செவ்வாய், செப்டம்பர் 29, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!உலகில் பிறந்த எந்த மலரும்
உதிர்ந்தால் மலர்வதில்லை
தாயின் கருவறையில் இருந்து
உதிர்ந்த மலோரோன்று
மீண்டும் மலர்ந்த தினம் இன்று..!

இன்று மட்டும் நிலா
விடுப்பு எடுத்திருக்கும்
தன்னை விட அழகான
நிலா பூமியில் பிறந்ததால்..! 


பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும்
வெட்கி தலை குனியும் ஒரு நொடி  
உன்னை கண்டால்
இந்த பூ நம்மை விட
அழகாய் சிரிக்கிறதே  என்று..!

தோல்விகள் உன் வழியில்
குறுக்கிட்டால்
தோல்விகளுக்கு தோல்வி கொடு
தன்னம்பிக்கையுடன்..!

ரோஜா நிலா வானம்
புன்னகை தேவதை எல்லாம்
என் கவிதையை நிரப்ப
சந்தோசத்தை இறைவன்
உன் வாழ்வில் நிரப்பட்டும்..!

6 கருத்துகள்:

 1. அக்டோபர் 1 அன்று பிறந்தநாள் காணும் என் அன்பு தோழி , சந்தோசமாக தோல்விகளையும் சோகங்களையும் வெற்றி கொண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..! நீங்களும் வாழ்த்துங்கள்..!

  பதிலளிநீக்கு
 2. சிவாவின் அன்புக்கு உரிய அந்த தோழிக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 3. may God bless u on this day and fulfill all ur wishes, wishing u lots of luv and also may u prosper each and every moments in ur life,

  from ur well - wisher

  MANY MANY HAPPY RETURNS OF THE DAY
  HAPPY BIRTHDAY................!

  பதிலளிநீக்கு