செவ்வாய், மார்ச் 30, 2010

முதல் காதல் ( பாகம் 2 ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..




அவளின் மீதான காதல் கூடிக்கொண்டே செல்ல , எங்க வீட்டில் வைக்கும் fair &Lovely   அதிகமாக காலியாக ஆரம்பித்தது , சில முறை இப்படி நடந்து இருக்கிறது , என் அம்மா என்னிடம் கேட்ட கேள்வி இது ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே பெரிய பாக்கெட் fair &Lovelyவாங்கிட்டு வந்தேன் அதுக்குள்ளே காலி பண்ணிடியா     என் மனசுக்குள் நான் பேசிக்கொள்வேன் " உங்களை யாரு என்னை கருப்ப பெத்துக  சொன்னது " ஒரு நாளைக்கு ஒரு முறை போட்ட பரவா  இல்லை , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போட்ட இப்படித்தான் ஆகும் , அதே சமயம் என் அப்பாவின் குரல் வரும் எங்க இங்கே நான் சேவிங் பண்ண வச்சுருந்த ப்ளைட ஒன்னையும் காணோம் , அதுவும் அடியேனே , மிசை வளரனுமா இல்லையா , செய்யிற தொழில்ல ஒரு பக்தி இருக்கனுமா இல்லையா , சேவிங் மெசின் இல்லாம வெறும் ப்ளைட மட்டும் வச்சு இல்லாத மிசைய சேவிங் பண்ணி கொண்டு  இருந்தேன் , இது எப்புடியோ எங்க அப்பா பாத்துட்டு ஒரு நாள் என்கிட்ட வந்து எதோ கிப்ட் மாதிரி தந்தாங்க அத நான் தொறந்து பார்த்தேன் , நான் அப்புடியே சாக் ஆகிட்டேன் , உள்ள சேவிங் மெசின் இருந்தது , உனக்கு வேண்டும் என்றால்  தனிய வச்சுக்கோ என்னோட ப்ளைட காலி  பண்ணாதப்பா   அப்புடின்னு சொல்லிடு போய்டாங்க , வீட்ல அசிங்கம் மேல அசிங்கம் பட்டுகிட்டே இருந்தாலும் அவளின் நினைவு மட்டும் என்னை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு பொய் விடும் , அவளும் நானும் மட்டும் வாழும் அந்த அதிசய உலகம் .

கலையில் ஆசை ஆசையாய்  எல  ஆரம்பித்தேன் , அவளை பள்ளியில் பாப்போம் என்ற சந்தோசம் மனசு முழுவதும் , அதே 8 :30 மணிக்கு அவ வருவாள் என்று  காத்துகொண்டு இருப்பேன் , அன்னைக்கு 9 : 00  ஆகிருச்சு அவ வரவே இல்ல , ஒன்பது மணிக்கு பள்ளி ஆரம்பம் ஆகி விடும் , சரி பள்ளிக்கு பள்ளிக்கு போகம வீட்டுக்கு திரும்பலாம்னு நினைச்ச வீட்டுக்கு பொய் அந்த பக்கிய " ஏன் பள்ளிக்கூடம் போகல , உனக்கு என்ன ஆச்சு ?" அப்புடி இப்புடின்னு கேள்வி கேட்டே என்ன கொன்னுருங்க , லெட்ட அனாலும் பரவ இல்ல பள்ளிக்கே போகலாம்னு போனேன் prayer போய்கிட்டு இருந்தது , ஏன் வகுப்புக்கு பின்னல் ஒரு சுவர் இருக்கிறது நாங்க லெட்ட வந்த அதுல ஏறி குதுச்சு வகுப்புக்கு போவோம் , அப்போது ஏன் நண்பன் சொல்லித்தான் தெரியும் அவளின் அப்பா வெளிநாடில் இருந்து வந்ததால் அவள் பள்ளிக்கே வரவில்லைன்னு , இன்னைக்கு பொழுது போகாதே என நொந்து கிட்டு , நாளை எப்போது வரும் என காத்திருந்தேன் , என் நண்பனிடம் அவளை பற்றியும்  அவளின் குடும்பம் பற்றியும் கேக்க சொல்லி இருந்தேன் , அவனும் சொன்னான் விசாரித்து , அந்த பொண்ணு ரொம்ப வசதியாம்ட , முதல் பந்திலேயே  அட்டம் இழந்து விட்டேன் , அவளுக்கு கருப்புன சுத்தமாவே பிடிக்காதாம் " சூப்பர்" , பிடித்த ஹீரோ விஜய் , அட நம்ம ஆளு ,  மாவட்டத்துல 10  ல முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதே அவளின் இப்போதைய கொள்கையும் , "   10  ல பாசவது அகனும்கிறது நம்மளோட கொள்கை , அவங்க வீட்ல பணக்கார மாப்பிளைக்கு  தான் பொண்ணு கொடுப்பாங்களாம் "சரி..."
இவையெல்லாம் அவளின் மீதான காதலில் நான் வாய்த்த தன்னம்பிக்கையை அசைக்க ஆரம்பித்தது ,
அடுத்தநாள் அவளை பார்த்தேன் எப்படியும் இவ நமக்கு கிடைக்க மாட்டாள்  என்ற விரக்தியுடன் , அவள் மட்டும் எதையும் கண்டு கொள்ளாமல் சின்ன சின்ன பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து பறப்பது போல் பறந்து கொண்டு இருந்தால் சைக்கிளில் , ஒரு முறை என்னை திரும்பி பார்க்க மாட்டாளா  , ஒரு வார்த்தை பேச மாட்டாளா  என்று ஏங்கிய நாட்கள் அதிகம் , இதற்கிடையே  காலாண்டு தேர்வு வந்து விட்டது ,     தேர்வு விடுமுறையில் அவளை பார்க்க முடியாது என்ற கவலை வேறு , மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது , அவளை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் மனசு முழுவதும் , ஒருநாள் அவளை நினைத்து கொண்டே என் பேனா பேபரில் கிறுக்கிய வரிகள் இவை ,
"இமைகள் எனும் கேமராவால் படம் பிடித்து 
கண்கள் எனும் காந்தத்தால் என்னை கவர்ந்து இழுத்து 
பாசம் எனும் படைவீறாக்கள் கொண்டு என்னை சிறை பிடித்து 
இதயம் எனும் இருட்டறையில் அடைத்தவளே "
எழுதி முடித்து விட்டு பார்த்த பொது ஒரு கவிதை மாதிரி இருந்தது , என் வாழ்வில் நான் எழுதிய முதல் கவிதை இது ,
பள்ளி முடிந்து சைக்கில் எடுத்து கொண்டு வெளியே வந்தேன் , அவளை மிக அருகில் பார்த்தேன் ரெம்ப அழகா இருந்த கன்னத்தில் சின்னதா அழகா ரெண்டு பரு இருந்தது , பரு வந்த எல்லாருக்கும் அசிங்கம இருக்கும் அனா அவளுக்கு மட்டும் அழகா இருந்தது , வீட்டுக்கு சித்திட சொன்னேன் ஒரு பொண்ண எனக்கு பிடித்து  இருக்கு , என்ன அந்த பொண்ணு உங்களை மாதிரி இருக்குனு "அள்ளி விட்டேன் " அவங்களும் அப்படியப்பா , ரெண்டு பாரு இருக்கு அவளுக்கு எவளவு அழகா இருக்கு தெரியுமா , அவங்க சொன்னது அந்த பொண்ண யாரோ நல்ல பக்குரங்கனு அர்த்தம் அப்புடின நம்ம பாசைல (சைட் அடிக்கிறது  ) அர்த்தம் , அது நான் தான் எனக்கு நல்ல தெரியும் , என் எனக்கு பரு வரலை , உன்னை யாரும் பாக்கள , அப்படிய , சாமி கிட்ட வேண்டிகிட்டேன் சாமி சாமி வேகமா எனக்கும் பரு வரணும் பரு வந்த அவ என்னை பாக்குறத அர்த்தம் .... பரு வரவே இல்ல ...

அன்று நல்ல மலை எல்லோரும் கலையில் பள்ளிக்கு போய்கொண்டு இருந்தாங்க , நானும் போனேன் , மலை என்பதால் பள்ளியில் விடுமுறைன்னு சொல்லிடாங்க , எனக்கு முன்னாடியே பள்ளிக்கு போன என்னடா நாண்பர்கள் எல்லாம் பள்ளி விடுமுறை டா பள்ளிக்கு போகாதே னு சொன்னாக நான் அப்புடி இருந்தும் பள்ளிக்கு போனேன் கொட்டுற மலையில் , இன்னைக்கு விடுமுறை என்பதால் அவளை பார்க்க முடியாது ஒரு முறையாவது அவளை பார்க்க வேண்டும் என்று சைக்கிளில் வேகமாக சென்றேன் ....
பயணம் தொடரும் ...

4 கருத்துகள்:

  1. மனதை மீண்டும்...கடந்த காலத்திற்கு கொண்டு செல்கிறது....உனது கதை...........வாழ்த்துக்கள் தம்பி!

    பதிலளிநீக்கு
  2. தம்பி நீ ஒரு கருப்பு வைரம், மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காத பக்கிகளுக்கு மத்தியில் காதலுக்காக மழையிலும் பள்ளிக்கு சென்றது நல்லா இருக்குது. மழை நேரத்தில் தவறி விழுந்த சூடான மசால் வடையை ஊதி ஊதி தின்பது போல் எழுத்துப் பிழைகளையும் மீறி நீ ஜெயிக்கிறாயடா!!!! ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக . . . . . வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. thank you dhevan anna, thank you jerald anna, i haven't check after written this articles , after wards i will care spelling mistakes , thank you....

    பதிலளிநீக்கு
  4. Siva.. paru vara vendikitiyae, nallaa padipu varanumnu vendikodaa.. :P Jus kidding.. Athu oru azhagiya Nilaa Kaalam da..

    பதிலளிநீக்கு