ஞாயிறு, ஜூன் 27, 2010

வீரம்...!

 
வீரம் 
வாணம் மழைக்கு பதிலாய்
இடியை நாம் தலையில்
விழுந்தால்  என்ன ?
நாமே இடி தாங்கி
நம்மில் சிக்கி
இடி சிதறட்டும்...!

கடல் அலைக்கு பதிலாய்
சுனாமியாய் நம்மை
அடித்து சென்றால் என்ன ?
நாமே தீப்பிழம்பு
கடலையே ஆவியாக்கி
அனுப்பிடுவோம் வானிற்கு ...!


காற்று தென்றலாய்
வருவதற்கு பதிலாய்
புயலாய் வந்தால் என்ன ?
நாமே சுறாவளி
புயலை வீசி எறிவோம் ..!

யார் நம்மை விட்டு
போனால் என்ன ?
யார் நம்மிடம்
வந்தால் என்ன ?
நாமே வழிப்போக்கர்கள் ...!

வாழ்க்கை போர்கலமாகிப்போனால்
பயந்து ஓட கொலைகள் இல்லை
போர்தொடுப்போம் வீரத்தோடு
ஆயிரம் இடைஞ்சல்கள் வந்த போதும்
மாறாத நமது நம்பிக்கையுடன் ...!

உங்க வாழ்க்கைல எங்கேயாவது பிரச்சனை வந்த கவலை படாதிங்க ..., அத ஒரு சவால எடுத்துகங்க , ஆயிரம் பேரு நம்ம வாழ்க்கைல வந்து போய்கிட்டே இருப்பாங்க அதுக்காக பெருசா கவலை பாடவும் தேவை இல்லை , என்னா நாமே நமக்கு சொந்தம் இல்லை ....
-
 என்னா திருப்பி அடிக்கலாமா...?   இனி டரியல் ஆரம்பம் ...!

செவ்வாய், ஜூன் 22, 2010

உயிர்...!

குமார் இவர் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர் , அன்று வழக்கமான தனது பணியில் தீவிரமாக இருந்தார் , அவருடைய மொபைல் சைலென்ட் மோடில் இருந்தது , மணியை பார்க்காமல் வேலை செய்யும் சில வல்லுனர்கள் போலவே இவரும் இருந்தார் , எழுந்து வீட்டுக்கு போகலாம் என்று எண்ணி எழுந்தார் அப்போது மணி இரவு 8 :30 ஆகி இருந்தது , அப்போது வேலை நிமிர்த்தமான அழைப்பு வர மீண்டும் அமர்ந்தார் , எதற்சையாக அவரது மொபைல் எடுத்து பார்த்த பொது தெரிந்தது ,

அவரது வீட்டில் இருந்து 20 மிஸ் கால்கள், அதிர்ந்தார் குமார் என் இவ்வளவு மிஸ் கால்கள் வீட்டில் இருந்து , ஒரு sms வந்து இருந்தது , அதில் " Come Fast " என்ற வரி மட்டும் இருந்தது , வேகமாக கிளம்பினார் குமார் , அவரின் முத்த அதிகாரி அவரை அழைத்தார் , குமார் வீட்டுக்கு போக வேண்டும் என்றார் , முத்த அதிகாரி வேலையை முடித்து விட்டு போ என்றார் , இருக்கையில் அமர்ந்தார் குமார் மீண்டும் கைகள் செல்பேசி நோக்கி போயின , என்ன ஆயிற்று , குமாரின் மணம் பதற ஆரம்பித்தது , வேகமாக எழுந்து நடந்தார் தனது கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி , வீட்டில் தனியாக இருந்த நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவியின் மொபைல் போனுக்கு முயற்சி செய்த படியே , மொபைல் " No Answer " என்ற பதில் வந்தது , என்ன ஆனது குமாரின் மனைவிக்கு ...,

செல்லும் வழியில் தன்னை தானே நொந்து கொண்டார் குமார் , நான் தப்பு செய்து விட்டேன் , நிறை மாத கர்ப்பிணியான எனது மனைவியை பார்த்து கொள்ளாது எனது தவறு , பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது குமாருக்கு , குமாரின் செல்பேசி சிணுங்க ஆரம்பித்தது , மறு முனையில் அவரின் முத்த அதிகாரி , தாங்கள் ஏன் வேலையை முடிக்காமல் சென்றீர்கள் நாளை இதற்கான விளக்கம் வேண்டும் என்றதுடன் இணைப்பை துண்டிதுக்கொண்டர் , குமாரின் கோபம் தலைகேறியது அவரது காரின் வேகமும் கூட , செல்லும் வழியெல்லாம் தனது மனைவியின் செல்பேசிக்கு முயற்சி செய்து கொண்டே சென்றார் , பதில் எதுவும் வரவில்லை , வீடும் வந்து விட்டது , காரில் இருந்து இரங்கி வேகமாக ஓடி சென்று பார்த்தார் குமார் , தான் மனைவிக்கு என்ன ஆகிற்று ....?

வீட்டின் அணைத்து பகுதியிலும் தேட ஆரம்பித்தார் குமார் , எங்கே அவள் ? சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள், குமாரின் பதற்றம் அதிகமானது , எந்த அசைவும் இல்லை குமாரின் மனைவியிடம் , தனது மனைவியை மடியில் வைத்து சுய நினைவிற்கு கொண்டு வர முயற்சித்தார் குமார், எந்த பயனும் இல்லை , தனது மனைவியை தூக்கி சுமந்த படியே காருக்கும் , காரில் மருத்துவ மனைக்கும் செல்ல ஆரம்பித்தார் , காரின் வேகம் அதிகரித்தது , அதற்குள்  சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு விளவே நொந்து போனார் குமார் , கண்களில் கண்ணீர் , தனது வெள்ளை சட்டை முழுவதும் மனைவியின் ரத்தம் , பச்சை சிக்னல் விளவே மீண்டும் காரின் வேகம் கூடியது ,  மருத்துவ மனையும் வந்தது , வேகமாக ஹரேன் அடித்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனையின் வாயிலில் போய் தட்டி பார்த்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனை தொலை பேசி எண்ணுக்கு அழைத்து பார்த்தார் எந்த பதிலும் இல்லை , மணி 12 :00 இரவு , அனைவரும் உறங்கிக்கொண்டு இருப்பார்கள் ,  குமாரின் கண்கள் நீர் வெள்ளத்தில் தனது மனைவியை பார்த்தது ,என்ன செய்வது ...?

மருத்துவமனை சுவரை எப்படியாவது தண்டி உள்ளே இருக்கும் மருத்துவரை அழைத்து வரலாம் , சுவரின் உயரமோ குமாரின் உயரத்தை விட அதிகமாக இருந்தது , தனது காரை எடுத்து சுவரின் ஓரம் நிறுத்தி அதன் மீது ஏறி மருத்துவமனையின் உள்ளே குதித்தார் , சுவற்றில் அவர் உரசி கை கால் எல்லாம் ஒரே சிராய்ப்பு , குமாரின் கை கால்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது , குமாருக்கு தெரியவில்லை தனக்கு ரத்தம் வருவது கூட , உள்ளே இருந்த மருத்துவரை அழைத்து வந்தார் , மருத்துவமனை வாயில் திறக்கப்பட்டது , குமாரின் மனைவி தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டார் ..., தனது மனைவியும் குழந்தையும் தன்னிடமே வர வேண்டும் என்று வேண்டி கொண்டார் , தான் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்க பாட்டு இருப்பதை தனது தாய் தந்தையருக்கு தொலை பேசியில் அழைத்து சொல்லி இருந்தார் , குமாரின் மனைவியின் தாய் தந்தைக்கும் கூட ...,

மருத்துவர் வெளியில் வந்தார் , குமாரின் உயிர்  அவரிடமே இல்லை , மருத்துவரின் கைகளை பற்றி கொண்டு குமார் கேட்டார் தனது மனைவியின் ஆரோக்கியம் பற்றி , உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது , என் மனைவி ..? என்றார் குமார் , அவர்கள் இன்னமும் சுய நினைவு திரும்ப இல்லை , காலை 6 :00 மணிக்குதான் எதுவும் சொல்ல முடியும் என்றர் மருத்துவர் , குமாரிடம் அவரின் குழந்தையை குடுத்தார்கள் ,

குழந்தையை வாங்கிய குமார் நீர் நிரம்பிய கண்களுடன் தனது மனைவியையே பார்த்து கொண்டு இருந்தார் , பொழுது விடிந்தது குமாரின் உறவினர்கள் அனைவரும் வந்து விட்டனர் , மருத்துவர் வெளியே வந்தார் , குமாரின் நெஞ்சம் பட படக்க ஆரம்பித்தது , தனது மனைவி இல்லாத உலகை குமாரால் நினைத்து கூட பார்க்க முடியாது , நீங்கள் மட்டும் போய் உங்கள் மனைவியை பார்க்கலாம் , டாக்டர் ,பயத்துடன் குமார், ஒன்னும் இல்லை போய் பாருங்கள் , குமார் தனது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்தார் , சூரியன் ஒளிதர கிளம்பியது , சூரிய ஒளி அறைக்குள் வந்தது கண் விழித்தல் குமாரின் மனைவி , இப்போதுதான் உயிர் வந்தது குமாருக்கு , மனிவியின் கைகளை பற்றி கொண்டார்  குமார் , என்னை மன்னித்து விடு என்று சிறு பிள்ளை போல அழ ஆரம்பித்தார்  , குமார்  மனைவின் கைகள் குமாரின் கண்ணீர் துடைக்க ஆரம்பித்தன ,  வேகமாக சென்று தனது குழந்தையை வங்கி வந்து மனைவியிடம் கட்டினார் குமார் , குழந்தையுடன் தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டார் குமார் ...,

இன்னம் ஒரு வரம் கழித்து நீங்கள் வீட்டுக்கு போகலாம் என்றர் மருத்துவர் ..,

அந்த ஒருவாரம் குமார் அலுவலகம் செல்லவே இல்லை ...,

வீட்டுக்கு வந்த பிறகு குமார் தனது கணியில் , தனது ஈமெயில் பார்த்து கொண்டு இருந்தார் , அதில் ஒரு மெயில் அவருடைய அலுவலகத்தில் இருந்து , என் வரவில்லை அலுவலகத்திற்கு எங்களுக்கு விளக்கம் வேண்டும் என்று இருந்தது , அவரருகில் அவரது மனைவி வந்து அமர்ந்தார் , எதார்த்தமாக தனது கணவனின் கை கால்களில் காயம் இருப்பதை கண்டு அதிர்ந்து எப்படி வந்தது என்று கேட்டார் நடந்ததை சொல்லி முடித்தார் குமார் , குமார் மனைவியின் கண்கள் நீரால் நிரம்பின , குமாரின் நெற்றியில் முத்தமிட்டு " I LOVE you " என்றார்...,

அலுவலகத்தில் இருந்து வந்த மைலுக்கு பதில் குடுத்தார் குமார்  எனது வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் ....,

குறிப்பு : இது ஒரு உண்மை கதை ....,

    

வியாழன், ஜூன் 10, 2010

காலை தென்றல்..!


சோம்பல் முறித்து எழுந்தேன்
மணி 6 , மணக்கண் ஓட்டத்தில்
அம்மா தோழி அப்பா தம்பி தோழன்
யாரும் அருகில் இல்லை

இன்றைய தினத்தை எனக்கு
அருளிய இறைவா நன்றி
தூக்கம் தொலையாமல்
என்னுடன் ஒட்டிக்கொள்ள
நடக்கின்ற கால்கள்
காலைகடன் முடிக்க

முகம் பார்க்க கண்ணாடி
என்னை எனக்கு மட்டும்
அழகாய் காட்டும் அற்புத படைப்பு

நேரமாக நேரமாக
வேகமாக கிளம்ப
தயாராகிறேன் அவளை காண
யார் அவள் ..?

வானோர் வியக்கும்
அழகுக்கும் ,
விண்ணை பிளக்கும்
சிரிப்புக்கும்
சொந்தக்காரி

பூ தலையில் வைத்தல்
வாடிவிடும் என்று
செடியிலேயே வைத்து
அழகு பார்ப்பவள்

எதை சொன்னாலும்
இரண்டு  முறை
சொல்லுவாள்
என்னை முட்டாள்
என்று நினைதலோ

காந்த கதிர்வீச்சை
முதல் முறையாய்
உணர முடிந்தது
அவளது பார்வையில் தான்

எங்கே சென்று இருப்பால்
என் தேவதை ...!


அவள் வேற யாரும் இல்லை
பள்ளி ஊர்திக்காக காத்திருக்கும்
முன்று வயது பெயர் கூட
தெரியாத  அவள் ...!

ஒரு முயல் குட்டிக்கு பாக்
மட்டி விட்டு படிக்க
சொல்லிகிறார்கள்

நீ படித்ததை விட
கற்று கொடுத்தது
அதிகம் ...

தொடரும் பயணம்
அவள் நினைவில்
அவள் சிந்திய புன்னகையுடனே...
-
அவளை பார்த்த சந்தோஷத்தில் , சென்றேன் அலுவலகத்துக்கு , புன்னகையுடன்...

ஞாயிறு, ஜூன் 06, 2010

நாய் குட்டி நட்பு...


ஒரு ஐந்து வயது இருக்கும் எனக்கு , நல்ல மழைக்காலம் , வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கூரை வீடு , அதற்கு பக்கத்தில் மழையில் நனைந்து விளையாடியது போல் யாபகம், அப்போது என் நண்பனின் அப்பா அவன் மழையில் நனைவதை பார்த்து விட்டு , ஒரு கம்புடன் அவனை நோக்கி வந்தார் , டாய் உங்க அப்பா கம்போட வருகிறார் என்ற சத்தம் கேட்க நண்பன் சிட்டாய் பறந்தான் நானும் அவனுடன் சேர்ந்து , கூரை வீட்டில் போய் ஒளிந்து கொண்டோம், நண்பனின் அப்பா நண்பனை தேடி விட்டு சென்று விட்டார் ,

கூரை வீட்டின் உள்ளே சின்னதாய் ஒரு சத்தம் , உள்ளே போய் பாக்கலாம் என்றான் நண்பன் , இல்லை வேண்டாம் என்றேன் நான் ,  உள்ளே நுழைந்தான் நண்பன் , ஏய் நாய் குட்டிடா , அங்கே இருந்த அனைவரும் வேகமாய் கூரை வீடுக்குள் ஓடினோம் , ஆள் ஆளுக்கு ஒரு நாய் குட்டியை எடுக்க , கடைசியாய் ஒரு நாய் குட்டி இருந்தது அதை நான் எடுத்தேன் , நண்பன் சொன்னான் , அது பொட்ட நாய் டா அதையா  வளர்க்க போகிறாய் , இல்லடா இது ஆண் தான் என்றேன் , நல்ல கீழே தூக்கி பாரு உனக்கே தெரியும் , பெண் நாய் தான் அது , கஷ்டமாகி விட்டது எனக்கு , இருந்தாலும் பரவ இல்லை .. அந்த நாய் குட்டிய எனக்கு ரொம்ப புடிச்சு இருந்ததது .

வீட்டில் மாடிபடிக்கு கீழே உள்ள ஒரு சின்ன அறையில் அந்த நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்தேன் , எப்படி அதுக்கு பால் உற்றுவது, ஒரு யோசனை , அம்மா காலையிலும் மாலையிலும் நமக்கும் காபி தருவாங்க அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு , பாலை  மட்டும் கேட்டு வாங்கி , அந்த நாய்க்கு கொடுத்திரலாம் ,  நான் சாப்பிடுவதில் பாதி என் நாய் குட்டிக்கு போய் விடும் , நான் சாகும் வரை என் நாய் குட்டியும் என்னுடன் இருக்க வேண்டும்  என்ற ஆசை எனக்கு , நாட்கள் ஓடின என் நாய்குட்டி வளர ஆரம்பித்தது ,

ஒரு நாள் இரவில் நன்கு உறங்கி கொண்டு இருந்தேன் , இடியுடன் மலை பெய்து கொண்டு இருந்தது , உறக்கத்தில் இருந்து திடிரென விழித்தேன் , என் நாய்குட்டி மழையில் நனைந்து கொண்டு இருக்குமே , இடியில் பயந்து போய் இருக்கும் , அதை எப்படியாவது அம்மாவிற்கு தெரியாமல் விட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டியது தான் , மணி காலை 6 இருக்கும் , என் நாய் குட்டி வைத்த இடத்தில் இல்லை , எங்கே போய் இருக்கும் , வேகமாக வெளியில் போய் தேடினேன் மலையில் நனைந்து கொண்டே , எங்கும் கிடைக்க வில்லை ,  எங்கே போனது அது என்னை மறந்து ......!

அங்கெ இங்கே என கால்கள் நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது , உடலை மழை நனைக்க , கண்களை கண்ணீர் நனைக்க தொலைந்து போன நாயை தேடி 3 மணி நேரம் அலைந்தேன் , இறுதியில் , நண்பர்களிடம்  கேட்டேன் , உன் நாயை அங்கெ பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்றனர் , தேடி அலைந்து ஓய்ந்து போய் விட்டுக்கு வந்திருக்கும் என்று எண்ணி வீடு திரும்பினேன் மழை விடவே இல்லை , தெரு முனையில் எதோ இறந்து கிடப்பது எனக்கு தெரிந்தது , என்னவாக இருக்கும் ? , என் நாய் போல இருந்தது , அருகில் சென்று பார்த்தேன் , என் நாய் தான் , எதோ வாகனத்தில் அடி பட்டு இறந்து விட்டது , மழை நீரில் அது மிதந்து கொண்டு இருந்தது ...,
அதன் பின்பு எந்த வீட்டு செல்ல பிராணியும் நான் வளர்கவே இல்லை ....


20 வது  வருடங்களுக்கு பிறகு வீட்டில் நடந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே இருந்தேன் ,  மாடி படிக்கட்டில் போய் அமர்ந்து , என் நாய் குட்டி இருந்திருந்தால் இங்கே அதற்க்கு என் சாப்பாடில் பாதியை  வைத்திருப்பேன் எங்கே போனது அது ... என்னை விட்டு ... சாப்பிட்ட சாப்பாடில் பாதி சிதறி விழுந்தன படிகட்டின் கீழே உள்ள அறையில்....


பயணம் தொடரும் ....