வியாழன், செப்டம்பர் 24, 2009

நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!


நீ வந்த இந்த நொடி
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!

1 கருத்து:

 1. நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
  நான் சிதறிப்போகிறேன்

  /////

  கவிதை அருமை

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு