது நான் தான் எனக்கு நல்ல தெரியும் , என் எனக்கு பரு வரலை , உன்னை யாரும் பாக்கள , அப்படிய , சாமி கிட்ட வேண்டிகிட்டேன் சாமி சாமி வேகமா எனக்கும் பரு வரணும் பரு வந்த அவ என்னை பாக்குறத அர்த்தம் .... பரு வரவே இல்ல ...

அன்று நல்ல மலை எல்லோரும் கலையில் பள்ளிக்கு போய்கொண்டு இருந்தாங்க , நானும் போனேன் , மலை என்பதால் பள்ளியில் விடுமுறைன்னு சொல்லிடாங்க , எனக்கு முன்னாடியே பள்ளிக்கு போன என்னடா நாண்பர்கள் எல்லாம் பள்ளி விடுமுறை டா பள்ளிக்கு போகாதே னு சொன்னாக நான் அப்புடி இருந்தும் பள்ளிக்கு போனேன் கொட்டுற மலையில் , இன்னைக்கு விடுமுறை என்பதால் அவளை பார்க்க முடியாது ஒரு முறையாவது அவளை பார்க்க வேண்டும் என்று சைக்கிளில் வேகமாக சென்றேன் ....
பயணம் தொடரும் ...

திங்கள், மார்ச் 29, 2010

முதல் காதல்.. வாழ்கை ஒரு தொடர் பயணம் ...!





காதல் ஒரு அழகான உணர்வு , எல்லோருக்குள்ளும் காதல் இருக்கும் இருக்கணும் அப்புடி இல்லாம நான் யாரையும் காதல் பண்ணலைன்னு சொன்ன அவங்களா நல்ல மருத்துவரை பொய் பார்க்கலாம் , 
ரொம்ப சந்தோசமா போய்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு வந்தால் , நான் கல்லூரி படிக்கும் பொது இல்ல , 10 வது படிக்கும் பொது , 8 வது வரை படித்து விடுதியில் தங்கி , எனக்கு அது பிடிக்காமல் போகவே , என் ஊருக்கு பக்கத்து ஊரில் உள்ள  ஒரு பள்ளிக்கு படிக்க வந்தேன் ,   9 ஆம் வகுப்பில் சேர்ந்த பொது அந்த வகுப்பில் உள்ள பாதிப்பேர் என் ஊரை சேர்ந்த என் நண்பர்கள் , 

அவளை  சில  முறை  பார்த்த  போதும்  ஒன்றும்  தோன்றியது  இல்லை , எங்கள்  பள்ளிக்கூடம்  9 மணிக்கு  நான்  பள்ளிக்குள்  8:30 மணிக்கு  வருவேன்  , அதே  சமயம்  அந்த  பொண்ணும்  வருவாள்  இது  எதார்த்தமானது  என்றே  நான்  நினைக்கிறேன்  , தொடர்ந்து  நாங்கள்  இருவரும்  ஒரே  நேரத்தில்  வருவதால்  நண்பர்கள்  என்னை  கிண்டல்  பண்ண  ஆரம்பித்தார்கள்  , எங்களுக்குன்னு  ஒரு  group இருந்தது  அதில்  எல்லாரும்  love பண்ணி  கொண்டு  இருந்தாங்க  , நான்  மட்டும்  பண்ணாம இருந்தேன்  , ஒரு  தொகுதி  பங்கீடு   மாதிரி  அது  உன்  ஆளு  இது  என் ஆளுன்னு    ஒவ்வொரு  பொண்ணையும் இவங்களே  அவங்க  அவங்க  அளக்கிகுவாங்க இதுல என்ன  முக்கிய அம்சம்ன  அந்த  பொண்ணுகளுக்கு  இந்த  மேட்டர்  தெரியாது  ,
 என்னோட  நண்பர்கள்  என்னையும்  அந்த  பொண்ணையும்  சேர்த்து  வச்சு  ரொம்ப  கிண்டல்  பண்ண  ஆரம்பிச்சாங்க  , காலாண்டு  தேர்வு  நெருங்கும்  பொது  ஒருநாள்  நைட்  புத்தகத்த  துறந்து  வச்சுகிட்டு  தூங்கிகிட்டு  இருந்தேன்  ,  அன்னைக்கும்  அப்படிதான்..
அப்படி  பொய்  கிட்டு  இருக்கும்  பொது  திடிர்னு  அவளோட  யாபகம்  முதல்  முதல்  ல  எனக்குள்  வந்தது  என்  அந்த  பொண்ண  நினைக்கிறோம்  அப்பறம்  என்னோட  நண்பர்கள்  ரொம்ப  கிண்டல்  பண்ணுவாங்கனு  தோனுச்சு  , இரவு  12 மணி  ஆகிருச்சு  TV பக்க  ஆரம்பித்தேன்  அவளின்  யாபகம்  தொடர்ந்தது  ,  பொய்  தூங்கிட்டேன்  கனவிலும்  வந்தால்  , தூக்கமும்  போச்சு  , எழுந்து  நடக்க  ஆரம்பித்தேன்  , தூங்கு  ப  காலைல  பள்ளிக்கூடம்    போகணும்  ல  அம்மாவின்  குரல் , அவளின்  நினைவு  என்  நிழலை  போல்   தொடர்ந்தது , மீண்டும்  வந்து  துங்கினேன்  இல்லை  தூங்க  முயற்சி  செய்தேன்  அப்போது  என்னோல்  அவள்  மேல்  ஏற்பட்ட  chemistry ஒரு  மாதிரியான  வலி  இதயத்தில்  மனசெல்லாம்  அவ  இருந்தால்  ஒரு  மாதிரி  மனசு  வலித்த  போதும்  அந்த  சுகம்  எனக்கு  பிடித்தது  , என்  துக்கத்தை  கேடுதவள்  , கலையில்  எழுந்தேன்  எனக்குள்  கேட்ட  முதல்  கேள்வி  இதற்கு  பெயர்  என்ன  என்னால்  சொல்ல  முடியாத  ஒரு  உணர்வு  ஒரு  பொண்ணின்  மேல்  , ஒரு  வேலை  காதலா ?
பள்ளிக்கு  பொய்  கடைசி  பெஞ்ச்  ( கல்லூரி  முடிக்கும்   வரை  நான்  கடைசி  பெஞ்ச்  தான்  புரியலையா  மாப்ள  பெஞ்ச் )  ல  இருந்த  நண்பனுடன்  இரவில்  நடந்ததை  சொன்னேன்  , உடனே  அவன்  “ டே பங்காளி  கைய  குடுடா  confirm ட  இது  காதல்  தான் ” எனக்கு  கொஞ்சம்  பயம்  கலந்த  சந்தோசம் 
எனக்குள்  கொஞ்சம்  கொஞ்சமாக  அவள்  உள்ளே  வர  ஆரம்பித்தால்  , 10 வது  தான்  அங்க l ஏரியா  வில்  அனைவரும்  படிக்கும்  கடைசி  வகுப்பு  , என்  தலைஎழுத்து  10 வதோடு  முடிந்து  விடுமோ  என்று  நினைத்தேன்  , என்ன  எங்க  ஏரியா  ல  காலேஜ்  சே  இல்ல  , காதலர்  தினம்  படத்தில்  வரும்  இந்த  டயலாக்  எனக்கு  ரொம்ப  பிடிக்கும்  “ ஏழை  நாய்  எல்லாம்  எதுக்குடா  படிப்பு ” , ஒரு  கிராமத்தில்  பிறந்தது  எங்களோட  தப்பா  , என்னுடன்   படித்த  என்  நண்பர்கள்  யாருமே  கல்லூரி  வரை  வரவே  இல்லை  என்னை  தவிர  என்பது  வேறு  கொடுமை  , நல்ல  படிச்சா  பசங்கள  கூட  படிக்க  வைக்க  மட்டங்க , அனா பணம்  மட்டும்  நெறைய  இருக்கும்  , நல்ல  படிச்சு  பெரிய  ஆளா    அக  வேணும்  கிறது  எனக்குள்  இருக்கும்  வெறி , அப்புடி  ஆவேனகிறது  ?

பள்ளி  முடிந்து  வெளியே  வந்தேன்  , அவளை  பார்த்தேன் ,  முதல்  முதலாக  ஒரு  பெண்ணை  பார்த்தேன்  அங்குலம்  அங்குலமாக  , ரொம்ப  அழகா  இருந்த  , ஒரே  நேரத்துல  வனத்தில்  ஆயிரம்  நிலா  வந்த  எப்புடி  இருக்கும்  அப்புடி , புள்ளி  மனுக்கு    பெக்   மட்டி  பள்ளிக்கூடம்    போக  சொன்ன  எப்புடி  இருக்கும்  அப்புடி  இருந்த  , என்  மனசு  மட்டும்  என்கிட்ட  இல்லவே  இல்லன்னு  தோனுச்சு  , பள்ளிகூடத்த  விட்டு  போகவும்  மனசே  இல்லை , அவளோட  lady bird cycle என்னோடது  herculase , அவ  cycle முன்னாடி  கூடை  மதி  ஒன்னு  இருக்கும்  அதுலதான்  அவளோட  பெக்  க  வைப்ப  , அவளோட  close friend ஒருத்தி , ரெண்டு  பெரும்  ஒன்னாவே  தான்  இருபங்க  , நாங்க  அவங்களுக்கு  வச்ச  பேரு  ரெட்ட  கிளி  (காதலிக்கிறதுக்கு    முன்னாடி )
அவள்  மட்டும்  இல்ல  அவளோட  cycle , பெக்  எல்லாம்  கூட  எனக்கு  அழகா  தெரிஞ்சது  , அன்னைக்கு   எல்லாமே  எனக்கு  புதுசா  இருந்தது    , எனக்கு  cycle ஓட்ட  ரொம்ப  புடிக்கும்  அதுவும்  வேகமா  பள்ளிகுடதுல  இருந்து  10 mins ல  வீட்டுக்கு  போயிருவேன்  , எங்க  ஊருக்கும்     அவளின்  ஊருக்கும்  ஒரே  road தான்  போகும்  ஒரு  வளைவு  வந்து  ரெண்டு  ரோட  பிரியும்  அங்க  நாங்க  பிரிவோம்  , நாளை  சந்திப்பொம்    என்ற  நம்பிக்கையில்  , அவள்  மேல்  என்  இதயத்தில்  எழுதப்பட்ட  காதல்  , எதோ  வானில்  பறந்தது  போல்  யாபகம்  , வீட்டுக்கு    போகும்  பொது  திடிரென  தோன்றியது , அவள்  என்னை  காதலிப்பாள  , அவ   ரொம்ப  சிகப்பு  நானோ  ரொம்ப  கருப்பு  , அவளுக்கு  சுண்டி  விடணும்னு  நெனச்சாலே  ரேதம்  வந்துரும்  எனக்கோ  கத்தியவச்சு    கிரினாலும்  ரெத்தம்  வராது  , சிகப்பகனும்   என்ன  பண்ணலாம்  idea fair & lovely, அப்பறம்  முஞ்சில  மிசையே  இல்லை  மிசை    இருந்தாதான்  பொண்ணுகளுக்கும்  பிடிக்குமாம்   ok , அப்பறம்  நல்ல  படிக்கிறவங்கள  புடிக்குமாம்  , ok, அழகா  இருக்கிற  பசங்கள  புடிக்குமாம்  அனா  இது  கொஞ்சம்  இல்லை  நெறைய    கஷ்டம்  எப்புடி  அழகா  ஆகுறது  , அம்மா   விடம் கேட்ட கேள்வி இது நான் எம்மா கருப்ப பிறந்தேன் , என்ப நீ அழகா தானே இருக்கே , அனா கருப்ப இருக்கனே உங்க கலர் ல என்னை பெக்கம எம்மா அப்பா கலர் ல பேத்திங்க  , போடா எனக்கு வேலை இருக்கு இதுக்கெல்லாம் நம்ம சித்திதான் சரியான ஆளு என்ன கேட்டலும் பதில் சொல்லும் பக்கி  ,    வேகமா  சித்திட  பொய்  சித்தி  என்னை  பசங்க  எல்லாம்  என்னை  கருப்ப  இருக்கமுனு  கிண்டல்  பண்டரங்க  அப்புடின்னு  ஒரு  பிட்ட  போட்டேன்  ,  யாரு  சொன்னானு  கேட்டாங்க  , அத  விடுங்க  நான்  ஏன்  கருப்ப  பிறந்தேன்னு  கேட்டேன்  , ஆம்பளைக்கு  அதுதாப்ப  அழகு  , பொன்னுகுதான்  கலர்  தேவை  உனக்கு    தேவை    இல்லை  , அவங்க  என்ன  சொன்ன  போதும்  மனசு  ஏத்துக்கவே  இல்ல  நான்  அழகா  அகனும்  அதுக்கு  என்ன  வழி  , வழி  சொன்னங்க  கடலை  மாவு , night துங்கும்  பொது  போட்டுடு  தூங்கு  ,"சூப்பர்" அப்பறம்  fair & lovely போடு , அப்பறம்  lux soap போடு  , ok done , “சிங்க  மொன்று  புறப்பட்டதே  அதுக்கு  நல்ல  காலம்  பொறந்துருச்சு ”

கடலை  மாவு  , சந்தானம்  , fair & lovely எல்லாத்தையும்  மூஞ்சியில்    பூச    ஆரம்பித்தேன்  , அவள்  மேலான  காதலும்  நான்  கருப்பு  என்ற தாழ்வு மனப்பான்மையும்   என்னுள்  பெருகிக்கொண்டே   போனது ….

பயணம் தொடரும்....
     

சனி, மார்ச் 27, 2010

எப்புடி எல்லாம் வாழ்த்து சொல்லுறாங்கப்பா...!



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தம்பி  நீ  ஒரு  வரலாறு 
நீ  வரலாறுல  மார்க் 
எடுக்கததால  மதிப்பு  இல்ல 
உனக்கு  கிடைக்காத  மார்க்குக்கு 
இதபதி  நாளைய  வரலாறு  சொல்லும் 

உன்  அழகை  அழகாய்  காட்டாத 
கண்ணாடி  கண்ணாடியே  இல்லை 
இருந்த  தானே  காட்ட  முடியும்னு 
சத்தியமா  நான்  இல்ல 
கண்ணாடி  ஏகதாளம்  பேசலாம் 
நீ  கண்  கலங்காதே 
கண்ணாடியை    ஒடசுறலாம் 

பைக்குக்கு  இருக்க  மதிப்பே 
போச்சு  இந்த  உலகத்துள்ள 
யாரும்  வங்க  மெட்ராங்கன்னு  இல்ல 
உனக்கு  பைக்  ஓட்ட  இல்ல 
உருட்ட  கூட   தெரியதுன்குரதால   
நாளைய  பர்முல  1 பைக்  ரேஸ் 
உன்ன  பத்தி  பேசட்டும் 
 
இரவு  இரவில்  வர  பயந்திருக்கும் 
சூரியனை  பார்த்து  இல்லை 
இரவில்    தனியாக  சொல்லாத 
மாவீரன்  நீ  வெளியே 
அம்மாவை  துணைக்கு  கூட்டி  வருவதால் 
தமிழனின்  வீரம்  உன்னை  பத்தி 
நாளைக்கு  எழுதட்டும் 

கம்ப்யூட்டர்  ல  புலி  நீ 
சாம்பார்ல  கரைக்கிற  புளி  இல்ல 
கம்ப்யூட்டர்  ரையே  கரைசு  குடிச்ச  புலி  நீ 
C program ல  prime no program
எழுத  முடியாம  நீ  முளிச்சதால   
Turbo C யே  டர்  ஆகிருச்சு 
இதபத்தி  C# .net 2010 ல 
Detail ல  வரட்டும் 
  
என்  தம்பியாய், தோழனாய்  , என்  வாழ்வில்  கலந்து  விட்ட  என்  அன்பு  தம்பி  , வாழ்நாள்  முழுவதும்    சந்தோசமாகவும்  , அனைத்திலும்  போராடி  வென்று  ஒரு  சதனையலனாக  வாழ  வாழ்த்துக்கள்  , நீங்களும்  வாழ்த்துங்கள் …
 

புதன், மார்ச் 24, 2010

பயணம்...!

எதையோ வேண்டி (பணமோ, பதவியோ, படிப்போ)  தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வில் முட்களையும் புதர்களையும் தண்டி நம் பதங்கள் பயணிக்கும் வேளையில் சில நல்ல இதயங்களும் நம்முடனே பயணிக்கும் காலத்தின் கோலமாய் நம் நல்ல மனிதர்களை பிரிய நேர்த போதும் நாம் மனம் மட்டும் ஒருபோதும் அவர்களை மறப்பது இல்லை...

அப்படி என் சிறு வயதில் என் இதயத்தில் வாழ்த்த என் தோழி பற்றிய பதிவு இது...

என் வீட்டுக்கு பக்கத்து வீடு அவளுடையது , அழகும் அன்பும் நிறைந்த என் தோழி , அவளவு நன்றாக படிக்க மாட்டாள் , அது தேவையற்றதும் கூட , நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் பக்கத்தில் இருப்போம் , என்னிடம் காசு இல்லாத நேரத்தில் அவளிடம் இருந்து காசு வாங்கிய இல்லை இல்லை அப்பியது போல் யாபகம் , பள்ளி முடிந்து இருவரும் ஒன்றாகவே வீட்டிற்கு செல்வோம் , மழைக்காலங்களில்  ஆட்டு மந்தைகளை காட்டி அது என்ன என்று கேட்பாள் நானோ அவை சிங்கம் என்பேன் கரப்பான் பூச்சியை பார்த்தாலே ஓடி வந்து என்னை காட்டி கொண்டு கண்களை மோடிக்கொள்வாள் சிங்கம் என்றால் சொல்லவே வேண்டாம் , என் கைகளை பிடித்து " என்னை எப்படியாவது இந்த சிங்கங்களிடம் இருந்து காப்பாற்று  நானும் ஒரு ஹீரோ போல கவலை படாதே உன்னை பத்திரமாக அழைத்து செல்கிறேன் என்பேன்" துரத்தில் வரும் ஆட்டுக்கும் சிங்கத்திற்கும்  வித்தியாசம் தெரியவில்லை என்பதா இல்லை நான் சொன்னதால் ஆடும் சிங்கமானதா என்று எனக்கு தெரிய வில்லை,
நான் ஆண் அவள் பெண் என்ற வேறுபாடின்றி ஓடிய வாழ்கை எங்களுக்கு நாளுக்கு நாள் வயது என்ற ஒன்றையும் தந்தது , சில முறை அவள் கேட்கும் கேள்வி இது "என்னை உனக்கு பிடிக்குமா நான் ஆம் என்பேன் உங்கள் அம்மாவை விட என்னை பிடிக்குமா இருவரையும் பிடிக்கும் என்பேன் உடனே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் அம்மாவை விட என்பாள்" அவளது சிரிப்பு சத்தம் என் காதுகளில் இன்னமும் கேட்டு கொண்டே இருக்கிறது , நான் படிப்பதற்காக வெளியூர் சென்று விட்டேன்
அதன் பிறகு எப்போதாவது சந்திப்பேன் , சில வார்த்தைகளுடன் நிருதிக்கொள்வாள்,  சில நாட்களில் அவள் திருமண மாகி கணவனுடன் சென்று விட்டாள், அதன் பிறகு பார்க்கவே இல்லை 10 வருடங்களுக்கு  பின் சென்ற வருடம் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் என்னை பார்ப்பதை கவனித்தேன் அவள் என் தோழி தான் , என்னுடன் விளையாடி என்னை சுற்றி வந்தவள் , என்னுடன் ஒரு வார்த்தை கூட  பேச வில்லை , அவள் போக வேண்டிய பேருந்து வந்தது , பேருந்தில் ஏறி ஒரு பார்வை பார்த்தல் அந்த பார்வையின் அர்த்தம் நன்றாக  இருக்கிறாயா  என்று புரிந்து கொண்டேன் , ஒரு புன்னகை செய்து தனது குழந்தையின் முகத்தை என்னை பார்க்கும் படி திருப்பினாள் , இது எனது குழந்தை தோழனே எனது வாழ்கை சந்தோசமா போய்கிறது  என்பதற்கு அடையாளமாய் புன்னகையை  விட்டு சென்றால் , அவள் சிந்திய புன்னகையை எடுத்துக்கொண்டு திரும்பினேன்....







சனி, மார்ச் 13, 2010

வாழ்கை...!

ரை  தாங்கும்  நிலம்
உளியை  தாங்கும்  சிலை 
உன்னைதாங்கும்   பூமியை  போல்
தாங்கிகொள்    வலியை
வெற்றியின்  வழி  
அதிலிருந்து  தொடங்கலாம்
   
வேகமாக   மட்டும்  அல்ல
கடைசி  வரை  வோடுபவனே  வெல்வான்
கோப்பையை  மட்டும்  அல்ல  வாழ்க்கையையும்  

 உலகெங்கும்   நிரம்பிய  காதல்   
காதலால்  காதலுக்க  காதலால்  
உருவாக்கப்பட்ட  உலகில்  
ஒருகாதல்  போனால்  என்ன..?
உன்  காதலின்  உண்மை  உலகறியும்

புயல்  அடித்தாலும்  சாயாத  நீ  
தென்றல்   அடித்து  சாயலாமா  
காதலை  தீயாக்கி  அதிலே  
கிடந்து  வேகலாமா 

ஆயிரம்   சூரியனின்   ஒளி  கொண்ட  
உன்  முகம்  வடிப்போனால்  
எங்கு  செல்ல
பூமிக்கு  ஒளிகுடுக்க

இன்று  என்னுடைய  ஓன்று  
நாளை  எவனுடையதோ  என்ற  வாழ்வில்
கவலை  பட  ஒன்றுனில்லை  தோழா 
என்று  பிறந்தேன் 
என்று  மடிவேன்  என்று  அறியாத  வாழ்வில் 
கண்ணீர்  விட  ஒன்றுமில்லை  தோழி ..,

பூக்களுக்கும்  தென்றலுக்கும்    நடுவே 
பூவின்  வாசனை  உணர 
தென்றலை   அனுவிக்க 
ஒரு  வாழ்கை  தந்த கடவுளுக்கு 
நன்றி  சொல்  மனமே..!

ஆடி  அடங்கும்  வாழ்வில் 
நீ  மட்டும்  அடங்கியே  இருப்பது  ஏன்..?

அதிக  நாளாக  பட்டம்  வாங்காமல் 
உன்னிடமிருக்கும்  கவலைகளுக்கு
கொடுக்கலாம்  பட்டம் 
அனுப்பி  வைக்கலாம்  (farewell ) பெர்வல்  கொண்டாடி

தோல்விகள்  நிரந்தரம்  இல்லை 
வெற்றி  புதிரனவையும்  இல்லை 
கண்ணீர்  உனக்கனதும்    இல்லை

குழந்தையின்  சிரிப்பு 
மனைவின்  முத்தம் 
நண்பனின்  அணைப்பு 
தாயின்  பாசம் 
தந்தையின்  அறிவுரை 
எல்லாமே  தேவையறதுதான்   
வாழ்வும்  சுமையனதுதான்
நீ  உன்னை  உணராதவரை …

  -ஆழ் கடலின் அமைதியும் , பூக்களின் மௌனமும் , கொண்ட உன்னில் தொடங்கட்டும் புயல் சுனாமியாய்  அடித்து செல்ல வெற்றியை...
இனி புன்னகைதேசம் புயல் தேசமாய்.......