வியாழன், ஜூலை 01, 2010

நிலா..!


அதோ நிலவை பார்
ஒருவாய் சாப்பிடு
என் கண்ணே
உணவளிதாள் அம்மா
அன்று நிலவை காட்டி ..!

நேற்று நிலா
என்றால் அம்மா
ஊட்டிய சோற்றின்
யாபகம் ...!

யார் நிலவில்
இருப்பார்கள்
பாட்டி வடை
சுட்டு விற்கிறாள்
அங்கெ..!

இன்று நிலா என்றால்
அவளின் முகம்
என்னை பார்த்து
புண்ணகைக்கும்   பொது
பொர்ணமியாய்...

ஏன் இவ்வளவு வெட்கம்
என்னை கண்டவுடன்
மேக கூடத்திற்குள்
சென்று உன்னை
மறைத்து கொள்கிறாய் ..!

உனது வெட்கம்
தாங்காமல்
மழையாய் பெய்கிறது
மேகம் என் மேல் ...

காதல் மழையில்
நனைகிறேன் நான்
துரத்தில் நின்று
சிரித்து கொண்டு
இருக்கிறாய் ஒன்றுமே
தெரியாதது போல்
நிலவாய்...!

ஒரு இரவில்
உன் மீது வந்த
காதல் ...
வெயிலை வென்று
எடுத்த மழையின்
வெற்றி ....
என் ஆண்மையை
வென்ற உந்தன்
வெற்றி ...


கண்கள் மூடி
உன்னை நினைத்தாள்
உன்னை கைகளில்
பிடித்துவிடுகிறேன்
கண்களை விழித்து
பார்த்த போதுதான்
உணர்ந்தேன் நீ
என்னிடம் இல்லை ..!

நானும் என்னிடம்
இல்லை ,
என்னை உன்னில்
தொலைத்து விட்டு
தேடி அலைகிறேன்
விண்வெளியில் ...

குறிப்பு : எப்போ நிலவை பார்த்தாலும் , ஒரு பொண்ணு என்னை பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கு ....

8 கருத்துகள்:

 1. கவிதை சொட்டும் பாசத்தில் நனைந்தேன்.. நிலா அருமை. ஒளி வீசுகிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. //ஒரு இரவில்
  உன் மீது வந்த
  காதல் ...
  வெயிலை வென்று
  எடுத்த மலையின்
  வெற்றி ....
  என் ஆண்மையை
  வென்ற உந்தன்
  வெற்றி ...
  //


  மிக அருமையான வரிகள் தல...  //உனது வெட்கம்
  தாங்காமல்
  மலையாய் பெய்கிறது
  மேகம் என் மேல் ... //  காதல் சொட்ட சொட்ட எழுதுறது அப்டின்னு சொல்வாங்களே அது இது தான் ...

  இன்னும் நிறையா நீங்கள் எழுத வேண்டும் என்று ஆசை படுகிறேன்

  பதிலளிநீக்கு
 3. nandri vijay , nanba unathu karuthukalukku , ini thodarnthu eluthalam verum kavithaiyaay...

  பதிலளிநீக்கு
 4. unkal varukaikkum karuthukkum nandri thiru.muthukumar , nee kalum en inam than entru ninaikkiren...

  பதிலளிநீக்கு
 5. கோபம் அன்பின் வெளிபாடு
  நம்மீடம் அன்பாய்யுள்ள அவளின் சுட்டெரிஇகும் கோபம்
  மாலையில் குளிரூட்டும்
  இரண்டும் அன்பே

  பதிலளிநீக்கு