மீண்டும் ஒருமுறை நாம் வானில் ஏறி விண்ணை தொடுவோம் , தோல்விகள் , அவமானம் , பிரிவு... இவை நம்முடனே தொடர்ந்து வந்த போதும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டியது பாடமே தவிர கவலை இல்லை , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் , நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் ,நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதை அடைவதற்காக நாம் நடத்தும் விட முயற்சியுடனான போராட்டத்தில் இருக்கிறது சுவாரசியமான வாழ்கை, ஏற்று கொள்வோம் எதையும் சந்தோசத்துடனே., தொடரட்டும் சந்தோசம் உங்கள் புன்னகையோடு..!
சனி, செப்டம்பர் 05, 2009
தோழி..!
அன்பே கடவுள்
என்னிடம் அன்பு மட்டும் செய்யும் நீ
என்ன கடவுளா இல்லை
கடவுள் தந்த வரமா..?
என் கோபங்களை எல்லாம் வாங்கிகொண்டு
புன்னகையை மட்டும் தருகிறாய்
ஒரு குலந்தையின் கோபத்தை
தாங்கிக்கொல்லும் தாய் பொல..!
கீழே விழுந்த போதெல்லாம்
நான் சிரித்து கொண்டுதான் எழுந்தேன்
நீ மட்டும் ஏனோ கண்ணீருடன்
கோவில் செல்கிறாய்..!
உன்னுடன் சண்டை போடும் போதெல்லாம்
நான் செய்த தவறுக்கு மன்னிப்பு
கேட்பாய் என்னிடமே குழந்தை போல
ஒரு நாளாவது திட்ட மாடாயா..!
ஒவ்வொரு முறையும்
நீ என்னிடம் தோற்று என்னை
வெற்றி பெற வைக்கிறாய்
நீ எப்போதும் தோற்பதில்லை
என்னை வென்று கொண்டே இருக்கிறாய்..!
மேகமாய் உன் சோகம்
மலையாய் உன் கண்ணீர்
சூரியனாய் வருவேன்
உன் கண்ணீர் துடைக்க..!
மேகம் களைந்து போகும்
மலை நின்று போகும்
சூரியன் நிலைத்து நிற்கும்
பூமிக்கு ஒளி தந்து கொண்டே
உன்னிடமிருந்து மூவாயிரம்
மைல்கள் தாண்டி பக்கத்தில்..!
காற்றாக உன் நினைவை சுவாசிக்கவில்லை என்றபோதும்
நீராக உன் நினைவையே அருந்துகிறேன்
நீரின்றி அமையது உலகு
நீ இன்றி நானும் இல்லை..!
உனக்காக கொடுக்க ஒன்றுமில்லை
என்னிடம் என் உயிரை தவிர
கேட்டுவிடாதே தரமாட்டேன்
நான் இல்லை என்றால் நீயும் இல்லை..!
(இந்த கவிதை என் அன்பு தோழிக்கு)
( புன்னகை - பூக்களுடன் விளையாடி , குழந்தைக்கு முத்தமிட்டு, கடல்கள் தாண்டி , சிகரங்கள் ஏறி , தேசம் தாண்டி பரவட்டும்..! உங்கள் புன்னகையோடு)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக