திங்கள், மார்ச் 29, 2010

முதல் காதல்.. வாழ்கை ஒரு தொடர் பயணம் ...!





காதல் ஒரு அழகான உணர்வு , எல்லோருக்குள்ளும் காதல் இருக்கும் இருக்கணும் அப்புடி இல்லாம நான் யாரையும் காதல் பண்ணலைன்னு சொன்ன அவங்களா நல்ல மருத்துவரை பொய் பார்க்கலாம் , 
ரொம்ப சந்தோசமா போய்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு வந்தால் , நான் கல்லூரி படிக்கும் பொது இல்ல , 10 வது படிக்கும் பொது , 8 வது வரை படித்து விடுதியில் தங்கி , எனக்கு அது பிடிக்காமல் போகவே , என் ஊருக்கு பக்கத்து ஊரில் உள்ள  ஒரு பள்ளிக்கு படிக்க வந்தேன் ,   9 ஆம் வகுப்பில் சேர்ந்த பொது அந்த வகுப்பில் உள்ள பாதிப்பேர் என் ஊரை சேர்ந்த என் நண்பர்கள் , 

அவளை  சில  முறை  பார்த்த  போதும்  ஒன்றும்  தோன்றியது  இல்லை , எங்கள்  பள்ளிக்கூடம்  9 மணிக்கு  நான்  பள்ளிக்குள்  8:30 மணிக்கு  வருவேன்  , அதே  சமயம்  அந்த  பொண்ணும்  வருவாள்  இது  எதார்த்தமானது  என்றே  நான்  நினைக்கிறேன்  , தொடர்ந்து  நாங்கள்  இருவரும்  ஒரே  நேரத்தில்  வருவதால்  நண்பர்கள்  என்னை  கிண்டல்  பண்ண  ஆரம்பித்தார்கள்  , எங்களுக்குன்னு  ஒரு  group இருந்தது  அதில்  எல்லாரும்  love பண்ணி  கொண்டு  இருந்தாங்க  , நான்  மட்டும்  பண்ணாம இருந்தேன்  , ஒரு  தொகுதி  பங்கீடு   மாதிரி  அது  உன்  ஆளு  இது  என் ஆளுன்னு    ஒவ்வொரு  பொண்ணையும் இவங்களே  அவங்க  அவங்க  அளக்கிகுவாங்க இதுல என்ன  முக்கிய அம்சம்ன  அந்த  பொண்ணுகளுக்கு  இந்த  மேட்டர்  தெரியாது  ,
 என்னோட  நண்பர்கள்  என்னையும்  அந்த  பொண்ணையும்  சேர்த்து  வச்சு  ரொம்ப  கிண்டல்  பண்ண  ஆரம்பிச்சாங்க  , காலாண்டு  தேர்வு  நெருங்கும்  பொது  ஒருநாள்  நைட்  புத்தகத்த  துறந்து  வச்சுகிட்டு  தூங்கிகிட்டு  இருந்தேன்  ,  அன்னைக்கும்  அப்படிதான்..
அப்படி  பொய்  கிட்டு  இருக்கும்  பொது  திடிர்னு  அவளோட  யாபகம்  முதல்  முதல்  ல  எனக்குள்  வந்தது  என்  அந்த  பொண்ண  நினைக்கிறோம்  அப்பறம்  என்னோட  நண்பர்கள்  ரொம்ப  கிண்டல்  பண்ணுவாங்கனு  தோனுச்சு  , இரவு  12 மணி  ஆகிருச்சு  TV பக்க  ஆரம்பித்தேன்  அவளின்  யாபகம்  தொடர்ந்தது  ,  பொய்  தூங்கிட்டேன்  கனவிலும்  வந்தால்  , தூக்கமும்  போச்சு  , எழுந்து  நடக்க  ஆரம்பித்தேன்  , தூங்கு  ப  காலைல  பள்ளிக்கூடம்    போகணும்  ல  அம்மாவின்  குரல் , அவளின்  நினைவு  என்  நிழலை  போல்   தொடர்ந்தது , மீண்டும்  வந்து  துங்கினேன்  இல்லை  தூங்க  முயற்சி  செய்தேன்  அப்போது  என்னோல்  அவள்  மேல்  ஏற்பட்ட  chemistry ஒரு  மாதிரியான  வலி  இதயத்தில்  மனசெல்லாம்  அவ  இருந்தால்  ஒரு  மாதிரி  மனசு  வலித்த  போதும்  அந்த  சுகம்  எனக்கு  பிடித்தது  , என்  துக்கத்தை  கேடுதவள்  , கலையில்  எழுந்தேன்  எனக்குள்  கேட்ட  முதல்  கேள்வி  இதற்கு  பெயர்  என்ன  என்னால்  சொல்ல  முடியாத  ஒரு  உணர்வு  ஒரு  பொண்ணின்  மேல்  , ஒரு  வேலை  காதலா ?
பள்ளிக்கு  பொய்  கடைசி  பெஞ்ச்  ( கல்லூரி  முடிக்கும்   வரை  நான்  கடைசி  பெஞ்ச்  தான்  புரியலையா  மாப்ள  பெஞ்ச் )  ல  இருந்த  நண்பனுடன்  இரவில்  நடந்ததை  சொன்னேன்  , உடனே  அவன்  “ டே பங்காளி  கைய  குடுடா  confirm ட  இது  காதல்  தான் ” எனக்கு  கொஞ்சம்  பயம்  கலந்த  சந்தோசம் 
எனக்குள்  கொஞ்சம்  கொஞ்சமாக  அவள்  உள்ளே  வர  ஆரம்பித்தால்  , 10 வது  தான்  அங்க l ஏரியா  வில்  அனைவரும்  படிக்கும்  கடைசி  வகுப்பு  , என்  தலைஎழுத்து  10 வதோடு  முடிந்து  விடுமோ  என்று  நினைத்தேன்  , என்ன  எங்க  ஏரியா  ல  காலேஜ்  சே  இல்ல  , காதலர்  தினம்  படத்தில்  வரும்  இந்த  டயலாக்  எனக்கு  ரொம்ப  பிடிக்கும்  “ ஏழை  நாய்  எல்லாம்  எதுக்குடா  படிப்பு ” , ஒரு  கிராமத்தில்  பிறந்தது  எங்களோட  தப்பா  , என்னுடன்   படித்த  என்  நண்பர்கள்  யாருமே  கல்லூரி  வரை  வரவே  இல்லை  என்னை  தவிர  என்பது  வேறு  கொடுமை  , நல்ல  படிச்சா  பசங்கள  கூட  படிக்க  வைக்க  மட்டங்க , அனா பணம்  மட்டும்  நெறைய  இருக்கும்  , நல்ல  படிச்சு  பெரிய  ஆளா    அக  வேணும்  கிறது  எனக்குள்  இருக்கும்  வெறி , அப்புடி  ஆவேனகிறது  ?

பள்ளி  முடிந்து  வெளியே  வந்தேன்  , அவளை  பார்த்தேன் ,  முதல்  முதலாக  ஒரு  பெண்ணை  பார்த்தேன்  அங்குலம்  அங்குலமாக  , ரொம்ப  அழகா  இருந்த  , ஒரே  நேரத்துல  வனத்தில்  ஆயிரம்  நிலா  வந்த  எப்புடி  இருக்கும்  அப்புடி , புள்ளி  மனுக்கு    பெக்   மட்டி  பள்ளிக்கூடம்    போக  சொன்ன  எப்புடி  இருக்கும்  அப்புடி  இருந்த  , என்  மனசு  மட்டும்  என்கிட்ட  இல்லவே  இல்லன்னு  தோனுச்சு  , பள்ளிகூடத்த  விட்டு  போகவும்  மனசே  இல்லை , அவளோட  lady bird cycle என்னோடது  herculase , அவ  cycle முன்னாடி  கூடை  மதி  ஒன்னு  இருக்கும்  அதுலதான்  அவளோட  பெக்  க  வைப்ப  , அவளோட  close friend ஒருத்தி , ரெண்டு  பெரும்  ஒன்னாவே  தான்  இருபங்க  , நாங்க  அவங்களுக்கு  வச்ச  பேரு  ரெட்ட  கிளி  (காதலிக்கிறதுக்கு    முன்னாடி )
அவள்  மட்டும்  இல்ல  அவளோட  cycle , பெக்  எல்லாம்  கூட  எனக்கு  அழகா  தெரிஞ்சது  , அன்னைக்கு   எல்லாமே  எனக்கு  புதுசா  இருந்தது    , எனக்கு  cycle ஓட்ட  ரொம்ப  புடிக்கும்  அதுவும்  வேகமா  பள்ளிகுடதுல  இருந்து  10 mins ல  வீட்டுக்கு  போயிருவேன்  , எங்க  ஊருக்கும்     அவளின்  ஊருக்கும்  ஒரே  road தான்  போகும்  ஒரு  வளைவு  வந்து  ரெண்டு  ரோட  பிரியும்  அங்க  நாங்க  பிரிவோம்  , நாளை  சந்திப்பொம்    என்ற  நம்பிக்கையில்  , அவள்  மேல்  என்  இதயத்தில்  எழுதப்பட்ட  காதல்  , எதோ  வானில்  பறந்தது  போல்  யாபகம்  , வீட்டுக்கு    போகும்  பொது  திடிரென  தோன்றியது , அவள்  என்னை  காதலிப்பாள  , அவ   ரொம்ப  சிகப்பு  நானோ  ரொம்ப  கருப்பு  , அவளுக்கு  சுண்டி  விடணும்னு  நெனச்சாலே  ரேதம்  வந்துரும்  எனக்கோ  கத்தியவச்சு    கிரினாலும்  ரெத்தம்  வராது  , சிகப்பகனும்   என்ன  பண்ணலாம்  idea fair & lovely, அப்பறம்  முஞ்சில  மிசையே  இல்லை  மிசை    இருந்தாதான்  பொண்ணுகளுக்கும்  பிடிக்குமாம்   ok , அப்பறம்  நல்ல  படிக்கிறவங்கள  புடிக்குமாம்  , ok, அழகா  இருக்கிற  பசங்கள  புடிக்குமாம்  அனா  இது  கொஞ்சம்  இல்லை  நெறைய    கஷ்டம்  எப்புடி  அழகா  ஆகுறது  , அம்மா   விடம் கேட்ட கேள்வி இது நான் எம்மா கருப்ப பிறந்தேன் , என்ப நீ அழகா தானே இருக்கே , அனா கருப்ப இருக்கனே உங்க கலர் ல என்னை பெக்கம எம்மா அப்பா கலர் ல பேத்திங்க  , போடா எனக்கு வேலை இருக்கு இதுக்கெல்லாம் நம்ம சித்திதான் சரியான ஆளு என்ன கேட்டலும் பதில் சொல்லும் பக்கி  ,    வேகமா  சித்திட  பொய்  சித்தி  என்னை  பசங்க  எல்லாம்  என்னை  கருப்ப  இருக்கமுனு  கிண்டல்  பண்டரங்க  அப்புடின்னு  ஒரு  பிட்ட  போட்டேன்  ,  யாரு  சொன்னானு  கேட்டாங்க  , அத  விடுங்க  நான்  ஏன்  கருப்ப  பிறந்தேன்னு  கேட்டேன்  , ஆம்பளைக்கு  அதுதாப்ப  அழகு  , பொன்னுகுதான்  கலர்  தேவை  உனக்கு    தேவை    இல்லை  , அவங்க  என்ன  சொன்ன  போதும்  மனசு  ஏத்துக்கவே  இல்ல  நான்  அழகா  அகனும்  அதுக்கு  என்ன  வழி  , வழி  சொன்னங்க  கடலை  மாவு , night துங்கும்  பொது  போட்டுடு  தூங்கு  ,"சூப்பர்" அப்பறம்  fair & lovely போடு , அப்பறம்  lux soap போடு  , ok done , “சிங்க  மொன்று  புறப்பட்டதே  அதுக்கு  நல்ல  காலம்  பொறந்துருச்சு ”

கடலை  மாவு  , சந்தானம்  , fair & lovely எல்லாத்தையும்  மூஞ்சியில்    பூச    ஆரம்பித்தேன்  , அவள்  மேலான  காதலும்  நான்  கருப்பு  என்ற தாழ்வு மனப்பான்மையும்   என்னுள்  பெருகிக்கொண்டே   போனது ….

பயணம் தொடரும்....
     

6 கருத்துகள்:

  1. ஆட்டோ கிராப் ரேஞ்குள்ளடா இருக்கு...................ஏண்டா தம்பி.....உனக்குள் இத்தனை காதல் அனுபவங்களா..ரொம்ப சுவரஸ்யமா இருக்குடா....தொடர்ந்து எழுது......

    " கருப்பா இருக்கிறவங்கள எல்லாம் பொண்ணுக காதலிக்க மாட்டாங்கன்னு எவன்டா சொன்னது "

    தம்பி.... நீ கருப்பு....ஆனா அழகு.....!

    பதிலளிநீக்கு
  2. தம்பி, அழகான ஒரு காதலை திரும்பவும் ஞாபகம் செய்வதாய் இருக்கிறது உனது படைப்பு. உனது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து 'பாடம்' படித்த உணர்வு எழுகிறது. இதை படிக்கும் போது எனக்கு உடனே தோன்றிய கமென்ட் "நீ ரொம்ப தேறிட்டடா!!!"

    பதிலளிநீக்கு
  3. nandri deva anna, meethamullavai nallai thodarum ,
    nandri jerald anna enna neenka en rasikana akidinkala " namkku oru adima saikkiyachu"

    பதிலளிநீக்கு
  4. hai pethaperumal h r u da , send ur contact no da , where are u now, i hope you know my email : rajagopal.siva@gmail.com

    பதிலளிநீக்கு
  5. hey Siva, Ladybird cycle and munnaadi kutty box fa keeping things.. Enaku enoda cycle nyabagam vathidichu.. Sema comedy po.. Pangaali.. neeyum back bench thaanaa.. cha enaku school veraikum girls school thaan :(

    பதிலளிநீக்கு