செவ்வாய், ஜூன் 22, 2010

உயிர்...!

குமார் இவர் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர் , அன்று வழக்கமான தனது பணியில் தீவிரமாக இருந்தார் , அவருடைய மொபைல் சைலென்ட் மோடில் இருந்தது , மணியை பார்க்காமல் வேலை செய்யும் சில வல்லுனர்கள் போலவே இவரும் இருந்தார் , எழுந்து வீட்டுக்கு போகலாம் என்று எண்ணி எழுந்தார் அப்போது மணி இரவு 8 :30 ஆகி இருந்தது , அப்போது வேலை நிமிர்த்தமான அழைப்பு வர மீண்டும் அமர்ந்தார் , எதற்சையாக அவரது மொபைல் எடுத்து பார்த்த பொது தெரிந்தது ,

அவரது வீட்டில் இருந்து 20 மிஸ் கால்கள், அதிர்ந்தார் குமார் என் இவ்வளவு மிஸ் கால்கள் வீட்டில் இருந்து , ஒரு sms வந்து இருந்தது , அதில் " Come Fast " என்ற வரி மட்டும் இருந்தது , வேகமாக கிளம்பினார் குமார் , அவரின் முத்த அதிகாரி அவரை அழைத்தார் , குமார் வீட்டுக்கு போக வேண்டும் என்றார் , முத்த அதிகாரி வேலையை முடித்து விட்டு போ என்றார் , இருக்கையில் அமர்ந்தார் குமார் மீண்டும் கைகள் செல்பேசி நோக்கி போயின , என்ன ஆயிற்று , குமாரின் மணம் பதற ஆரம்பித்தது , வேகமாக எழுந்து நடந்தார் தனது கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி , வீட்டில் தனியாக இருந்த நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவியின் மொபைல் போனுக்கு முயற்சி செய்த படியே , மொபைல் " No Answer " என்ற பதில் வந்தது , என்ன ஆனது குமாரின் மனைவிக்கு ...,

செல்லும் வழியில் தன்னை தானே நொந்து கொண்டார் குமார் , நான் தப்பு செய்து விட்டேன் , நிறை மாத கர்ப்பிணியான எனது மனைவியை பார்த்து கொள்ளாது எனது தவறு , பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது குமாருக்கு , குமாரின் செல்பேசி சிணுங்க ஆரம்பித்தது , மறு முனையில் அவரின் முத்த அதிகாரி , தாங்கள் ஏன் வேலையை முடிக்காமல் சென்றீர்கள் நாளை இதற்கான விளக்கம் வேண்டும் என்றதுடன் இணைப்பை துண்டிதுக்கொண்டர் , குமாரின் கோபம் தலைகேறியது அவரது காரின் வேகமும் கூட , செல்லும் வழியெல்லாம் தனது மனைவியின் செல்பேசிக்கு முயற்சி செய்து கொண்டே சென்றார் , பதில் எதுவும் வரவில்லை , வீடும் வந்து விட்டது , காரில் இருந்து இரங்கி வேகமாக ஓடி சென்று பார்த்தார் குமார் , தான் மனைவிக்கு என்ன ஆகிற்று ....?

வீட்டின் அணைத்து பகுதியிலும் தேட ஆரம்பித்தார் குமார் , எங்கே அவள் ? சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள், குமாரின் பதற்றம் அதிகமானது , எந்த அசைவும் இல்லை குமாரின் மனைவியிடம் , தனது மனைவியை மடியில் வைத்து சுய நினைவிற்கு கொண்டு வர முயற்சித்தார் குமார், எந்த பயனும் இல்லை , தனது மனைவியை தூக்கி சுமந்த படியே காருக்கும் , காரில் மருத்துவ மனைக்கும் செல்ல ஆரம்பித்தார் , காரின் வேகம் அதிகரித்தது , அதற்குள்  சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு விளவே நொந்து போனார் குமார் , கண்களில் கண்ணீர் , தனது வெள்ளை சட்டை முழுவதும் மனைவியின் ரத்தம் , பச்சை சிக்னல் விளவே மீண்டும் காரின் வேகம் கூடியது ,  மருத்துவ மனையும் வந்தது , வேகமாக ஹரேன் அடித்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனையின் வாயிலில் போய் தட்டி பார்த்தார் யாரும் வர வில்லை , மருத்துவமனை தொலை பேசி எண்ணுக்கு அழைத்து பார்த்தார் எந்த பதிலும் இல்லை , மணி 12 :00 இரவு , அனைவரும் உறங்கிக்கொண்டு இருப்பார்கள் ,  குமாரின் கண்கள் நீர் வெள்ளத்தில் தனது மனைவியை பார்த்தது ,என்ன செய்வது ...?

மருத்துவமனை சுவரை எப்படியாவது தண்டி உள்ளே இருக்கும் மருத்துவரை அழைத்து வரலாம் , சுவரின் உயரமோ குமாரின் உயரத்தை விட அதிகமாக இருந்தது , தனது காரை எடுத்து சுவரின் ஓரம் நிறுத்தி அதன் மீது ஏறி மருத்துவமனையின் உள்ளே குதித்தார் , சுவற்றில் அவர் உரசி கை கால் எல்லாம் ஒரே சிராய்ப்பு , குமாரின் கை கால்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது , குமாருக்கு தெரியவில்லை தனக்கு ரத்தம் வருவது கூட , உள்ளே இருந்த மருத்துவரை அழைத்து வந்தார் , மருத்துவமனை வாயில் திறக்கப்பட்டது , குமாரின் மனைவி தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டார் ..., தனது மனைவியும் குழந்தையும் தன்னிடமே வர வேண்டும் என்று வேண்டி கொண்டார் , தான் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்க பாட்டு இருப்பதை தனது தாய் தந்தையருக்கு தொலை பேசியில் அழைத்து சொல்லி இருந்தார் , குமாரின் மனைவியின் தாய் தந்தைக்கும் கூட ...,

மருத்துவர் வெளியில் வந்தார் , குமாரின் உயிர்  அவரிடமே இல்லை , மருத்துவரின் கைகளை பற்றி கொண்டு குமார் கேட்டார் தனது மனைவியின் ஆரோக்கியம் பற்றி , உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது , என் மனைவி ..? என்றார் குமார் , அவர்கள் இன்னமும் சுய நினைவு திரும்ப இல்லை , காலை 6 :00 மணிக்குதான் எதுவும் சொல்ல முடியும் என்றர் மருத்துவர் , குமாரிடம் அவரின் குழந்தையை குடுத்தார்கள் ,

குழந்தையை வாங்கிய குமார் நீர் நிரம்பிய கண்களுடன் தனது மனைவியையே பார்த்து கொண்டு இருந்தார் , பொழுது விடிந்தது குமாரின் உறவினர்கள் அனைவரும் வந்து விட்டனர் , மருத்துவர் வெளியே வந்தார் , குமாரின் நெஞ்சம் பட படக்க ஆரம்பித்தது , தனது மனைவி இல்லாத உலகை குமாரால் நினைத்து கூட பார்க்க முடியாது , நீங்கள் மட்டும் போய் உங்கள் மனைவியை பார்க்கலாம் , டாக்டர் ,பயத்துடன் குமார், ஒன்னும் இல்லை போய் பாருங்கள் , குமார் தனது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்தார் , சூரியன் ஒளிதர கிளம்பியது , சூரிய ஒளி அறைக்குள் வந்தது கண் விழித்தல் குமாரின் மனைவி , இப்போதுதான் உயிர் வந்தது குமாருக்கு , மனிவியின் கைகளை பற்றி கொண்டார்  குமார் , என்னை மன்னித்து விடு என்று சிறு பிள்ளை போல அழ ஆரம்பித்தார்  , குமார்  மனைவின் கைகள் குமாரின் கண்ணீர் துடைக்க ஆரம்பித்தன ,  வேகமாக சென்று தனது குழந்தையை வங்கி வந்து மனைவியிடம் கட்டினார் குமார் , குழந்தையுடன் தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டார் குமார் ...,

இன்னம் ஒரு வரம் கழித்து நீங்கள் வீட்டுக்கு போகலாம் என்றர் மருத்துவர் ..,

அந்த ஒருவாரம் குமார் அலுவலகம் செல்லவே இல்லை ...,

வீட்டுக்கு வந்த பிறகு குமார் தனது கணியில் , தனது ஈமெயில் பார்த்து கொண்டு இருந்தார் , அதில் ஒரு மெயில் அவருடைய அலுவலகத்தில் இருந்து , என் வரவில்லை அலுவலகத்திற்கு எங்களுக்கு விளக்கம் வேண்டும் என்று இருந்தது , அவரருகில் அவரது மனைவி வந்து அமர்ந்தார் , எதார்த்தமாக தனது கணவனின் கை கால்களில் காயம் இருப்பதை கண்டு அதிர்ந்து எப்படி வந்தது என்று கேட்டார் நடந்ததை சொல்லி முடித்தார் குமார் , குமார் மனைவியின் கண்கள் நீரால் நிரம்பின , குமாரின் நெற்றியில் முத்தமிட்டு " I LOVE you " என்றார்...,

அலுவலகத்தில் இருந்து வந்த மைலுக்கு பதில் குடுத்தார் குமார்  எனது வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் ....,

குறிப்பு : இது ஒரு உண்மை கதை ....,

    

26 கருத்துகள்:

  1. என்று சொல்லக்கூடிய...வேலையை பற்றியே சிந்தித்தும் தன்னுடை நிர்வாகத்திற்கு பயந்தும் நிறையெ பேர் குமாரைப் போல இருக்கிறார்கள்.....வேலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு குடும்பமும் முக்கியம்....என்று சொல்லியிருக்கிறாய் தம்பி....! அசத்தல் தொடருங்கள்...வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பலரின் உணர்வுகள் இப்படித்தான் .

    பதிலளிநீக்கு
  3. nandri panithuli sankar avarakale , unkalathu anbana vendukolukkum nandri...

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பதிவு ...வாழ்த்துக்கள் தோழரே

    பதிலளிநீக்கு
  5. நல்ல வேலை யாருக்கும் எதுவும் ஆகல.

    பதிலளிநீக்கு
  6. அலுவலகத்தில் இருந்து வந்த மைலுக்கு பதில் குடுத்தார் குமார் எனது வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் ..

    நல்ல முடிவு....

    பதிலளிநீக்கு
  7. Its a very nice story... Some fellows are really live like machine. But they recognize the truth when they loose their family...


    Thanks

    பதிலளிநீக்கு
  8. nandri thiru tamizhan avalkale , so much of people doing the work with out seeing time , they should change them self...

    பதிலளிநீக்கு
  9. மிகவும் விறுவிறுப்பான கதை. இதை கதையென்று சொல்வதைவிட வாழ்வியல் என சொல்லலாம். பெரும்பான்மையான மேலதிகாரிகள் இப்படி தான் இருக்கிறார்கள். குமார் தனது தரப்பு நியாயத்தை சொல்லி மீண்டும் அந்த குட்டையில் விழாமல் சுயமரியாதைக்கு இடம் கொடுத்தது நல்ல திருப்பம். மிகவும் அருமை சிவா!!

    பதிலளிநீக்கு
  10. உண்மையாக மனைவியும் குழந்தையும் சௌக்கியமாக இருப்பது மகிழ்ச்சி, நல்ல அனுபவக் கதை, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. உண்மைக் கதை - சுபமாக முடிந்தது மகிழ்ச்சி - ம்ம்ம் - வாழ்வில் இது இயல்பாக நடக்கிறது - என்ன செய்வது .... நல்வாழ்த்துகள் சிவராஜன்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. Siva.. nallaa iruku kathai.. unmaiyaana anbu ikkattaana soozhnilaigalil thaan veli varum.. Keep going.. :)

    பதிலளிநீக்கு
  13. @Srilekha , Thank you , kandippaka unmaiyana anpu namakku ethavathu problem varum pothu than theriyum...

    பதிலளிநீக்கு