புதன், மார்ச் 24, 2010

பயணம்...!

எதையோ வேண்டி (பணமோ, பதவியோ, படிப்போ)  தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வில் முட்களையும் புதர்களையும் தண்டி நம் பதங்கள் பயணிக்கும் வேளையில் சில நல்ல இதயங்களும் நம்முடனே பயணிக்கும் காலத்தின் கோலமாய் நம் நல்ல மனிதர்களை பிரிய நேர்த போதும் நாம் மனம் மட்டும் ஒருபோதும் அவர்களை மறப்பது இல்லை...

அப்படி என் சிறு வயதில் என் இதயத்தில் வாழ்த்த என் தோழி பற்றிய பதிவு இது...

என் வீட்டுக்கு பக்கத்து வீடு அவளுடையது , அழகும் அன்பும் நிறைந்த என் தோழி , அவளவு நன்றாக படிக்க மாட்டாள் , அது தேவையற்றதும் கூட , நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் பக்கத்தில் இருப்போம் , என்னிடம் காசு இல்லாத நேரத்தில் அவளிடம் இருந்து காசு வாங்கிய இல்லை இல்லை அப்பியது போல் யாபகம் , பள்ளி முடிந்து இருவரும் ஒன்றாகவே வீட்டிற்கு செல்வோம் , மழைக்காலங்களில்  ஆட்டு மந்தைகளை காட்டி அது என்ன என்று கேட்பாள் நானோ அவை சிங்கம் என்பேன் கரப்பான் பூச்சியை பார்த்தாலே ஓடி வந்து என்னை காட்டி கொண்டு கண்களை மோடிக்கொள்வாள் சிங்கம் என்றால் சொல்லவே வேண்டாம் , என் கைகளை பிடித்து " என்னை எப்படியாவது இந்த சிங்கங்களிடம் இருந்து காப்பாற்று  நானும் ஒரு ஹீரோ போல கவலை படாதே உன்னை பத்திரமாக அழைத்து செல்கிறேன் என்பேன்" துரத்தில் வரும் ஆட்டுக்கும் சிங்கத்திற்கும்  வித்தியாசம் தெரியவில்லை என்பதா இல்லை நான் சொன்னதால் ஆடும் சிங்கமானதா என்று எனக்கு தெரிய வில்லை,
நான் ஆண் அவள் பெண் என்ற வேறுபாடின்றி ஓடிய வாழ்கை எங்களுக்கு நாளுக்கு நாள் வயது என்ற ஒன்றையும் தந்தது , சில முறை அவள் கேட்கும் கேள்வி இது "என்னை உனக்கு பிடிக்குமா நான் ஆம் என்பேன் உங்கள் அம்மாவை விட என்னை பிடிக்குமா இருவரையும் பிடிக்கும் என்பேன் உடனே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் அம்மாவை விட என்பாள்" அவளது சிரிப்பு சத்தம் என் காதுகளில் இன்னமும் கேட்டு கொண்டே இருக்கிறது , நான் படிப்பதற்காக வெளியூர் சென்று விட்டேன்
அதன் பிறகு எப்போதாவது சந்திப்பேன் , சில வார்த்தைகளுடன் நிருதிக்கொள்வாள்,  சில நாட்களில் அவள் திருமண மாகி கணவனுடன் சென்று விட்டாள், அதன் பிறகு பார்க்கவே இல்லை 10 வருடங்களுக்கு  பின் சென்ற வருடம் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் என்னை பார்ப்பதை கவனித்தேன் அவள் என் தோழி தான் , என்னுடன் விளையாடி என்னை சுற்றி வந்தவள் , என்னுடன் ஒரு வார்த்தை கூட  பேச வில்லை , அவள் போக வேண்டிய பேருந்து வந்தது , பேருந்தில் ஏறி ஒரு பார்வை பார்த்தல் அந்த பார்வையின் அர்த்தம் நன்றாக  இருக்கிறாயா  என்று புரிந்து கொண்டேன் , ஒரு புன்னகை செய்து தனது குழந்தையின் முகத்தை என்னை பார்க்கும் படி திருப்பினாள் , இது எனது குழந்தை தோழனே எனது வாழ்கை சந்தோசமா போய்கிறது  என்பதற்கு அடையாளமாய் புன்னகையை  விட்டு சென்றால் , அவள் சிந்திய புன்னகையை எடுத்துக்கொண்டு திரும்பினேன்....







1 கருத்து:

  1. தம்பி உனக்குள்ளே...இப்படி ஒரு .....கதையா....! கொஞ்சம் நெஞ்சம் கனத்தாலும்.....சுகமான ஒரு அனுபவம்தானாப்பா.....! ரொம்ம அழாக இருக்கு....உன் பதிவு... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு