திங்கள், அக்டோபர் 05, 2009

உன்னை நினைத்து..!




நான்  உறங்காத  இரவுகள்
உன்னை  நினைத்தே  விடிகின்றன 
இரவு  உறங்கிக்கொண்டு   இருக்க
நான்  மட்டும்  ஏனோ  விழித்துக்கொண்டு
இருக்கிறேன் உன்னை  நினைத்து..!


உன்  தலை  முடி    இல்லாத  சாப்பாடில் 
பசி   ஆறுவதில்லை   நான் ..!


நீ  மாட்டி   விடாத   ஏன்   சட்டை   பட்டன்கள்
மாட்ட   முடிவதில்லை   என்னால்..!
 
நீ  என் அருகில்  இருந்து
தூக்கத்தை  கெடுத்தாய் அன்று
என்னை  விட்டு   தொலைவில்  பொய்
தூக்கத்தை  கெடுக்கிறாய்  இன்று..!

நீ  கலையில்  சொன்ன  சுப்ரபாதத்தில் 
நிறைந்து  இருந்தது
அந்த  நாளின்  சந்தோசம்..!

இறைவனிடமும்  கோபம்  எனக்கு
நீ   வாழும்  இதயத்தை
நீ  தொட  முடியாத  இடத்தில
வைத்தானே  என்று..!

மாலையில்  நீ  தந்த  காபியில்
கலந்திருந்தது  பாலும்  சக்கரையும்  அல்ல
பாலும்  நமது  காதலும் அதனால்  தான்
அதற்கு  சுவை  அதிகம்..!

உன்  முந்தானையில்  தலை
துவட்டுவர்த்தற்காக என்  தலை முடிகள்
எல்லாம்  ஏங்கி  கிடக்கின்றன..!

என்  தோட்டத்து மல்லிகை
பூவும்  வாடிபோகின்றன  உன்
தலையில்  மலராத  ஏக்கத்தில்..! 

ஒவ்வொரு  ஆண்டும்   பிறந்த  நாள்
அன்று  நீ  தரும்  அன்பு  முத்ததிற்காக  
ஒவ்வொருநாளும்  பிறக்க
கூடாத  என்றே  தோன்றிற்று ...!

தென்றல்  காற்றும்  என்னை  சுடுகிறது..!

நீ  இல்ல  இடத்தை  தலையணை
பிடிக்க  நினைக்கிறது..!


உன்னோடன்  வாழ்ந்த   வாழ்வை  விட
உன் நினைவில்   வாழும்  இந்த  வாழ்கை  தான்
சுகனும்  சோகமும்  நிறைந்தது..!


நீ  இல்லாத  இரவுகளே  என்னை
கொன்று  விட்டன  அன்பே
நீ  இல்லாத  இந்த  உலகம்  சுமப்பது
என்னமோ  என்   உயிர்   உள்ள  பினதைதான்..!

1 கருத்து:

  1. அருமையான கவிதை .... தலைவியின் பிரிவால் வாடும் சங்க கால தலைவனின் புலம்பலை நினைவுபடுத்துகிறது.... அன்பு சிவா உனது கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறுகிறது. எழுத்துப் பிழை கூட கவிதையாய் இனிக்கிறது!!. வாழ்த்துக்கள் !!!
    அன்பு அண்ணன்
    ஜெரால்டு

    பதிலளிநீக்கு