என்று பார்த்திருப்பேன்
உன்னை ...,
அழிந்து போன
என் வாழ்கை புத்தகத்தின்
கல்லூரி பாடத்தில்
அழியாத உனது பக்கம்
மட்டும் இன்னும் அழகாய்..,
எதெற்கெல்லாம் கோபப்படுவாய்
என்னிடம்...,
என் தட்டில் நான் மட்டும்
சாப்பிட்ட பொழுது ,
நம் அன்னையை
உன் அம்மா என்று
சொன்ன பொது ,
நேர்முக தேர்வில் ஒரு முறை
நான் தோற்று நொந்த பொது ,
நான் என் மேல் வைக்கத
நம்பிக்கை நீ வைத்தாய்
சிறு பூச்சி கண்டு நடுங்கிய
வீரன் என்னை
வால் ஏந்தி போர் தொடுக்கும்
துணிச்சல் தந்தாய்..,
உன்னிடம் கேட்க நினைத்த
கேள்விகள் ஆயிரம்
இதற்கு மட்டும் பத்தி சொல்
போதும்
பணம் பதவி பெண் பித்து பிடித்து
அலையும் உலகில்
நீ மட்டும்
எங்கிருந்து வந்தாயட
எதையும் என்னிடம்
எதிர் பார்க்காத
இறைவன் போல ...,
உன் வீட்டு திண்ணை
கல்லூரி மரங்கள்
விளையாட்டு மைதானம்
வெள்ளி கிழமை
பிள்ளையார் கோவில்
அனைத்தும் காத்து கிடக்கின்றன
நமது வருகைக்காய்..,
என் மேல் எனக்கே இல்லாத
அக்கறை உனக்கு
நீ மட்டும் என்னுடன் இறு
அலை அடித்த போதும்
கரை சேர்வேன் வாழ்வில் ..,
நீ என் மேல் கொண்ட
கோபத்திற்கு தமிழில்
வேறு அர்த்தம் தேடினேன்
அக்கறை என்று பதில் கிடைத்தது ...,
உன் முகம் பார்க்காத
நாட்களிலும் சூரியன்
கலையில் வந்து
காட்டுகிறது
உன் முகத்தை ..,
நீ என் ஆட்டோகிராப் நோட்டில்
எழுதிய ஒற்றை வரியை
மீண்டும் மீண்டும்
படிக்கிறேன்
அது
" ஈருடல் ஒருயிராய் இறைவன்
செய்த தவற்றின் விளைவுதான்
நாம் நண்பா...,"
-
சிவராஜன் ராஜகோபால்
நல்ல கவிதை .வாழ்த்துகள் ."வால்" ஏந்தி அல்ல வாள். திருத்தவும் .
பதிலளிநீக்குஎதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்