புதன், மே 05, 2010

காதல் கவிதை...!


கைகுட்டையில் அவள் முகம் பதித்து
சிரித்த பொது சிந்திய முத்துக்களை
அல்லியவது பிழைத்து கொள்ளலாம்
என்று , கோடி கேட்டாலும் கொட்டி
கொடுக்கும் வள்ளல் அவள் ...
சிரிப்பில்  மட்டும் ஏனோ
 கஞ்சத்தனம் காட்டுகிறாள்

ஒரு மழைகாலத்தில் அவள்
வானம் பார்த்து புன்னகைத்த
மேகமாக பிறந்திருக்க கூடாத
ஒரு நொடியே வாழும்
மலை துளியாக அவள் மேல்
விழுந்திருக்க கூடாத
அவளை தொட்ட புண்ணியத்தில்
கங்கையில் சேர்ந்திருப்பேன்

ஒரு மலை வேளையில்
தயங்கி தயங்கி வந்து
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்றபோது உன் காதலை மறைத்து
நீ காடிய பொய் கோபத்தில்
நிறைத்திருந்தது நமது காதல்...!

மார்கழி மாத குளிரில்
அதிகாலை சுப்பிரபாதம்
பாடியே அவள் வரும் வழியில்
பூத்திருக்கும் மலர்களை விட
மலர் அணிதுவந்த
எம்மலர் அழகானது...!


அவள் பிரிவில்  வாழும்
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்
 நீரின்றி வாடும் புல்லுக்கும் செடியுக்கும்
உயிர் அளிக்கும் மலையாக மட்டும் அல்ல
சுட்டு எரிக்கும்  வெயிலாகவும்
என்னை வாட்டி எடுக்கிறாள்...

நானே பார்த்து எழுதி படித்து
ரசித்த அவள் எவ்வளவு அழகு
 என் கவிதைக்கு மட்டும் அல்ல
எனக்கே அவள் சொந்தக்காரி ஆனா பொது 

-
சிவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக