வியாழன், ஆகஸ்ட் 12, 2010

பொர்ணமி நிலா...!





என்னோட பெயர் விஜய், அன்றைக்கு முதல் நாள் அலுவலகத்துக்கு சென்று இருந்தேன்  , எல்லோரை போலவும் பெருசா முன்னேரனும் , இது என்னோட ஆசை , உதவி மார்க்கெட்டிங் அதிகாரியாக பணியில் சேருகிறேன் , நான் ஜெயிக்கணும் ஜெயிப்பேன் இது எனது நம்பிக்கை , எனது இருக்கையில் அமர்ந்தேன் , எனது அருகில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள், ரொம்ப அழகா இருந்தால் , எனக்கு பெண்கள் மீது அதிக ஈடுபாடு   இல்லை , எனது கணினியில்  மூழ்கினேன்  , சிறிது நேரத்தில் என்னிடம் வந்தால் அந்த பெண் , தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் , அவள் பெயர் நிலா , அவள்தான் எனது துறை தலைவர் என்பது அவள் சொல்லித்தான் தெரியும்.


அவள் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள் , எவ்வளவு சிக்கலான கஷ்டமான நேரங்களிலும் அவள் முகத்தில் புண்ணகை நிறைந்தே இருக்கும் , யாரிடமும் அதிகம் பேசி எனக்கு பழக்கமில்லை , நானும் எனது கணினியும் தான் பேசிக்கொள்வோம் , நாட்கள் ஓடின கடினமாக உழைக்க ஆரம்பித்தேன் , மதிய வேளையில் தனியே அமர்ந்தே உணவு உண்பேன் , தனிமை எனக்கு பிடித்த ஒன்று , நிலா என்னை சில முறை அழைப்பாள்  மதிய சாப்பாடிற்கு , நான் எதையாவது சொல்லி அவளுடம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவேன் , என்னோடன் வேலை பார்த்த யாருடனும் நான் அதிகம் பேசுவதில்லை, எனக்கு திமிர் பிடித்தவன் , பெருமைக்காரன் , வேறு சில பெயர்களும் அவர்கள் கொடுத்தனர் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை , நிறைய வாடிக்கையாளர்கள் என்னால் எனது நிறுவனத்துக்கு கிடைத்தனர் , எனக்கு பதவி உயர்வும் கிடைத்தது , எதிலும் பெரிய இருப்பு இல்லாமல் போய் கொண்டு இருந்தது வாழ்கை .

அன்று வெள்ளிகிழமை அனைவரும் நிலாவிடம் சென்று எதோ வாழ்த்து சொல்லுவது போல் இருந்தது , நான் கண்டு கொள்ளவே இல்லை ,  அன்று மாலை நிலா என்னிடம் வந்தாள்..

விஜய் இன்றைக்கு என்னோட பிறந்தநாள் நீங்கள் கண்டிப்பா நான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் , நான் முடியாது என்று மறுத்து விட்டேன் , அவளோ விடுவதாக இல்லை , எனது அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை , அவர்களை மருத்துவமனை அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லி கடைசியில் தப்பித்து கொண்டேன் , அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்று பிறகு இரவில் அம்மாவை கூட்டி கொண்டு வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க வெளியில் போக வேண்டி இருந்தது , அனைத்தையும் வாங்கி முடித்தவுடன் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டு இருந்தேன்.

 யாரோ என்னை அழைப்பதை போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அங்கெ நிலா நின்று கொண்டு இருந்தாள் , என் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன் , அம்மா உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது , நான் ரொம்ப நல்ல இருக்கேன் என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்த உடன் , என்னை நோக்கி முறைப்பது போல் பார்த்தாள்  , நான் தலையை கீழே குனிந்து கொண்டேன் , பிறகு அவளை பார்க்கவே இல்லை , என்னை தப்பாக நினைத்து இருப்பாள்  அதுவும் அம்மாவுக்கு உடல்நிலை சரி  இல்லை  என்று பொய் சொன்னதற்கு  ,பிறந்தநாள் என்று சொல்லி என் அம்மாவிடம் ஆசிர்வாதமும் பெற்று கொண்டாள் , பேருந்து வந்ததும் முவரும் ஒரே பேருந்திலேயே சென்றோம் , என் அம்மாவுடன் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தாள் , நாங்கள் இறங்கும்  நிலையம் வந்தவுடன் நானும் அம்மாவும் நிலவும் இறங்கினோம் , அம்மா சொன்னார்கள் இரவாகி விட்டது அந்த பெண்ணை  போய்  வீட்டில் விட்டுவிட்டு வா என்றார்கள் , நான் அம்மா பிள்ளை எனது அம்மாவை ரொம்ப பிடிக்கும் அப்பா இல்லை , எனக்காகவே வாழும் எனது அம்மா , நிலா சொன்னால் பரவா இல்லை நான் தனியாகவே போய் விடுகிறேன் என்று பிறகு ஒத்துக்கொண்டால் அவளை அழைத்து சென்றேன் , இருவரும் மௌனமாகவே நடந்தோம் என்னை தப்பாக நினைத்திருப்பாள், பரவ இல்லை என்று எண்ணிக்கொண்டேன் ,

உங்கள் வீடு எங்கே உள்ளது என்று அவளிடம் கேட்டேன் , நான் விடுதியில் தான் தங்கி உள்ளேன் என்றாள் , உங்கள் அம்மா அப்பா எங்கே ? அவர்கள் யார் என்றே தெரியாது நான் ஒரு அநாதை அனால் யாருக்கும் தெரியாது என்றால் சிரித்து கொண்டே ,  அவளது விடுதி வந்தது , நீங்க போய் விட்டு வங்க என்று சொல்லி உள்ளே சென்றவள் , எனக்கு  என்னோட பிறந்த நாள் என்னனு எனக்கே தெரியாது சும்மா நானா இத பிறந்தநாள் அப்படி சொல்லி கொண்டாடுகிறேன் மீண்டும் அதே சிரிப்புடன் உள்ளே சென்றல் நானோ இதயம் கனத்து போய் மரம் போல் அதே இடத்திலேயே நின்று கொண்டு இருந்தேன், சற்று தொலைவில் சென்றவள் என்னை திரும்பி பார்த்தல் , நான் இப்போதுதான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றேன் , அப்பாட  இப்போதாவது சொன்னியே நன்றி என்றாள் ...

வீட்டிற்கு வந்து விட்டேன் , மனதெல்லாம் அவளின் நினைவு மட்டும் ஓடியது , அம்மா அழைத்தார்கள் , அவர்களிடம் சென்று என்ன என்று கேட்டேன் , அந்த பொண்ண பாதியப்பா , ரொம்ப அழகா இருக்கின்றாள் , அந்த மாதிரி ஒரு பொண்ணைத்தான் உனக்கு காட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன் , நான் ஒன்றும் பதில் சொல்லாமலேயே திரும்பி வந்தேன் , இரண்டு நாட்கள் விடுமுறை ஓடியது , அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது , அவளை பற்றி தெரிந்தது கொள்ள வேண்டும் போல இருந்தது , அவளுக்கென்று யாரும் இல்லை என்றபோது எப்போதும் அவளின் சந்தோசத்திற்கு பஞ்சம் இருக்காது .

அன்று திங்கள் கிழமை காலையிலேயே அலுவலகம் சென்று அவளின் வருகைகாய் காத்திருந்தேன் , கலையில் அவள் வரவில்லை , மதியம் அவள் வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள் , இன்று அவள் சந்தோசமாக இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது , உணவு இடை வெளி வந்தது , அனைவரும் சாப்பிட சென்று விட்டனர் , அவள் மட்டும் அங்கே உட்கார்ந்து இருந்தாள் , நான் அவளிடம் சென்று சாப்பிட போகலாமா என்றேன் , முதல் முதலாய் ஒரு பெண்ணை சாப்பிட அழைத்தேன் , அவளோ பசிக்கவில்லை நீங்கள் பொய் சாபிடுங்கள் என்றாள் , என் கவலையாய் இருப்பது போல் இருக்கிறீர்கள் என்றேன் , ஒன்றும் இல்லை என்றால் ,  நான் சாப்பிட சென்று விட்டேன் , மாலையில் அவள் முகம் மிகவும் வாடி இருந்தது , என்னிடம் வந்தவள் நீங்கள் இன்று மாலை சும்மா இருந்தாள் என்னோடன் வர முடியுமா என்றாள், நான் சரி என்றேன் , அன்று மாலை அலுவலகம் முடிந்து ஆவலுடன் சென்றேன் .. எங்கே அழைத்து செல்கிறாள் என்னை ...?


அது ஒரு அநாதை ஆசிரமம் , விஜய் இந்தா மாதிரி இடத்துக்கு போய் இருக்கிறாயா? என்று கேட்டால் என்னிடம் , இல்லை என்றேன் , அங்கு நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தன , எனக்கு ஒருமாதிரியான உணர்வு , இங்குதான் நான் வளர்ந்தேன் விஜய், இங்கு இருக்கிற எல்லாருக்கும் ஒரு வேலை உணவிலிருந்து எல்லாமே போராட்டம் தான் , வா விஜய் உள்ளே போகலாம் என்று அழைத்தால் , நானும் உள்ளே சென்றேன் , அங்கெ ஒரு குழந்தை நோயால் படுத்து இருந்தது , விஜய் இவளுக்கு சின்ன ஆபரேஷன் பண்ணனும் , வயிற்றில் சின்ன காட்டி இருக்கிறதாம் , அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார் என்ற பொது அவளின் இயலாமை கண்களில் நீராய் , அதற்க்கு மேல் என்னால் அங்கு இருக்க முடிய வில்லை , நான் ஒன்றும் சொல்லாமல் நான் வருகிறேன் என்று அவளிடம் சொல்லி விட்டு வெளியே சென்று விட்டேன் ...

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை அதனால் என் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் பணம் கேட்டு பார்த்தேன் அந்த குழந்தைக்காக , எனக்கு கிடைக்கவே இல்லை , அப்போது நண்பன் சொன்ன ஒரு யோசனை எனக்கு உதவியது , எங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம் அதன் பிறகு தேவையான பணம் கிடைத்தது , அதை கொண்டு சென்று நிலவிடம் கொடுத்தேன் , அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரிய வில்லை , என் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள்,

அந்த குழந்தையின் அருவைசிகிசை முடிந்தது ,  அந்த குழந்தை பிழைத்து விட்டது , அவளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது , அன்று நல்ல  மழை , நான் உனக்காக காத்து கொண்டு இருக்கிறேன் வேகமாக வா ... என்றதுடன் துண்டித்துகொண்டாள் இணைப்பை , அவளுக்காக காத்திருந்தேன் ஒரு பேருந்து நிலையத்தில் , நன்றாக மழை பெய்ய ஆரம்பித்தது , வீதி எங்கும் மழை நீர் , அவள் வந்தாள் , ரொம்ப சந்தசமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன் , என்னை பார்த்தவுடன் வேகமாக ரோட்டை கிராஸ் செய்து என்பக்கம் வருவதற்காக நடந்து வந்து கொண்டு இருந்தாள் , கருப்பு குடை பிடித்து எதோ ஒரு மயில் மழை வந்த சந்தோஷத்தில் இறக்கை விரித்து ஆடுவது போல் , அன்றுதான் அவளின் பேரழகு எனக்கு தெரிந்தது ,


ஒரு துளி மழைநீர் என் முகம் மேல் விழ கண்களை முடிக்கொண்டேன் , அவள் விரல் என் மேல் பட்டது போல் ஒரு உணர்வு , மழை ஜில்லென்ற கற்று மாலை நேரம் அழகான ஒரு பெண் என்னை காண வருகிறாள் என்று நினைத்த பொது உலகமே எதோ எனக்காகவே படைக்க பட்டது போல் உணர்ந்தேன் , திடிரென ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு கண் களை முழித்து கொண்டேன் , நிலா லாரியில் அடிபட்டு விழுந்தால் , ஒரு நொடி என் கண்களை நம்ப முடிய வில்லை , உலகம் பிரம்மித்து போனது போல ஒரு உணர்வு , அவளை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் , அவள் கையில் வைத்திருந்த பை ஒன்றை என்னிடம் தந்தனர் , அவள் சுய நினைவிற்கு வரவில்லை , அவளது பையில் அவளது டைரி இருந்தது , அதை அடுத்து படிக்க ஆரம்பித்தேன் , விஜய் உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது , உனது அமைதி , திறமை , பார்வை எல்லாம் , என்னோட பேசு விஜய் , உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன் , நீ சூரியனாக வந்த பின்புதான் என் உலகம் வெளிச்சம் அடையும் , அவள் கண்முடி மருத்துவமனையில் உறங்கிய போதும் அவள் டைரி என்னிடம் பேசிக்கொண்டு இருந்தது.


நாட்கள் ஓடின அவளுக்கு சுய நினைவு வரவே இல்லை , எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள் என் வீட்டில் , ஏனோ எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை எனக்கு , இன்றைக்கு புதன் கிழமை நான் அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறேன் , யாரோ என்னை குபிடுற மாதிரி இருக்கு , ஒரு நிமிஷம் இருக்க பாத்துட்டு உங்களிடம் சொல்லுகிறேன் , அட என் அம்மா தாங்க , என்ன சொள்ளரங்கனு கேக்குறிங்களா , எனக்கு 35 வயசு ஆகிவிட்டதாம் , அதனால கல்யாணம் பண்ணிக்க சொல்லுராங்க , இப்ப நிலவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் , கூடிய விரைவில் அவள் குணமடைந்து விடுவாள் என்பது எனது நம்பிக்கை , நிலா என் மேல் வைத்த நம்பிக்கை , நான் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை இது இரண்டும் சமகான அளவு வரும் பொது நான் கண்டிப்பா ஜெயிப்பேன் , பத்து வருடமாக நான் காத்திருந்ததற்கு கடவுள் எனக்கு கண்டிப்பா வெற்றி கொடுப்பார் ,  எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது போய் விட்டு வருகிறேன் ......

அதுவரை நமது புண்ணகை பயணம் தொடரும் ....


அன்புடன்...
புண்ணகைதேசம் சிவா

குறிப்பு:
சமிபத்தில் நான் ஷர்ஜாஹ் வில் சந்தித்த ஒருவரின் கதை இது , எனது வலைப்பதிவில் தோல்வியான எதையும் சொல்லகூடாது என்பதற்காகவே கதையை மாற்றினேன் , உண்மையில் அந்த பெண் அடிபட்ட இடத்திலேயே இறந்து விட்டாள் , அவரோ சிவ தீட்சை வாங்கி கொண்டு , திருமணம் செய்யாமலே வாழ்கிறார் 45 வயது ஆகியும் , இன்று பெரிய நிறுவனம் ஒன்றின் முதன்மை அதிகாரி அவர் , உடல் ஆசைக்காக காதலை பெண்கள் மீது வீசும் நாய்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்வது ?
அவரது அம்மாவும் அவரை விட்டு சென்று விட்டார்

இப்போது இவருக்கென்று யாரும் இல்லை , நானும் ஒரு அநாதை என்று சிரிக்கிறார்
மாதம் மாதம் அநாதை குழந்தைகளுக்கு உதவுவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை ....

16 கருத்துகள்:

  1. தேவா அண்ணா உங்களை அறிமுகம் செய்து வைத்தார். உண்மையில் கண் கலங்கிவிட்டேன். நன்றாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் முதல் வருகைக்கும் பின்னுடளுக்கும் மிக்க நன்றி திரு . முஹம்மத் அவர்களே

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வருகைக்கும் பின்னுடளுக்கும் மிக்க நன்றி திரு . அருண் பிரசாத் அவர்களே

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு சிவா. இது போன்ற படைப்புக்களை உன்னிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நீங்க கதை சொன்னவிதம் ரொம்ப நல்லாயிருந்தது.. நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி . உலகத்தில் யாருமே அனாதைகள் இல்லை . தனியாக இருக்கிறார் என்றுவேண்டுமானால் சொல்லுங்கள் . அனாதை என்று சொல்லும் ஒவ்வொருவருக்கும் உறவு என்று சொல்லிக்கொள்ள நான் இருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  7. @ வில்சன் அண்ணா , தங்களின் வாழ்த்துக்களும் அறிவுரைகளும் எனக்கு இது போன்று எழுதுவதற்கு உந்துதலாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  8. @ அப்துல் காதர், தங்களின் வருகைக்கும் பின்னுடளுக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  9. @ பனித்துளி சங்கர் , தங்களின் பின்னுடளுக்கு நன்றி , யாரும் அனாதை இல்லை , நாம் இருக்கிறோம், அவர்களை பார்த்துக்கொள்ள...

    பதிலளிநீக்கு
  10. Ya its very nice. i am really proud of my dear brother. your way of writing is very nice.

    பதிலளிநீக்கு
  11. கண் கலங்க வைச்சுட்டியே சிவா, hatts off to that real great guy...

    எழுதி இருக்குற விதம் படிக்க படிக்க எழுத்தின் மேல் கண்கொட்டாமல் பயணிக்க வைக்கிறது...கனமா முடிஞ்சுடுச்சு , இது உண்மை சம்பவம் அப்டிங்கறது இன்னமும் ரொம்ப பாதிச்சுடுச்சு சிவா ...

    பதிலளிநீக்கு
  12. நன்றி விஜய் உண்மையில் இப்படி ஒருவர் இருப்பதை நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன பொது , நானும் நம்ப வில்லை பிறகு ஒரு சந்தர்பத்தில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தபோதுதான் இவைக்களெல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ... உலகத்துல ரொம்ப நல்லவங்க இருந்துகிட்டே தான் இருக்காங்க ..

    பதிலளிநீக்கு
  13. hey siva.. kalakita da.. unakula ivolovu thiramaiyaa.. I really appreciate u.. Melum melum valara en vaazhthukkal..
    Kathai patri sollanumnaa.. romba kashtama pochu.. Kathaila vara vijay hats off to him.

    பதிலளிநீக்கு