திங்கள், மே 10, 2010

எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க..!


சில சமயங்களில் நாம வாழ்க்கைல பெரிய முட்டஅள் தனமான முடிவுகளை எடுப்போம் , நம்ம நண்பர்கள் சொல்லியும் , பெரியவங்க சொல்லியும் அதை எல்லாம் கேக்காம இந்த மாதிரி முடிவுகளை நாம எடுக்குறோம் , அப்படி நான் சமமீபத்தில் எடுத்த ஒரு முடிவு , எனக்கு பெரிய தலை வலியை கொடுத்தது , எப்பவும் எந்த தவறும் வாழ்கையில் செய்யவே கூடாதுன்னு இருக்குற எனக்கு இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்தது , தெரிந்தே தவறு செய்தது மாதரி ஆகிரடுச்சு ,
எந்த முடிவும் எடுக்கிற முன்னாள் என் நண்பர்களிடம் , என் குடும்பத்தாரிடம் அவர்களின் கருத்தை கேட்ட பிறகே , தீவிரமாக சிந்தித்து முடிவு எடுப்பேன் , என் நண்பர்களிடம் அதை பத்தி கேட்ட பொது ஐயோ நண்பா அதை மட்டும் செய்யதே நமக்கு எதுக்குடா அது எல்லாம் வாழ்க்கைல ரொம்ப ரிஸ்க் எடுக்காதே என்றார்கள் ,
எனக்கு மட்டும் இது பெரிய தவறவே தோணல , என் அலுவலகத்தில் உள்ள மேலாளரிடம் இதை பத்தி சொன்ன பொது , அவர் சொல்லிய பதில் இது , நீ நல்ல இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் தம்பி , அதனால சொல்கிறேன் ,  அத மட்டும் செய்யவே செய்யத , ரொம்ப வருத்த படுவே என்று ,
அட என்னடா எல்லாரும் இப்படி பயபடுறாங்க , நம்ம அண்ணா ஒருத்தர் இங்கே இருக்காரே அவரிடம் கேக்கலாம்னு அவருக்கு முதல் முறை அழைத்தேன் , அது பற்றி அவரிடம் கேட்ட பொது , அவரோ பண்ண கூடாது அன்று உத்தரவே போட்டு விட்டார் , நான் முடிந்த வரை அவரிடம் எடுத்து கூறியும் எந்த பயனும் இல்லை , இதை பத்தி பேசுவதாக இருந்தால் இனிமேல் என்னக்கு கால் பண்ணாதே என்று இணைப்பை துண்டித்து விட்டார் ,
அப்படி என்ன நாம கொலையா செய்ய போறோம் எல்லாரும் இவ்வளவு பயபடுராங்கலேன்னு , பண்ணிதான் பாத்துருவோம் அப்புடின்கிற முடிவுக்கு வந்தேன் , துணிச்சலோட , எதுக்காகவும் நாம பய பட வேண்டாம்னு முடிவு பண்ணிடு , அதுவும் போன சனிக்கிழமை தான் ,
எல்லாரும் பயந்த அந்த ஒரு செயலை துணிந்து செஞ்சேன் , செஞ்சு முடிச்ச பிறகுதான் தெரிஞ்சது , அவங்க சொன்னது எல்லாம் உண்மை தான் நான் தான் அவசரபட்டு இந்த மாதிரி பண்ணிடேன் , நான் இப்படி பண்ணினதா என் நண்பர்களிடம் சொன்னால் என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பார்கள் ,  பெரிய தப்பு பண்ணிடமேன்னு ரொம்ப வருத்த பட்டேன் , நீங்க இந்த மாதிரி தப்பு பண்ணிராதிங்க தயவு செஞ்சு , என்ன பண்ணினேன்னு உங்களுக்கு சொல்லவே இல்லையே சுறா படத்துக்கு தெரியாம போய் தியேட்டர்ல பஅத்துட்டேங்க ...
 
குறிப்பு :
இத படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது...

1 கருத்து:

  1. சொல்ல சொல்ல ஆண்டி பொண்ண பொண்ண பெத்தானாம்...ஏன்டா தம்பி எத்தனை தடவை உன் கால்ல விழுந்து அழுது சொன்னேன்...சுறா படம் பாக்காத ...பாக்காதன்னு...! கேட்டியா...! இப்போ அனுபவி.... !

    இன்ரடியூசிங் சீனே.. சரியில்ல கொடல பொறட்டி வாந்தி வர்ற மாதிரி... இருக்குன்னு சொன்னேன் ...இப்போ வந்து குத்துதே கொடயுதேன்னு பொலம்புனா....,,,,,

    ம்ம்ம்..தப்பு பண்ணினவன் தண்டன அனுபவிச்சேயாகணும்......சுறா..பாத்தீல்ல இப்போ நீ அனுபவி!

    பதிலளிநீக்கு