ஞாயிறு, அக்டோபர் 16, 2011

காதல் கவிதைகள் ...!


 
கீற்று
கொட்டகை
பாவாடை தாவணி
அவள் எழுந்து சென்ற பின்
அவள் இருந்த இடத்தில்
சென்று அமர்ந்து கொண்டேன்
முதன் முதலாய் எனது
காதல் சொல்லப்பட்டது .... அவளை
காண்பதற்காகவே
முதல் வரிசையில்
போய்  நின்று
கொள்கிறேன்
ஒன்றும் தெரியாதவன்
போல அவள்
என்னை பார்கையில் . . .
 
புதிதாய்
வாங்கிய பேனா
என் கையப்பத்தை
மறந்து எழுதின
உந்தன் பெயரை ... நான்
படித்த
கவிதைகளில்
மிகவும்
அழகானது
அவளின்
பெயர்தான்  ...


 நானும்
ஒரு அன்றாடம் காச்சி
ஆகிப்போனேன்
உன்னை பார்க்காத
நாட்களில்
எனது கண்கள்
பசியருவதில்லை ....


வனோ
ஒருவனின்
கை பற்றி சென்றவளை
நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
தவிப்பதில் இருந்தே
உணர்கிறேன் ,
எனது காதலை...
து
இன்னும் நீளாதா
என்று நான்
ஏங்கி தவித்த பொது
முடிந்தது உந்தன்
முதல் முத்தம் . . .


யார்
சொன்னது சேலையை
பெண்கள் மட்டும்
அணிகிறார்கள் என்று
நானும் அணிகிறேன்
சேலையை
இரவில்
உன்னுடன் சேர்த்து ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக