திங்கள், ஜூலை 12, 2010

ஒரு தேவதையின் கண்ணீர்....


ஒரு  பேருந்து  பயணத்தில்  என்னக்கு  ஏற்பட்ட மறக்க முடியாத  நினைவு  அது  , கல்லூரியில்  சேர்ந்து  விட்டு  திரும்பிக்கொண்டு  இருந்தேன்  , காரைக்குடி  வந்ததும்  வேறு  ஒரு  பேருந்துக்கு  மாறவேண்டும்   , கையில்  ஆனந்த   விகடன்  அட்டையில்  விஜய்  படம்  , காலை மதியம் இரண்டு  வேலையும்  நல்ல    இருந்தாலும் பேருந்தில் போகும் பொது பசி வந்தாள்  என்ன பண்ணுவது? முன்று  மணிநேரம் நிறுத்தாமல்  வண்டி போகும் அதனால்  போய் சாப்பிட  எதாவது வாங்கி வைத்து  கொள்ளலாம்  என்று  முடிவு பண்ணி, பேருந்து  புறப்படுவதற்குள்  போய் வாங்கி கொண்டு  வந்து விட்டேன் , அதிகமான  ஒன்னும் இல்ல ஒரு பாட்டில்  பெப்சி , பிஸ்கட் , சிப்ஸ் , சக்கலேட் அவளவுதான்  இதுக்குமேல நம்ம வயறு தாங்காது  மதியம் வேற சிக்கன் பிரியாணி வெயிட் டா சாப்பிடாசு    , கைகள் புத்தகத்தை   புரட்ட   ஆரம்பித்தன   , பேருந்தில்  பாடல்  ஒலிக்க   ஆரம்பித்தது  ஒருவர்  ஒருவராக  பேருந்தில்  ஏறி  உட்கார ஆரம்பித்தார்கள்  ,

அப்போது  ஒரு  பெண்  குழந்தை  ஒரு  ஐந்து  வயது  இருக்கும்  என்னை  நோக்கி  வந்தாள் , அலுக்கு   சட்டை  , மூக்கு வலிந்து கொண்டு  அதை  கையால்  துடைத்து  கொண்டே  , யாரோ  தின்று   விட்டு  தூக்கி   போட்ட   சாக்லேட்  கவரை வாயில்  கடித்து  கொண்டு  , என்னை நோக்கி அந்த குழந்தை,  அண்ணா  பசிக்குது  என்று கையை நீட்டியது  , நானும் பர்சில் தேடி பிடித்து சில்லறை எடுத்து கொடுத்து விட்டேன்  , ஒரு புன்னைகையோடு இரு கை கூப்பி வணங்கினாள்,

எனக்கு பின்னல் இருந்த ஐம்பது வயது மதிக்க பெண் ஒருவர் தனக்கு அருகாமையில் இருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் , அவ வீடு கல்யாணத்துக்கு வந்தேன், என்ன? பந்தி வச்சாங்க முன்று  முறைக்கு மேல சாப்பாடு வைக்கவே  இல்ல , இந்த பெண் குழந்தை அந்த அம்மாவிடம் போய் அம்மா பசிக்குது என்று கையை நீடினால் , உடனே அந்த அம்மா  சீறி பாய தொடங்கினார் , இந்த சனியனுகளுக்கு  வேற பிச்சை பிச்சைன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க   , அய் அந்த பக்கம் போடி என்று எந்த பெண் குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர் , அம்மா பசிக்குதுமா என்று சோக முகத்துடன் கெஞ்ச ஆரம்பித்தாள்  அந்த பெண் குழந்தை, வசை மொழி  மட்டும் கிடைத்தது( இந்த அம்மாவுக்கு இந்த வயதில் ஒரு பேர குழந்தை இருந்து ,அது இப்படி பிச்சை எடுத்தால் எப்படி இருக்கும் ) .

அதற்கு பிறகு உட்கார்ந்து இருந்த கனவான்களும் அந்த பெண்குழந்தையை விரட்ட ஆரம்பித்தனர்( இப்போதுள்ள பெண்களுக்கே இறக்கம் இல்லாமல் போய் விட்டது ஆண்களுக்கு இருக்குமா என்ன..? )  
அவள் பேருந்தை விட்டு கீழே இறங்கினாள் , பேருந்துக்கு  கீழே  யாரோ  பேசுவது  கேட்டது  , ( அந்த பெண் குழந்தையை பிச்சை எடுக்க வைப்பவள் ) ஏண்டி  மூணு   வேலை   நல்ல  கொட்டி கொள்கிறாய் ,  போய்  அழுது  கிட்டே  காசு கேளுடி  , அப்பதான்  நிறைய   காசு  கொடுப்பாங்க    என்றாள்  , அதற்கு  அந்த  பெண்  குழந்தை  : எனக்கு  பசிக்குது  காலையிலும்    நான்  சாப்பிடவில்லை    உண்மையாகவே ரொம்ப பசிக்குது  என்றாள்   அழுது  கொண்டே  , உனக்கு  சாப்பாடெல்லாம்  கிடையாது, பெரிய கலெக்டர் வீட்டு குழந்தை இவள் ,  போய்   ஒரு  50 rs யாவது  வாங்கிட்டு  வந்து   உனக்கு  சாப்பாடு  .

வயிற்றில் பசி கண்களில் கண்ணீர் மூலையை செயலிழக்க வைக்கும் வெயில் , உலகம் இருண்டதை போல அந்த பெண் குழந்தை உணர்திருக்க கூடும் , அந்த  குழந்தை   தான் ஏற்கனவே இந்த பேருந்தில் ஏறியதை மறந்து ஏறிவிட்டால் , பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் திட்ட ஆரம்பித்தார்கள் அந்த பெண் குழந்தையை , கீழே  இறங்கியவள், ரொம்ப பசிக்குது என்று அழுது கொண்டே சென்றாள்.

சில  சமயங்களில்  மட்டும்  நம்  வாய்  மூடப்படமலேயே  ஊமையாகிறோம் ,  கை  கட்டமலையே  கை  காட்டி  வேடிக்கை  பார்க்கிறோம்  என்பது  மட்டும்  புரிந்தது,  பேருந்து  கிளம்பியது  , கையில் இருந்த பிஸ்கட் யாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம் , அவள்  கண்ணீருடன்  வேறு  ஒரு  பேருந்தில் "அம்மா பசிக்குது " என்று  கை நீட்டுவதை தொடர்ந்தாள்  ……..

அவள் என் நினைவில் சிம்மாசம் இட்டு புன்னகையுடன் உட்கார்ந்த பொது .... என் மொபைல் ஒலித்ததை என்னால் உணரமுடிந்தது , என் அம்மா , சாப்பிடு விட்டாயா  ....? நான் நல்ல சப்பிடுடேனம்மா ஆனா ....? 

 இவைகளுக்கு பதில் வேண்டும்  : குழந்தைகள் பிச்சை எடுப்பது ஒரு ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்குமா..?
இது யார் செய்த குற்றம் ..? ஒரு திருடன் , ஒரு விபச்சாரி , இவர்களின் பின்னல் மறைக்க பட்ட இது போன்ற ஒரு கதை இருக்கும் , இதெற்கெல்லாம் முடிவு சமுதாயம் தான் சொல்ல வேண்டும் நீங்கள் தான் சமுதாயம் , பதில் சொல்லுங்கள் ......

10 கருத்துகள்:

  1. Thankal Varukaikkum , Karuthukkum nandri , thiru . jeevan ponni, Enakku pathil theriya villai , ithu thodarnthu konde irukkirathu athanaal than unkalidam kedden...

    பதிலளிநீக்கு
  2. இதுக்கான பதில காலம்தான் சொல்லனும். இறங்கி வெலை செய்யனும். அதுக்கு எத்தன பேர் வருவாங்க. நானே தயார இல்லாத போது. என்ன பதில் சொல்லுறது. ஆனா முடிவுரைங்குறது இப்பொதைக்கு இல்ல.

    பதிலளிநீக்கு
  3. தப்பா நினைக்காதீங்க முடிஞ்ச அளவுக்கு எழுத்துப்பிழைய குறைக்கப்பாருங்க.

    பதிலளிநீக்கு
  4. சிவா, இந்த மாதிரி குழந்தைகளெல்லாம் ஏதாவது ஒரு தாதா கட்டுப்பாட்டுல இருக்கும். (நான் கடவுள் சினிமா மாதிரி). நான் ஒரு முறை இதை நேரில் கண்டு இருக்கேன். So, நீயும் நானும் தனியா திருத்த முடியாது. அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்கனும்.

    பதிலளிநீக்கு
  5. Nandri thiru.jeevan ponni , oru nanbananai eluthu pilaiyai thirutha solli irukkirirkal nanri , thiruthikolkiren, varukaikku nandri, mudivai kadavulidam viddu vidalaam ...

    பதிலளிநீக்கு
  6. என்ன செய்யலாம்....? கடவுளிடம் விட்டுவிடலாம்....ம்ம்ம் சரியா படலை.....! நனே இறங்கி செய்யத் தயாராயில்லை...ம்ம்ம்ம் இது எப்படி பதிலாகும்...

    அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்னா கூடா நாமதன் கம்ப்ளெய்ன்ட் பண்ணனும்....


    இது போல அதிகம் இப்போ நடக்கிறது இல்ல இருந்தாலும்.... நாம டைரக்டா சாப்பாடு வாங்கி கொடுக்கலாமே....இதுல ஒரு பெரிய கஷ்டம் இருக்கிற மாதிரி எனக்குத் தோணல....

    சிந்திக்க தூண்டும் விசயம்தான்..வாழ்த்துக்கள் தம்பி...!

    பதிலளிநீக்கு
  7. மிக அழுத்தமான பதிவு, எதார்த்தமா சொல்லி இருக்கீங்க .சிந்திக்க படவேண்டிய ஒன்று என்பதை அழகாக உணர்த்தி இருக்கிறீர்கள் ..
    நிச்சயம் உதவலாம் ஒருவேளை உணவிற்காவது...
    அருமையான சமூக சிந்தனை தோழா..

    வாழ்த்துக்கள், நீ எழுதி போட்டு இருக்கும் வார்த்தை ஒவ்வொன்றும் ஒரு நாள் பற்றி எரியும், அதுவரை எழுதி போட்டு கொண்டே இரு...

    பதிலளிநீக்கு