சனி, அக்டோபர் 29, 2011

அன்பே . . .

ம்
திருமணதன்று
கைது செய்தேன்
உன்னை அன்பே
ஆனால்
நானல்லவோ 
உன்னிடம் கைதி
ஆகிப்போனேன்...


த்தனை
கொடி ஆண்கள்
இந்த உலகில்
சிலர் அழகு ,
சிலர் அறிவு
நீ அழகில்லை
நீ அறிவில்லை
அழகாய் இருக்கிறாய்
அறிவாய் இருக்கிறாய்
எனக்கு மட்டும் ....


காலையில்
சுட்டெரித்து
மாலையில் மயக்கும்
சூரியன் போல
நீயும் காலையில்
என்னை படுத்தி
மாலையில்
அணைக்கிறாய் ....
காலையில்
உன் மேல்
கோபம் என்றபோதும்
மாலையில் அது
மறைகிறதே
தாமரை இலை நீர் போல
இதற்கு பெயர்தான் காதலா
என் காதலா .....

நீயே
என் துக்கமும்
சந்தோசமும்
ஆகிப்போனாய்
உன் கை
பிடித்தது முதல் . . .நீ
வரும் வரை
காத்திருந்து
கண்கள் பூத்து
போகின்றன
ஏன்  இந்த மலரை
வாட வைக்கிறாய் .....


ன்னை
உனக்கு
பிடித்து இருக்கிறதா
என்று நான் கேட்டபோது
நீ தந்த மௌனம்
என்னை கொன்றது ...

ன்
கண்கள்
நீரால் கரைந்த பொது
நீ தந்த முதல் முத்தம்
என்னை வென்றது .....னதில்
உன்னையும்
வயிற்றில் உன்
குழந்தையையும்
சுமக்கின்றேன் காதலனே
வலிக்கவில்லை 
ஏனென்றால்
நீதானே
எப்போதும் என்னை
சுமக்கின்றாய் . . .னக்கு
என்ன வேண்டும்
கேள் என்னிடம்
என் உயிரை தவிர
உனக்கு முன்னால்
சாகமாட்டேன்
நீ போன பிறகு
வாழவும் மாட்டேன் ....

4 கருத்துகள்:

 1. ///நீயே
  என் துக்கமும்
  சந்தோசமும்
  ஆகிப்போனாய்
  உன் கை
  பிடித்தது முதல் . . ./// ம்.... :-)


  ///உனக்கு முன்னால்
  சாகமாட்டேன்
  நீ போன பிறகு
  வாழவும் மாட்டேன் ..../// chanceless..

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் தம்பி! உன்னை நினைத்துக் கொண்டு வாசித்தேன். அப்படியே பொருந்தியது.
  // நீ அழகில்லை
  நீ அறிவில்லை
  அழகாய் இருக்கிறாய்
  அறிவாய் இருக்கிறாய்
  எனக்கு மட்டும் ....//
  செம பன்ச்!!

  பதிலளிநீக்கு