கவிதையின் தலைப்பு நீ... அம்மா..!
ஒரே முறை பிறந்து
இறக்கும் வாழ்வில்
உன் உயிர் குடுத்து
எனக்கு உயிர் அளித்தாய் .. அம்மா..!
சுயநல உலகில் உன் இரத்தத்தையே
பாலாய் தந்தாய் அம்மா ..!
உன்னை காணாத ஒவ்வொரு நொடியும்
கண்கலங்கி போயிருப்பேன்
மற்றோரை கதிகலங்க வைத்திருப்பேன்
உன்னை பார்த்த நொடி புன்னகை பூத்திருப்பேன்
பொம்மையை கட்டியணைத்து உறங்கிய போதும்
உன் விரல் என்னிலிருந்து விலகிய போது
என் தூக்கமும் சேர்ந்தே விலகியது
இது உன் அப்பா , தாத்தா , பாட்டி , அண்ணன்
என்று எல்லோரையும் அறிமுகம் செய்த போதும்
அம்மா என்று அறிமுகம் செய்யாமலேயே
நான் அறிந்த ஆண்டவள் நீ
அன்பால் என்னை என்றும் ஆள்பவளும் நீ..!
வானில் இருந்து என்னை பார்க்க வந்த
தேவதை நீ.. அம்மா ..!
கடவுள் அனுப்பி என்னை காக்க வந்த
கடவுள் நீ அம்மா..!
என் வலிகளுக்கெல்லாம் நீ கண்கலங்கினாய்
காய்சல் என்று நான் உறங்கிய போதும்
நீ உறங்கியதே இல்லை ..,
பல முறை முதல் மதிப்பெண்ணை
என் பள்ளி மாணவனுக்கு விட்டு தந்த போதும்
என்னை மட்டும் நீ யாரிடமும் விட்டு தருவதில்லை
(அப்புடின இதுவரைக்கும் முதல் ரேங்க் வந்ததே இல்லைன்னு அர்த்தம்
என்னை கொடுமை சார் இது )
கோடி கொடுத்தாலும் கிடைக்காத உன் அன்பை
கொட்டி கொடுத்த மணற்கேணி நீ.. அம்மா..!
இன்னொரு ஜென்மம் வேண்டும்
மீண்டும் உன் மகனாக பிறக்க
உலகை படைத்த கடவுளை விட
என்னை படைத்த தாயே நீயே
உயர்ந்தவள் , என்றும்
என்னுள் நிறைந்தவள் ..!
(இந்த கவிதை என் அம்மாவுக்காக..!)
super . ammavai itharkku melum anbai kaattamudiyaathu. /enrum ennul nirainthaval/ uyarnthaval ena kuuri uyarnthuvideerkal. vaalththukal.
பதிலளிநீக்குgud one.. congrats
பதிலளிநீக்கு