ஞாயிறு, ஜூன் 06, 2010

நாய் குட்டி நட்பு...


ஒரு ஐந்து வயது இருக்கும் எனக்கு , நல்ல மழைக்காலம் , வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கூரை வீடு , அதற்கு பக்கத்தில் மழையில் நனைந்து விளையாடியது போல் யாபகம், அப்போது என் நண்பனின் அப்பா அவன் மழையில் நனைவதை பார்த்து விட்டு , ஒரு கம்புடன் அவனை நோக்கி வந்தார் , டாய் உங்க அப்பா கம்போட வருகிறார் என்ற சத்தம் கேட்க நண்பன் சிட்டாய் பறந்தான் நானும் அவனுடன் சேர்ந்து , கூரை வீட்டில் போய் ஒளிந்து கொண்டோம், நண்பனின் அப்பா நண்பனை தேடி விட்டு சென்று விட்டார் ,

கூரை வீட்டின் உள்ளே சின்னதாய் ஒரு சத்தம் , உள்ளே போய் பாக்கலாம் என்றான் நண்பன் , இல்லை வேண்டாம் என்றேன் நான் ,  உள்ளே நுழைந்தான் நண்பன் , ஏய் நாய் குட்டிடா , அங்கே இருந்த அனைவரும் வேகமாய் கூரை வீடுக்குள் ஓடினோம் , ஆள் ஆளுக்கு ஒரு நாய் குட்டியை எடுக்க , கடைசியாய் ஒரு நாய் குட்டி இருந்தது அதை நான் எடுத்தேன் , நண்பன் சொன்னான் , அது பொட்ட நாய் டா அதையா  வளர்க்க போகிறாய் , இல்லடா இது ஆண் தான் என்றேன் , நல்ல கீழே தூக்கி பாரு உனக்கே தெரியும் , பெண் நாய் தான் அது , கஷ்டமாகி விட்டது எனக்கு , இருந்தாலும் பரவ இல்லை .. அந்த நாய் குட்டிய எனக்கு ரொம்ப புடிச்சு இருந்ததது .

வீட்டில் மாடிபடிக்கு கீழே உள்ள ஒரு சின்ன அறையில் அந்த நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்தேன் , எப்படி அதுக்கு பால் உற்றுவது, ஒரு யோசனை , அம்மா காலையிலும் மாலையிலும் நமக்கும் காபி தருவாங்க அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு , பாலை  மட்டும் கேட்டு வாங்கி , அந்த நாய்க்கு கொடுத்திரலாம் ,  நான் சாப்பிடுவதில் பாதி என் நாய் குட்டிக்கு போய் விடும் , நான் சாகும் வரை என் நாய் குட்டியும் என்னுடன் இருக்க வேண்டும்  என்ற ஆசை எனக்கு , நாட்கள் ஓடின என் நாய்குட்டி வளர ஆரம்பித்தது ,

ஒரு நாள் இரவில் நன்கு உறங்கி கொண்டு இருந்தேன் , இடியுடன் மலை பெய்து கொண்டு இருந்தது , உறக்கத்தில் இருந்து திடிரென விழித்தேன் , என் நாய்குட்டி மழையில் நனைந்து கொண்டு இருக்குமே , இடியில் பயந்து போய் இருக்கும் , அதை எப்படியாவது அம்மாவிற்கு தெரியாமல் விட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டியது தான் , மணி காலை 6 இருக்கும் , என் நாய் குட்டி வைத்த இடத்தில் இல்லை , எங்கே போய் இருக்கும் , வேகமாக வெளியில் போய் தேடினேன் மலையில் நனைந்து கொண்டே , எங்கும் கிடைக்க வில்லை ,  எங்கே போனது அது என்னை மறந்து ......!

அங்கெ இங்கே என கால்கள் நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது , உடலை மழை நனைக்க , கண்களை கண்ணீர் நனைக்க தொலைந்து போன நாயை தேடி 3 மணி நேரம் அலைந்தேன் , இறுதியில் , நண்பர்களிடம்  கேட்டேன் , உன் நாயை அங்கெ பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்றனர் , தேடி அலைந்து ஓய்ந்து போய் விட்டுக்கு வந்திருக்கும் என்று எண்ணி வீடு திரும்பினேன் மழை விடவே இல்லை , தெரு முனையில் எதோ இறந்து கிடப்பது எனக்கு தெரிந்தது , என்னவாக இருக்கும் ? , என் நாய் போல இருந்தது , அருகில் சென்று பார்த்தேன் , என் நாய் தான் , எதோ வாகனத்தில் அடி பட்டு இறந்து விட்டது , மழை நீரில் அது மிதந்து கொண்டு இருந்தது ...,
அதன் பின்பு எந்த வீட்டு செல்ல பிராணியும் நான் வளர்கவே இல்லை ....


20 வது  வருடங்களுக்கு பிறகு வீட்டில் நடந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே இருந்தேன் ,  மாடி படிக்கட்டில் போய் அமர்ந்து , என் நாய் குட்டி இருந்திருந்தால் இங்கே அதற்க்கு என் சாப்பாடில் பாதியை  வைத்திருப்பேன் எங்கே போனது அது ... என்னை விட்டு ... சாப்பிட்ட சாப்பாடில் பாதி சிதறி விழுந்தன படிகட்டின் கீழே உள்ள அறையில்....


பயணம் தொடரும் ....

6 கருத்துகள்:

  1. சின்ன வயசுல இதே மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கு. நாய்க்கு பதிலா பூனை. சிறு வயதுப்பருவம் அதிக நேரம் பூனைகளுடனே கழிந்தது.

    பதிலளிநீக்கு
  2. நம் இளமை பருவத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும். அதை ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கும் போது நெஞ்சில் நிழலாடுகிறது அன்றைய நினைவுகள். அந்த வகையில் எழுதிய இந்த கட்டுரை சிறப்பாகவே இருக்கிறது.என்ன நண்பரே நீங்களும் தொடர் கதையா??

    பதிலளிநீக்கு
  3. Nandri thiru. Jeevan ponni , naan naykku paal uddrinen , neenkal punaikku udrineerkala ?

    பதிலளிநீக்கு
  4. Nandri thiru .viduthalai veera , ithu ontrum thodar kathai illai nanbare , namathu payam thodarum entru than pottullen....

    பதிலளிநீக்கு
  5. nalla padhivu. ennai thirumbi parka vaithu vittergal.enakkum naikutty,poonaikutty, kurivi ,mazhaiyil kooraiyil irundhu vizundha kan thirakaadha kuruvi.eli, ellame njabagam varudhu.mmmmm chinna pillaiyagave irundhirukkalam.

    பதிலளிநீக்கு