ஏரை தாங்கும் நிலம்
உளியை தாங்கும் சிலை
உன்னைதாங்கும் பூமியை போல்
தாங்கிகொள் வலியை
வெற்றியின் வழி
அதிலிருந்து தொடங்கலாம்
வேகமாக மட்டும் அல்ல
கடைசி வரை வோடுபவனே வெல்வான்
கோப்பையை மட்டும் அல்ல வாழ்க்கையையும்
உலகெங்கும் நிரம்பிய காதல்
காதலால் காதலுக்க காதலால்
உருவாக்கப்பட்ட உலகில்
ஒருகாதல் போனால் என்ன..?
உன் காதலின் உண்மை உலகறியும்
புயல் அடித்தாலும் சாயாத நீ
தென்றல் அடித்து சாயலாமா
காதலை தீயாக்கி அதிலே
கிடந்து வேகலாமா
ஆயிரம் சூரியனின் ஒளி கொண் ட
உன் முகம் வடிப்போனால்
எங்கு செல்ல
பூமிக்கு ஒளிகுடுக்க
இன்று என்னுடைய ஓன்று
நாளை எவனுடையதோ என்ற வாழ்வி ல்
கவலை பட ஒன்றுனில்லை தோழா
என்று பிறந்தேன்
என்று மடிவேன் என்று அறியாத வாழ்வில்
கண்ணீர் விட ஒன்றுமில்லை தோழி ..,
பூக்களுக்கும் தென்றலுக்கும் நடுவே
பூவின் வாசனை உணர
தென்றலை அனுவிக்க
ஒரு வாழ்கை தந்த கடவுளுக்கு
நன்றி சொல் மனமே..!
ஆடி அடங்கும் வாழ்வில்
நீ மட்டும் அடங்கியே இருப்பது ஏன்..?
அதிக நாளாக பட்டம் வாங்காமல்
உன்னிடமிருக்கும் கவலைகளுக்கு
கொடுக்கலாம் பட்டம்
அனுப்பி வைக்கலாம் (farewell ) பெர்வல் கொண்டாடி
தோல்விகள் நிரந்தரம் இல்லை
வெற்றி புதிரனவையும் இல்லை
கண்ணீர் உனக்கனதும் இல்லை குழந்தையின் சிரிப்பு
மனைவின் முத்தம்
நண்பனின் அணைப்பு
தாயின் பாசம்
தந்தையின் அறிவுரை
எல்லாமே தேவையறதுதான்
வாழ்வும் சுமையனதுதான்
நீ உன்னை உணராதவரை …
-ஆழ் கடலின் அமைதியும் , பூக்களின் மௌனமும் , கொண்ட உன்னில் தொடங்கட்டும் புயல் சுனாமியாய் அடித்து செல்ல வெற்றியை...
இனி புன்னகைதேசம் புயல் தேசமாய்.......
தன்னம்பிக்கையை விதைக்கும் இது போல நிறைய கவிதைகளை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.....காதலுக்கு சமாதி கட்டு...அந்தா சமாதியின் மீது ஆயிரம் வெற்றி ரோஜாக்கள் மலரட்டும்...தம்பி.....வாழ்த்துக்களுடன்....
பதிலளிநீக்குதேவா. S
நன்றி அண்ணா , வசந்தகாலம் முடிந்து வெயில் களம் அரடம்பமாகி விட்டது , இனி பூக்களாய் காதல் கவிதை வராது, அனலாய் வரும் கவிதை , புன்னகை தேசம் அனல் தேசமாய்...
பதிலளிநீக்கு